Posts

Showing posts from September, 2016

CPS அக்கவுண்டில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்தீர்களா?

CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய* www.cps.tn.gov.in/public/index.php *Enter CPS no* *password is date of birth(dd/mm/yyyy)* *And open your account*  *input your mobile number*

கேட் தேர்வை எழுதுறிங்களா

கேட் 2017 தேர்வை எழுதுபவர்களுக்கு அரசுப் பணிகள் ஏராளமாக காத்திருக்கிறது. கேட் தேர்வு எழுதினால் ரூ.11 லட்சம் வரை சம்பளம். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி அக்டோபர் 4. மத்திய அரசு நிறுவனங்களில் சேர விரும்புபவர்களுக்கு கேட் 2017 மூலம் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. கேட் 2017 தேர்வு அடிப்படையில், மத்திய அரசு நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களுக்கு வருடம் ரூ.11 லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள். நிறுவனங்களின் பட்டியல்?. 1. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் ரூ.11 லட்சம் சம்பளத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 2. என்.டி.பி.சி நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணி 3. ஆயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி 4. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணி 5. என்.பி.சி.சி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சி 6. நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷனில் கிராஜுவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி 7. பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பயிற்சி 8. பவர்கிரிட் கார்ப்ரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி 9. கெயில

மாத்தறாங்க.... பாட புத்தக அளவை மாத்தறாங்க....

பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!! பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது. பிளஸ் 2 பாட புத்தகம், ஏ5 அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏ4 அளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பழைய புத்தகத்தில் இருந்த வரிகள், அளவு மாற்றி அச்சிடப்பட்ட புத்தகத்தில் மாறாமல் வந்துள்ளதா? அல்லது மாற்றம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. ஈரோட்டில் கணக்குப்பதிவியல், வணிகவியல், உயிரி-வேதியியல், ஆங்கில பாட புத்தகங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. ஒரு பாட பிரிவுக்கு மூன்று குழு வீதம், பாட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழுவில் அரசு, மெட்ரிக்., பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி, சென்னையிலும் நடக்கும் இந்தப் பணி, அக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்று, கல்வித்துறை அதிகார

Election duty போறீங்களா!!! இதை படிச்சுட்டு போங்க

வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் விபரம் !!! ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் விபரம்👇👇 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:       *🌹பகுதி - I🌹* 1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)                                              *🌹பகுதி - II🌹*                              (4 வகை படிவங்கள்: வெள்ளை நிற கவர்கள்) (கீழ் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து வெள்ளை நிற கவரில் வைக்கவும். ஒட்டக் கூடாது. மண்டல அலுவலர் சரி பார்த்த பின்பு தான் ஒட்ட வேண்டும்.) 1. படிவம் 17 C  (3 பிரதிகள் தயார் செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் இருக்கும் அனைத்து முகவர்களுக்கும் ஒரு நகல் தர வேண்டும். மிக முக்கியமான படிவம்.) 2. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உறுதி மொழி படிவம் - 3 வாக்

FLASH NEWS

*FLASH NEWS* *Minority Scholarship* Last date of Registration/Submission has been extended upto 31 October 2016. www.scholarship.gov.in

ஆன் லைன் படிப்பு அனுமதி கிடைத்தது

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி 'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.ஜி.சி., வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அனைத்து பல்கலைகளும், ஆன்லைன் வழி படிப்புகளை துவங்கலாம்; அதற்கு முன், படிப்பின் விபரத்தை தாக்கல் செய்து, அனுமதி பெற வேண்டும். பல்கலை இணையதளத்தில், இந்த படிப்பு விபரங்களை வெளியிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

பணி நியமனம் இல்லை

பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை; யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு குறித்த தகவல்களை, https://www.cwcjobs.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இனி லைனில் நிற்க வேண்டாம்

அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இந்த ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம். பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்க

ஆசிரியர்களின் அச்சம் தவிருமா?

தினமணியின் தலையங்கம்... ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்.. ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;; முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது. தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு

CPS பற்றிய செய்தி

▶CPS News: *முதலில் Cps ல் சேர்ந்தவர்களுக்கு Cps Number Allotment Letter தந்திருக்கமாட்டார்கள். அவர்கள் தற்போது Cps கணக்கில் login செய்து   Allotment letter  என்பதை click செய்து download செய்துகொள்ளுங்கள். உங்கள் கணக்குத்தாளையும் download செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்*.. *இதனை கிளிக் செய்து login செய்யுங்கள்.*  http://cps.tn.gov.in/public/

விண்ணப்பம் விநியோகம்

தமிழகம்முழுவதும் உள்ளாட்சிதேர்தல் பணியில்ஈடுபடும்ஆசிரியர்களுக்குஅதற்கான விண்ணப்பங்கள்விநியோகிக்கப்பட்டுள்ளது.அவற்றை பூர்த்தி செய்துபிடிஓக்களிடம் சமர்ப்பிக்கமாநில தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல்பணிகளில் வழக்கம்போல்அரசுபள்ளி ஆசிரியர்கள்அமர்த்தப்படஉள்ளனர்.அவர்கள் தேர்தல்பணியில்பங்கேற்க வசதியாகமுதன்மைகல்விஅலுவலகத்தில் இருந்துஅந்தந்தபள்ளிகளுக்குவிண்ணப்பங்கள்அனுப்பப்பட்டு உள்ளது.அவற்றை அந்தந்தபள்ளிஆசிரியர்கள் பெற்று பூர்த்திசெய்துதலைமையாசிரியரிடம்ஒப்படைக்கவேண்டும்.அவற்றைதலைமையாசிரியர்சரிபார்த்துஆசிரியர் பெயர்,வசிக்கும் இடம்உள்ளிட்ட பிறவிவரங்களைஇணைத்துஅந்தந்தபிடிஓஅலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்என்று மாநிலதேர்தல்ஆணையம்உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில்ஈடுபடும் அரசுபள்ளிஆசிரியர்களுக்கானவிண்ணப்பங்கள் அனுப்பும்பணி தற்போதுதொடங்கியுள்ளது. மேலும்விவரங்களை முதன்மை கல்விஅலுவலகவெப்சைட்டில்பார்க்கலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிக்கை

*BHARATHIDASAN UNIVERSITY* Centre for Distance Education B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years) *Application form will be  issued from 26.09.2016 *Eligibility - 10+2+3 or 11+1+3 *Cost of Application - Rs.500/- *Fees - Rs.25,000 Per Annum *Last date for receipt and filled-in application forms - 25.10.2016 www.bdu.ac.in

TNPSC தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்

TNPSC & VAO தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்.... TNPSC VAO தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள். குரூப் -1 முதல் நிலை, குரூப் -2 முதல் நிலை, குரூப் -4 தேர்வுகளுக்கு என்ன புத்தகங்கள் படிக்கலாம் ...  S.No SUBJECTS Books for Group I Prelims,                       Group II ,Group IV & VAO   Group I Mains   1 இந்திய வரலாறு 1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10 2. 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு 3.கனி அகாடமியின் Class Notes 1.Indian Freedom struggle                           K.Venkatesan 2. TamilNadu History-                               J. Dharmarajan  2 இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10. 11 & 12 Selected Portions 2.கனி அகாடமியின் Class Notes 3.பாக்யா இந்திய அரசியலமைப்பு 1.INDIAN POLITY For CSE                              M.LAXMIKANTH 2. இந்திய அரசமைப்பு          பேரா.ஆ.சந்திரசேகரன்   3 புவியியல் 1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10 2.கனி அகாடமியின் Class Notes 3.Oxford/orient Black Swan School Atlas பாக்யா புவியியல் 4 இந்திய பொருளாதாரம

வேலை வாய்ப்பு

உணவுப்பொருள் சேமிப்பு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? விரைந்திடுங்கள் மத்திய அரசு நிறுவனமான மத்திய உணவுப்பொருள் சேமிப்பு கழகத்தில் (Central Warehousing Corporation) நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி, உதவி பொறியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். CWC/1-Manpower/DR/Rectt/2016/02 மொத்த காலியிடங்கள்: 644 பதவி: Management Trainee  (General) - 37 பதவி: Management Trainee (Technical) - 06 பதவி: Assistant Engineer (Civil) - 15 பதவி: Accounts - 18 பதவி: Superintendent (General) - 130 பதவி: Junior Superintendent - 130 பதவி: Junior Technical Assistant - 300 பதவி: Stenographer - 08 தகுதி: B.Com., BA, BE, B.Tech. பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தேர்வு மையங்

மதிய செய்திகள்

📡💥மதிய செய்திகள் 📡💥           📡💥29\09\16📡💥 📡📡📡📡📡📡📡📡📡📡📡 💥📡📡💥📡💥📡💥📡💥📡 💥💥💥💥💥💥💥💥💥💥💥 💥விலை பேசப்படும் நீதி: தில்லியில் லஞ்சம் வாங்கிய நீதிபதியை கைது செய்தது சிபிஐ புது தில்லி: தில்லியில் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதியை சிபிஐ கைது செய்துள்ளது. தில்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, ரூ.4 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார். மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 📡அணு ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் : தனிமைப்படுத்துப்படுவதால் விரக்தியில் பாக்., மிரட்டல் இஸ்லாமாபாத்: சார்க் உச்சிமாநாட்டை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், போர் வந்தால் இந்தியா மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 📡உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 42,907 பேர் வேட்பு மனு தாக்கல் சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு க

அக்டோபர் 4 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்

TNPSC:நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு. நூலகர்-உதவி நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு பணிகளில் நூலகர்-உதவி நூலகர் பதவிகளுக்கான 29 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.இந்தப் பதவிகளுக்கான நேர்காணலுக்கு 64 விண்ணப்பதாரர்கள் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் வரும் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 4, 5 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கான அழைப்பாணையை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான

தீபாவளிக்கு சிக்கு புக்கு ரயிலு

தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடங்குகிறது வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை (30-ம் தேதி) தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82605) எழும்பூர் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06006) மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்

திருத்திய உண்மைத்தன்மை தன்மை வரைவோலை

திருத்திய உண்மைத்தன்மை வரைவோலை ! உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு) உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/- 2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/- 3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/- 4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/- 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/- 6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/- 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/- 8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/- 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/- 11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- ரூ.500/- 12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/- 13. Tamilnau Teacher Education University ரூ.350/- 14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275/-

தேர்தல் பயிற்சி வகுப்பு

📢📢📢📢📢📢📢📢 *ELECTION NEWS_* *_காஞ்சி மாவட்டம்_* *முதல் கட்ட  உள்ளாட்சித் தேர்தல் 17.10.16* ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி விவரம். .. 02.10.16 ...முதல்  பயிற்சி 07.10.16.....2வது பயிற்சி 13.10.16....3வது பயிற்சி                             *இரண்டாம் கட்ட தேர்தல் 19.10.2016* உள்ளாட்சித் தேர்தல். .. ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி விவரம். .. 05.10.16 ...முதல்  பயிற்சி 08.10.16.....2வது பயிற்சி 14.10.16....3வது பயிற்சி தேதிகளில் நடைபெறும். 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மனுநீதிநாள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்த தடை

மனுநீதி நாள், மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்த தடை ! தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளன. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை நடத்தியது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி, அரசு நிதியில் கட்டப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் பணிக்காக பயன்படுத்தக் கூடாது. கட்சிகள் அமைப்பு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. தேர்தல் முடியும் வரை மனுநீதி நாள், மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகியன நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி உள்ளது.

வங்கி விடுமுறை

*Consecutive bank holidays in Oct. 2016* 02 oct 16 Sunday 08 Oct 16 - 2nd Saturday 09 Oct 16 - Sunday 10 Oct 16 - Ayudha Pooja 11 Oct 16 - Vijayadasami 12 Oct 16 - Muharram. 15 Oct 16 - Valmiki Jayanti 16 Oct 16 - Sunday 22 oct 16 - 4 th Saturday 23 oct 16- Sunday 29 Oct 16 - Naraka Chaturdashu 30 Oct 16 - Sunday 31 Oct 16 - Balipadyami Pls take note and plan your banking & cash transactions well in advance. Half a month is on leave 😵

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவது எப்படி ? தயாராவது எப்படி ?  கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும். தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற படியுங்கள் இதனை...

போட்டித் தேர்வுகள் - வெற்றி பெறுவது எப்படி? ‘நம் எண்ணங்களே செயல்களை தீர்மானிப்பவை‘ முதலில் நம் எண்ணங்களை ஏதாவது ஒன்றின் மீது செலுத்துவது முக்கியமான ஒன்று தேர்ந்தெடுத்த பாதையின் கடினத்தன்மையை உணர்வது இரண்டாவது விடயம் கடினத்தன்மைக்கு ஏற்ப உழைப்பது மூன்றாவது விடயம். இந்த மூன்று விடயங்களையும் நாம் செய்யும் போது கூட நமக்கு எழும் குழப்பங்களும் பிரட்சனைகளும் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் எதை படிப்பது என்பதும் எப்படி படிப்பது என்பதும். எதை படிக்க வேண்டும் என்பதற்கு பதில் சொல்வது போட்டித் தேர்வுகளின் முந்தைய வினாத்தாள்களாகதான் அமையும். பொதுவாக TNPSC போன்ற மாநில அளவிலான தேர்வுகளுக்கு தயாராவதற்கு பாடபுத்தகங்களை தவிர வேறு எந்த துணையும் தேவை கிடையாது. அதுவும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாட புத்தகங்களையும் புரிந்து படித்தாலே போதும் 75 சதவிகித மதிப்பெண்களை அழகாக பெற்று விடலாம். TET போன்ற தேர்வுகளும் TNPSC தேர்வுகளை ஒத்தவையே அவற்றிற்கும் பாட நூல்களை தவிர மற்ற சந்தையில் கிடைக்கும் குப்பைகளை தேடி கண்டுபிடித்து வாங்கி பயன்படுத்துவது நாமாகவே நம் திறமையை குறைவாக எடை

கட்டுரை எழுதும் கலை

இன்றைய போட்டி பரீட்சைகளில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவுகளில் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் தற்போது மொழித்திறனில் வரக்கூடிய கட்டுரை, சுருக்கம் போன்றவற்றில்  சிரமப்படுகின்றார்கள். இந்நிலையில் கட்டுரை ஒன்றை எவ்வாறு எழுதுவது என இன்று பார்க்கலாம். 01 கட்டுரை எழுதும் முறை மாணவர்களே! இப்பகுதியில் கட்டுரை எழுதும் முறை பற்றிக் காண்போம். ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன, அவர்தம் பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது,    தனித்திறன்.    அவ் எழுத்து,  கதையாகவோ,  கட்டுரையாகவோ வெளிப்படலாம். கட்டுரை எழுதும் திறன் பற்றி இங்குக் காண்போம். ‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.’ ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.’  உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.  ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம். 02 கட்டுரை அமைப்பு இனி,  கட்டுரையின் அமைப்பு எவ்வாறு இரு

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு

பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நேரு யுவகேந்திராவில் ஒருங்கிணைப்பாளர் பணி பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நேரு யுவகேந்திராவில் ஒருங்கிணைப்பாளர் பணி மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா ( Nehru Yuva Kendra)- வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ,  கணக்காளர் உள்ளிட்ட பணிகளுக்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  District Youth Co-ordinator - 09 சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 +  தர ஊதியம் ரூ. 5,400. தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம். பணி:  Accounts Clerk Cum Typist - 06 சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200 +  தர ஊதியம் ரூ. 2,400. தகுதி: பி.காம் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன்  2  வருட பணி அனுபவம். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு  30  வார்த்தைகளும் , ஹிந்தியில் நிமிடத்திற்கு  25 வார்த்தைகளும்  தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு:  35 க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார

காலாண்டு விடுமுறையும் போச்சு!

தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள் - காலாண்டு விடுமுறை 'கட்' ஊராட்சிகளில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு காலாண்டு விடுமுறை, 'கட்' ஆனது. உதவியாளர் நிலையில் உள்ளோரை ஊராட்சி வார்டு பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் பற்றாக்குறை உள்ளதால், அந்தந்த பகுதி ஆசிரியர்களை உதவி தேர்தல் அதிகாரியாக நியமித்தனர். மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு அக்.,2 வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டது. ஆனால், அக்., 3 வரை வேட்பு மனு பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்கூட்டியே நியமன ஆணை வழங்கிய போதிலும், திடீரென தேர்தல் தேதி அறிவித்ததால் விடுமுறைக்கு வெளியூர் சென்றோர் அவசர, அவசரமாக ஊராட்சிகளுக்கு வந்தனர். சில ஊராட்சிகளில் வேட்புமனு வாங்க சரியான இடவசதியும் இல்லை. வசதி இல்லாத இடங்களில் ஓட்டுச்சாவடி உள்ள பள்ளிகளில் அமர்ந்து வேட்புமனுக்களை வாங்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் அவர்கள்,' விடுமுறையு

முழு தகவல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர். சம்பள உச்சவரம்பு தளர்த்தப்படும். ஊழியர்கள் குறைந்தபட்சமாக ரூ.8400ம், அதிகபட்சமாக ரூ.16,800 ம் போனசாக பெறுவார்கள். இதன் மூலம் 3,67,887 ஊழியர்கள் பயன் பெறுவார்கள். மொத்தம் ரூ.476 கோடியே 71 லட்சம் போனசாக வழங்கப்பட உள்ளது

தீபாவளி போனசு!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு பதிவு செய்த நேரம்: 1 pm சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

CRC தேதி மாற்றம்

October CRC Date changed primary & Upper Primary CRC : 22.10.16 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்டோபர் குறுவளமையபயிற்சி நடைபெறும் நாள் மாற்றம், தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு குறுவளமையபயிற்சி 22/10/16 க்கு மாற்றம்.

நாளை ரிசல்ட்

பிளஸ் 2 துணை தேர்வு நாளை சான்றிதழ் பிளஸ் 2, உடனடி துணை தேர்வு எழுதியோருக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: ஜூனில் நடந்த, பிளஸ் 2, சிறப்பு துணைத்தேர்வை எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோருக்கு, நாளை ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சில பாடங்களில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதற்கான மதிப்பெண் சான்றிதழ் தரப்படும். தேர்வு எழுதிய பள்ளிகளில் சான்றிதழ்களை பெறலாம். இவ்வாறு அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.

EPIC Number தெரிந்து கொள்ள வழி

🙏🙏 உள்ளாட்சி தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வணக்கம்.🙏   🌺 ஊராட்சிக்கு தனி வரிசை எண், பாகம் எண் 🌺  சட்டமன்றத்திற்கு வேறு எண்  🌺  நமது ( EPIC No,    Part No, Serial No.) வாக்காளர் அடையாள அட்டை எண்,  தொகுதி எண், பாகம் எண்,                வரிசை எண்  ஆகியவை தேவைப்படும். 🌺தயார் நிலையில்     வைத்து கொள்ளவும்.                     🍁🎾🍁 🙏வாழ்க வளமுடன்🙏

தேர்தல்

முதல் கட்ட தேர்தல் - 17.10.2016 வேலூர் மாநகராட்சி. நகராட்சி - வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், அரக்கோணம். பேரூராட்சி - அம்மூர், கலவை, காவேரிபாக்கம், நெமிலி, பனப்பாக்கம், பென்னாத்தூர், சோளிங்கர், தக்கோலம், திமிரி, திருவலம், விளாபாக்கம். ஊராட்சி ஒன்றியங்கள் - அணைக்கட்டு, அரக்கோணம், ஆற்காடு, கணியம்பாடி, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வேலூர், வாலாஜா. மேற்கண்ட இடங்களில் தான் நாம் தேர்தல் பணிக்கு செல்ல உள்ளோம் 17.10.16 அன்று.

அனைவருக்கும் வணக்கம்

வணக்கம் TNTET & PGTRB முகநூல் குழுமத்தின் ஒரு அங்கமாக இந்த blog தொடங்கி உள்ளேன் . இதன் நோக்கம் வழிகாட்டுதல் மட்டுமே.