Posts

Showing posts from February, 2017

TET டிப்ஸ்.....

Image
TNTET 2017 - தேர்விற்கு எப்படி படிப்பது டிப்ஸ்! தேர்வர்கள் கேள்வியும் - பதிலும் இதற்கான பதில் : நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட புத்தகம்மட்டுமே.வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல் மிக அவசியம். உங்கள் வினாத்தாளில் இடம் பெறும் கேள்விகள் அனைத்தும் புத்தகம் தவிர வேறுஎங்கும் இல்லை. வினா முறை எப்படி இருக்கும்? பல லட்ச போட்டியளரின் சிந்தனையை சோதித்து திறன் மிக்க தேர்வரை தேர்வு செய்வதேநோக்கம்.எனவே கேள்விகள் அனைத்தும் மனத் திறனை சோதிக்கும் வகையிலே அமையும்.வினா நேரடி எளிய வினாவாக அமையாமல் மறைமுக கடின வினா அமைப்பிலே இடம் பெறும் எப்படி படித்தால் வெற்றி பெறலாம் ? * கடின உழைப்பு * தீவிர பயிற்சி * அன்றைய பாடபகுதியை அன்றே திருப்புதல் செய்தல் * தேவையற்ற குறிப்புகளை(material) பயன்படுத்தும் ஆசையை குறைக்கவும் * ஆழ்ந்து படித்தல், விரைவாக படித்தல் இரண்டும் ஒருங்கே செய்தல் அவசியம் * முழு புத்தக வாசிப்பு கட்டாயம் * இதுவே உங்களுக்கு கொடுக்க பட்ட கடைசி வாய்ப்பு . எக்காரணம் கொண்டும் சலிப்புகூடாது. * முயற்சி அளவை பொறுத்து வெற்றி தூரம் அ

TET வெயிட்டேஜ் மாற்ற பரிசீலனை

Image
ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

Image
மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம் போலி இவை மூன்று வகைப்படும்  முதற்போலி  இடைப்போலி  கடைப்போலி ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது முதற் போலி ஆகும். எடு மஞ்சு -மைஞ்சு என வருவது ம-மை ஆக மாறிவிட்டது இவ்வாறு முதல் எழுத்து மாறிவருவது முதற் போலிஆகும் ஒரு சொல்லின் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பதுஇடைபோலி ஆகும் எடு முரசு-முரைசு என மாறுபடுகிறது. கடை போலி என்பது இறுதி எழுத்து மாறுபட்டாலும் பொருளில் மாறுபாடு ஏற்படாதது இது கடை போலி ஆகும் எகா அறம்-அறன் இது போக முற்று போலி உள்ளது ஐந்து-அஞ்சு என அனைத்து எழுத்துக்கள் மாறினாலும் பொருள் மாறமல் வருவது முற்றுபோலி ஆகும் போலி என்பது ஒரு எழுத்து எழுத்து எங்கு மாறுபட்டாலும் அதன் பொருள் மாறாதது அகம் என்றால் உள்ளம் அகன்என்று திருவள்ளுவர் ஒரு குறளில் 7 ம் வகுப்பில் கூறியுள்ளார் அதுபோல முகம் என்பதற்கு முகம் என்று கூறியுள்ளார் பாருங்கள் இவ்வாறு பொருள் மாறாமல் கூறுவது போலி      பகுபதம் பகா பதம் பதம் சொல் மொழி கிளவி இவை அனைத்தும் ஒன்றை தான் கு

நீங்களும் ஆசிரியர் ஆகலாம்

Image
நன்றி: தினமலர்

தமிழ் எண்கள்

Image
தமிழ் எண்கள் 1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ,  9 - கூ, 10 - கo, 11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo 21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo 31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo, 41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo 51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo 61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo 71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo 81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo 91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 -

TET தேர்வுக்கு இப்படி படிங்க

Image
இப்படியும் படிக்கலாம் "50 நாளில் அரசு வேலை: 👍Tet paper 1 & 2  தேர்வு எழுதும் அனைவரும் செய்ய வேண்டியது... 1.பாடத்திட்டம் (Syllabus) 2.பாடத்தகவல்(Materials) 3.வழிகாட்டி ஆசான் (guide) 4.கற்பவர் (Learner) ஆகியவை தயார் செய்தால் 25% வெற்றி ... 👍*1 to 5 நாட்கள் : 5 days - 6ஆம் வகுப்பு *6 to 10 நாட்கள் : 5 days - 7 ஆம் வகுப்பு *11 To 15 நாட்கள்: 5 days - 8ஆம் வகுப்பு *16 to 20 நாட்கள்: 5 days - 9 ஆம் வகுப்பு *21 to 25 நாட்கள் :5 days - 10 ஆம் வகுப்பு *26 To 30 நாட்கள் :5 days - 11 ஆம் வகுப்பு *31 To 35 நாட்கள் : 5 days - 12 ஆம் வகுப்பு *36 To 40 நாட்கள்: 5 Days - கல்வியியல், உளவியல், பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் *41 To 50 நாட்கள் : 10 Days - தினமும் 2 Or 3 பழைய தேர்வுத்தாளுக்கு விடை எழுதி சரிபார்க்க வேண்டும். 6 To 12 std அனைத்து பாடங்களையும் எழுதி எழுதி, கேள்வி கேட்டால் பதில், பதில் கேட்டால் கேள்வி தெரியணும், இதே போன்று தரமாக படித்து நினைவில் நிறுத்தினால் 50% வெற்றி... 👍தேர்வுக்கு விண்ணப்பம் செய்து, அனுமதி சீட்டு பெற்று, சரியான நேரத்தில் சென்று பதட்டமில

தமிழ் இலக்கணம்

Image
தமிழ் இலக்கணம் : நிரல் நிறையணி. விளக்கம்: பெயரையோ,வினையையோ ஒரு வரிசைப்படநிறுத்தி அவற்றோடு தொடர்புடையவற்றைபின்னர் அவ்வரிசை படக்கூறுவதுநிரல்நிறையணி எனப்படும். எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. பாடலில் உள்ள‌ அணிக்கான பொருத்தம். இப்பாடலில் அன்பையும்,அறனையும் ஒருவரிசைப்படி நிறுத்தி, அதற்கு தொடர்புடைய பொருள் கொண்டபண்பையும்,பயனையும் அடுத்த வரிசையில் நிறுத்தி பொருத்தமாகப்பொருள் காண‌ப்பட்டுள்ளது. இன்னும் விளக்கமாக உங்களுக்கு புரியும்படிசொல்ல வெண்டுமென்றால்,ஆனந்த யாழைமீட்டுகிறாய்.....என்ற பாடலில் அன்பெனும் குடையை நீட்டுகிறாய்..... அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.... இந்தப் பாடலில் குடையை முதல் வரியில்கூறிவிட்டு,அதற்குத் தொடர்பான மழையைஅடுத்த வரியில் பொருத்தமாக நிறுத்தி பொருள்காணப்பட்டுள்ளது. பழைய பாடலில் இன்னொரு எடுத்துகாட்டு..  பொன்னெழில் பூத்தது புதுவானில்.. வெண்பனி தூவும் நிலவே நில்... வானத்தை பற்றி முதல் வரியில்கூறிவிட்டு,அடுத்த வரியில் அதற்குதொடர்பான நிலவை இணைத்து பொருத்தமாககூறப்பட்டுள்ளது. இந்த நிரல்ந
TRB பெயரெச்ச மரபுகள் PG TRB பெயரெச்ச மரபுகள் செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் இடைப்பகுதி, இறுதிப்பகுதி திரிந்து வருதலும், குறிப்புமுற்று பெயரெச்சமாதலும், எதிர்மறைப் பொருளில் பெயரெச்சம் வருதலும், பெயரெச்சம் அடுக்கி வருதலும், பெயரெச்சத்தில் இடைப்பிறவரலும் ஆகிய பெயரெச்ச மரபுகள் குறித்து இனிக் காண்போம்.  செய்யும் என்னும் வாய்பாடு - இடைதிரிதல் செய்யும் என்னும் வாய்பாட்டில் அமையும் பெயரெச்சத்தின் இடையிலுள்ள உகரம் தான் ஊர்ந்துவரும் மெய்யுடன் சேர்ந்து கெடுவதும் உண்டு. (எ.கா)போகும் போது-போம்போதுஆகும் பொருள்-ஆம்பொருள்கூவும் குயில்-கூங்குயில் (கூம்குயில்) போகும், ஆகும், கூவும் எனும் சொற்களில் இடையில் வரும் குவ்வும் வுவ்வும் (கு = க்+உ, வு = வ்+உ) கெட்டன. செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்களில் இடம்பெறும் ‘கு’, ‘வு’ என்னும் உயிர்மெய்கள் மட்டுமே இவ்வாறு கெடுவனவாகும். ஏனைய உயிர்மெய்கள் இங்ஙனம் கெடுவதில்லை. ‘பாடும் பாட்டு’ என்பது (‘டு’ என்னும் உயிர்மெய் கெட்டு) ‘பாம் பாட்டு’ என வருவதில்லை.  செய்யும் என்னும் வாய்பாடு - இறுதி திரிதல் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத

TET TAMIL GRAMMAR

Image
தன்மைப் பன்மை வினைமுற்று தன்மைப் பன்மை வினைமுற்று உண்டோம் நாங்கள் நடக்கிறோம் நாங்கள் உண்டோம், நடக்கிறோம் எனும் வினைமுற்றுகள் ஒருமை அல்ல, பன்மை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பன்மையில் இவை உயர்திணையா அஃறிணையா? இவை இருதிணைக்கும் பொதுவானவை. உண்டோம், நடக்கிறோம் என உயர்திணைப் பொருள்களும் பேசலாம்; ஆடுமாடுகள் போன்ற அஃறிணைப் பொருள்கள் பேசுவதாகவும் இலக்கியம், கதை படைக்கலாம். தன்மை ஒருமை வினைமுற்று ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒருமை ஆகிய மூன்றுக்கும் பொதுவாக இருப்பதை முன்பு கண்டோம். அதுபோலவே தன்மைப் பன்மையும் உயர்திணை அஃறிணை ஆகிய இரண்டுக்கும் பொதுவாக வரும். அதாவது பலர்பால் பன்மைக்கும் (உயர்திணைப் பொருள்கள்) பலவின்பால் பன்மைக்கும் (அஃறிணைப் பொருள்கள்) தன்மைப் பன்மை வினைமுற்று பொதுவாக வரும். தன்மை ஒருமை வினைமுற்றைப் போலத் தன்மைப் பன்மை வினைமுற்றும் செயல், காலம், செயல் செய்தவர் என்ற மூன்றைக் குறிக்கும் (1)வினைப் பகுதி-செயலை உணர்த்தும்(2)காலங்காட்டும் இடைநிலை-காலம் உணர்த்தும்(3)விகுதி-செயல் செய்தவர் அல்லது செய்தவைகளைக் குறிக்கும். (எ.கா) உண்டோம் உண்+ட்+ஓம் உண் - வினைப்ப
Image
உவமையால் விளக்கப்படும் பொருள்: கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்அச்சில் வார்த்தாற் போல் = ஒரே சீராகஅவளை நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்அரை கிணறு தாண்டியவன் போல் = ஆபத்துஇடி விழுந்த மரம் போல் = வேதனைஉமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்புஊமை கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமைஎட்டாப்பழம் புளித்தது போல் = ஏமாற்றம்ஏழை பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சிகயிரற்ற பட்டம் போல் = தவித்தல், வேதனைகண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனைதொட்டனை தூறும் மணற்கேணி = அறிவுஉடுக்கை இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்நீரின்றி அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்குதோன்றின் புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்றுவரையா மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மைபகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்ஒருமையுள் ஆமை போல் = அடக்கம்ஊருணி நீர் நிறைதல் = செல்வம்மருந்தாகி தப்பா மரம் = தீர்த்து வைத்தல்செல்வற்கே செல்வம் தகைத்து = அடக்கம்பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்மடவார் மனம் போல் = மறைந்தனர்அகழ்வாரை தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்அத்தி பூத

TET வாக்கிய வகைகள்

TET வாக்கிய வகைகள் கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை: 1) செய்தி வாக்கியம் 2) கட்டளை வாக்கியம் 3) வினா வாக்கியம் 4) உணர்ச்சி வாக்கியம் செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும். (எ.டு)  திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார். கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும். (எ.டு) திருக்குறளைப் படி வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும். (எ.டு.) திருக்குறளை எழுதியவர் யார்? உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும். (எ.டு) என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு. வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, 1) தனி வாக்கியம் 2) தொடர் வாக்கியம் 3) கலவை வாக்கியம் தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும். (எ.டு.) பாரி வந்தான். பாரியும் கபிலனும் வந்தனர். தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவரும் வாக்கியமாகும். (எ.டு.) தமிழரசி போட்டியில்

ஐம்பெரும்காப்பியங்கள்

ஐம்பெரும்காப்பியங்கள் ஐம்பெரும்காப்பியங்கள் "பொருட் தொடர்நிலைச் செய்யுள்", காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம் காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும். ஐம்பெரும்காப்பியங்கள்: ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர் ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா) சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள் மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர் வளையாபதி = பெயர் தெரியவில்லை குண்டலகேசி = நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும். சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி சுத்தானந்த பாரதி: கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார். காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது ஒளிரும் திருவடியும் ஐம்பெரும்கா

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எப்படி தயார் ஆகலாம்?

Image
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்? தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.      நாம் நான்கு வகையானோரிடம் கருத்து கேட்டு தொகுத்துள்ளோம். 1. எவ்வாறெல்லாம் அலட்சியமாக செயல்பட கூடாது என்பதற்காக கடந்த தகுதி தேர்வில் 0 – 50 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கருத்து கேட்டோம். 2.   எதனால் மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற தவறினார்கள்? என்பதை அறிய 70 – 90 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம் 3. எந்த காரணத்தால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தகுதி பெற்றீர்கள் என்று 90 – 95 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம் 4.   மிக முக்கியமாக 110 – 125 மதிப்பெண் பெற்றவர்களிடம் எவ்வாறு திட்டமிட்டு கடினமாக உழைத்தீர்கள் என கேட்டறிந்தோம். இவர்களின் கருத்துகளையே நாம் பிரதிபலிக்கிறோம். திட்டம் 1: 1.   மிக அலட்சியமாக படிக்க கூடாது. 2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறு

கற்றல் வகைகள்

Image
மூன்று வகையான கற்றல் வகைகள் கற்றலில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. பென்ஜமின் புளும் (1956) அவர்கள் தலைமையில் செயல்பட்ட கல்லூரிகளின் குழுக்கள் கற்றல் செயல்களில் மூன்று வகைகளை கண்டுபிடித்துள்ளனர். அவையாவன காக்னிட்டிவ் எனப்படும் அறிவுத்திறன் சார்ந்த திறமைகள் அபெக்டிவ் எனப்படும் உணர்வுபூர்வமான திறன்கள் சைக்கோமோட்டார் எனப்படும் உடற்திறன் சார்ந்த திறமைகள் இந்த மேற்கூறிய திறன்கள் உயர்கல்வியில் மட்டுமே வெளிப்படுத்தப்படும் என்பதால் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை விட பெரியதாக தெரிகின்றன.. பயிற்றுனர்கள் மேற்கூறிய மூன்று திறன்களை கே.எஸ்.ஏ (அறிவு, திறன், நோக்குதல்) என்று உபயோகிக்கின்றனர். இந்த கற்றலின் வகைப்பாட்டியலை ‘பயிற்சியின் முக்கிய நோக்கமாக’ கருதப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு பயிற்சியின் முடிவுக்குப்பின்பு பயிற்சி பெற்றவர்கள் இம்மூன்று திறன்களான அறிவு, திறன் மற்றும் ஒரு விஷயத்தை நோக்கும் திறன் ஆகியவற்றைக் கற்றிருக்கவேண்டும். இந்தக்குழு காக்னிட்டிவ் எனப்படும் அறிவு சார்ந்த திறமைகளையும் மற்றும் உணர்வுப்பூர்வமான திறமைகளையும் நன்கு தொகுத்துள்ளது. ஆனால் உடற்திறன் சார்ந்த திற

TET தேர்வுக்கு தயாராவது எப்படி ?

Image
ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி? தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும். தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட்(D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ்,ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில்இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள்இது. தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட்கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல்முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடுகணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்கள