Posts

Showing posts from October, 2017
Image
TET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்குகள்:- TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு தமிழக அரசின் கருணைப் பார்வைபட்டால் அனைத்து வழக்குகளுக்கும் முழு தீர்வுக்கு வாய்ப்பு. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது. இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை. ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர
Image
TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு தயாராவது எப்படி? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ன பாடத்திட்டம்? கேள்வித்தாள் எப்படி அமையும்? எந்த பாடப்பகுதிகளை படிக்க வேண்டும்? அதில் இருந்து கேள்விகள் எப்படி கேட்கப்படலாம்? தேர்வில் கேள்விகள் எப்படி அமைந்திருக்கும்? என்பது உள்பட உங்களது பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த மாதிரி வினா விடை பகுதி அமைந்திருக்கும். முதலில் நாம் எந்த தேர்விற்கு தயார் ஆனாலும் அத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் தேர்வுமுறையையும் அறிந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான பாடத்திட்டம் பற்றிய விவரம் பின்வருமாறு: 1. எழுத்துத்தேர்வு (கொள்குறி வகை) = 300 மதிப்பெண்கள் இத்தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களும் திறனறி தேர்வில் 20 வினாக்களும் கிராம நிர்வாகம் தொடர்பாக 25 வினாக்களும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 கேள்விகளும் ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்

Image
கிராம நிர்வாக அலுவலகர்களின் பணிகள் மற்றும் கடமைகள் பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலகர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581. நாள்: 3-4-1987-இல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள். 1.கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி பார்த்தல் 2.நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல் 3.சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல் 4.பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல். 5.பிறப்பு, இறப்புப் பத்வேடுகளைப் பராமரித்தல் தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும்போது உதவ
செய்முறை தேர்வு எப்போது? அறிவிப்பின்றி குழப்பம் பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2தேர்வை போல், பிளஸ் 2 வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டு உள்ளது. கருத்தியல் என்ற தியரியும், செய்முறையும் உள்ள பாடங்களில், 100 மதிப்பெண்களில், 20 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தப்படும், பிளஸ் ௨ மற்றும் ௧௦ம் வகுப்புக்கு, செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறை தேர்வு எப்போது நடக்கும்; அதன் நடைமுறைகள் என்ன என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ்1 வகுப்புக்கு, இந்த ஆண்டிலேயே செய்முறை தேர்வு உண்டா அல்லது பிளஸ் 2வில் தான் நடத்தப்படுமா என்றும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து, பள்ளிக்கல்வித் த
வேலைவாய்ப்பு பதிவை 2011 ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு நவம்பர் 21-க்குள் புதுப்பிக்கலாம் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது https://tnvelaivaaippu.gov.in/Empower/
புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய கல்விக் கொள்கை, டிசம்பரில் வெளியிடப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சத்யபால் சிங் கூறியுள்ளார். கேரள மாநிலத் தலைநகர், திருவனந்தபுரத்தில் நேற்று, தேசிய கல்வியாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, அமைச்சர், சத்யபால் சிங் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பின், பெரும்பாலான கல்வியாளர்கள், துரதிருஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஆட்சி கால மனப்பான்மையை பிரதி பலிக்கும் வகையிலான கல்விக் கொள்கையை பின்பற்றினர்; இந்திய கலாசாரத்தை புறக்கணித்து, கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. பிரிட்டிஷ் கால மனப்பான்மையிலிருந்து, கல்வியை விடுவிப்பது, அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது. கல்வித் துறையில், உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், நாம் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கேற்ப, ஆரம்ப நிலையில், கல்வித் தரம் உயர்த்துதல், உயர்