PGTRB வரலாறு சிறு தேர்வு - 08

PGTRB வரலாறு சிறு தேர்வு - 08

📝📝📝📝📝📝📝

யூனிட் : 1

தலைப்பு : சமண சமயம்

கேள்விகளின் எண்ணிக்கை : 25

🌺🌺🌺🌺🌺🌺🌺
வினாத்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH
🌺🌺🌺🌺🌺🌺🌺

176. ஆரம்பகாலத்தில் புத்தமதத்தின் ஒரு பிரிவாக சமண சமயம் கருதப்பட காரணம்

A. கர்மா
B. அஹிம்சை
C. நிர்வாணம்
D. கர்மா மற்றும் அஹிம்சை



177. இந்தியாவின் முதல் சக்கரவர்த்தி

A. சந்திர குப்தன்
B. அசோகா
C. ரிஷபா
D. பாரதா



178. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர்

A.  சித்தார்த்தர்
B. பார்சுவநாதர்
C. மகாவீரர்
D.ரிஷபதேவர்



179. சமணத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்?

A. ஜனகன்
B. மகாவீரர்
C. நாரவர்மன்
D. பார்சுவநாதர்


180. சமண சமயத்தை தோற்றுவித்தவராக பேராசிரியர் ஜாகோபி யாரை குறிப்பிடுகிறார்?

A. வர்த்தமானர்
B. ரிஷபதேவர்
C. மகாவீரர்
D. பார்சுவநாதர்


181. தனது கல்பசூத்திரத்தில் பத்ரபாகு, பார்சுவநாதர் எந்த வர்ணத்தை சார்ந்தவராக குறிப்பிடுகிறார்.

A. பிராமணர்
B. ஷத்திரியர்
C. வைசியர்
D.சூத்திரர்


182. பார்சுவநாதர் மரணமடைந்ததாக கருதப்படும் பகுதி

A. Mt. K2
B. Mt. Everest
C. Mt. Abu
D. Mt. Sammeta


183. கேவலம் என்ற உயர் அறிவை பார்சுவநாதர் எத்தனை நாள் கடும் தவம் இருந்து அடைந்தார்

A. 87
B. 83
C. 93
D. 97


184. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்

A. மகாவீரர்
B. ரிஷபர்
C. பார்சுவநாதர்
D. ஆனந்தர்


185. மகாவீரரின் தந்தையான சித்தார்த்தர் குறிப்பாக  எந்த ஷத்திரிய குலத்தை சார்ந்தவர்

A. நீவி
B. ஆதிவாசா
C.ஜாந்திரிகா
D. குலம்காரா



186. சித்தார்த்தரின் தாயான திரிசலாவின் சகோதரர் பெயர்

A. சேதகா
B. சேகுவாரா
C. சோமசுந்தரா
D. சேக்கிலியா


187. வர்த்தமானர் பிறந்தநாளை முன்னிட்டு வரிகள், கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறும் நூல்

A. ஜாதகக் கதைகள்
B. சதபாத பிராமணம்
C. கல்பசூத்திரம்
D. மேற்கண்ட அனைத்தும்


188. மகாவீரரின் மரணத்தை பற்றி பெளத்த நூல்கள் கூறும் தகவல்

A. புத்தருக்கு முன்னரே இறந்தார்
B. புத்தரின் மரணத்திற்கு பிறகு இறந்தார்
C. கொல்லப்பட்டார்.
D.மகாவீரர் சிறையில் மரணித்தார்



189. அனோஜா பிரயதர்சிகா என்பவர்

A. மகாவீரரின் சகோதரி மகள்
B. மகாவீரரின் மகள்
C. மகாவீரரின் முதல் சீடர்
D. A மற்றும்  C சரி


190.ஆச்சாருங்கசூத்திரா மகாவீரரை பற்றி கூறும் கருத்து

A. அவரது 12 ஆண்டுகள் காட்டிலேயே கழிந்தது
B. 12 ஆண்டுகள் தவமிருந்தார்
C.வீடு, ஆடையின்றி சுற்றினார்
D. தகவல் இல்லை


191. எந்த மரத்தடியில் வர்த்தமானர் "அர்ஹதா" ஆனார்

A. சால்
B. பீப்பள்
C. நீம்
D. பைன்


192. மகாவீரர் கேவல ஞானத்தை அடைந்த இடத்துக்கு சொந்தக்காரர்

A. நிகந்தா
B. நிகயா
C. ரிதுசம்ஹாரா
D. சமகா


193. மகாவீரர் ஜீனராக மாறிய கிராமம்

A. குந்த கிராமம்
B. வைசாலி
C. ஜிரிம்பிகா
D. சித்தசிலா


194. சமணத்தின் ஐந்தாவது விரதமான ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமல் இருத்தலை ஐந்து விரதங்களில் இணைத்தவர்

A. ஆதியோகி
B. ரிஷபதேவர்
C. பார்சுவநாத்
D. மகாவீரர்


195. மகாவீரருடன் ஆறு ஆண்டு தியானத்தில் ஈடுபட்ட கோசலா தோற்றுவித்த சமயப்பிரிவு

A. சித்த சீலம்
B. செளராஷ்டிரம்
C. சாத்வீகம்
D. அஜிவீகம்


196. மகாவீரரின் போதனைகளை கடுமையாக விமர்சித்தவர்

A. கோசலா
B. ஜாவாலி
C. மஜ்ஜிம்மா
D. அஜிலேகா


197. வர்த்தமானர் பிறந்த இடம்

A. கபிலவஸ்து
B. பாடலிபுத்திரம்
C. குண்டக்கிராமம்
D. குசுமபுரம்


198. ஆறாம் நூற்றாண்டில் சமண சமயத்தின் எழுச்சிக்கு முதன்மை  காரணம்

A. சமய அமைதியின்மை
B. சமூக அமைதியின்மை
C. பொருளாதார அமைதியின்மை
D. மேற்கண்ட அனைத்தும்


199. மகாவீரர் உயிர்நீத்த இடம்

A. பாவா
B. குசிநகரம்
C. கபிலவஸ்து
D. ராஜகிரகம்


200. வட இந்தியாவில் இருந்த சமண துறவிகளுக்கு தலைமை ஏற்றவர்

A. கங்கர்
B. பத்திரபாகு
C. ஸ்தூலபாகு
D. கடம்பர்

கேள்விகளுக்கான விடைகள்

176  D
177. D
178. D
179. D
180. D
181. B
182. D
183. B
184. A
185. C
186. A
187. C
188. A
189. B
190. C
191. A
192. D
193. C
194. D
195. D
196. A
197. C
198. A
199. A
200. C


Comments

Post a Comment

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்