Posts

Showing posts from 2016

தமிழகம் 60

Image
தமிழ்நாடு : 60 ஆண்டு... 60 நிகழ்வுகள்...! 1956  - சுமார் 200 மக்களை மருதையாற்றங்கரையின் மண்ணில் புதைத்த அரியலூர் ரயில் விபத்து.தமிழக வரலாற்றில் மிகப்பெரும் ரயில் விபத்துகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. 1957 - தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராகக் காமராசர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் பொறுப்பேற்றார். உள்ளாட்சி இலாகா அவருக்கு ஒதுக்கப்பட்டது. 1958  - தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் காமராசர் ஆட்சியில் அமலுக்கு வந்தது. அதன்படி இரண்டடுக்கு கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1959 - தத்துவங்களையும், அரசியலையும் தமிழ் சினிமாவில் தன் பாடல்வரிகளின் வழியாகப் பேசிய பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார் தனது 29 வயதில் மறைந்தார். 1960 - தமிழக நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1962 - கல்வி அறிவு தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவைத்த 'மதிய உணவுத் திட்டம்' காமராசரால் அமல்படுத்தப்பட்டது. 1963 - இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த நிலையில். ஆங்கிலமே இந்திய ஆட்சி மொழியாகத் தொடர்ந

கட் அடிப்பதை கட் செய்ய யோசனை

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட பவேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும் : பெற்றோர் வலியுறுத்தல் அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மா

கட் அடிப்பதை கட் செய்ய யோசனை

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட பவேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும் : பெற்றோர் வலியுறுத்தல் அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மா

இனிமே தமிழ்லே தான் சிக்னேச்சர்....

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய கல்வி செய்திகள்

*🗞கல்விச் செய்திகள்📰* *🗓01.11.2016🗓* 🔷🔹1941 முதல் 2050 வரை.. 110 ஆண்டுகளுக்கு தேதியை கூறினால் கிழமையை  3 விநாடிகளில் பதில் சொல்லி அசர வைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா 🔷🔹TRB:2011-12 To 2014-15 Appointment Tamil BT's Regularisation order published 🔷🔹இன்று தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 🔷🔹10 ஆம் வகுப்பு   மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கான (NTSE) நுழைவுச்சீட்டு தரவிறக்கம் இன்று முதல் செய்யலாம். 🔷🔹TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது 🔷🔹செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு 🔷🔹ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி

உலக கோப்பை கபடி இந்தியா வெற்றி

Image
கோப்பையுடன் இந்திய அணியினர். உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் மாநிலம் ஆமதாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியைத் தோற்கடித்தது. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முதல் பாதி ஆட்டத்தில் ஈரான் அணி 18-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற, 2-ஆவது பாதியில் இந்தியாவின் அஜய் தாக்குர் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் சரிவிலிருந்து மீண்ட இந்தியா, இறுதியில் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக அஜய் தாக்குர் 12 புள்ளிகளைப் பெற்றார். கடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்திலும், ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் இந்தியாவிடம் ஈரான் தோற்றது குறிப்பிடத்தக்கது.

தட்டச்சு தேர்வில் மயிலாடுதுறை மாணவி முதலிடம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் நடத்தப்பட்ட தட்டச்சுத் தேர்வில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவி கே.வினோதினி (படம்) மாநில அளவில் முதலிடம் பெற்றார். தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையின் தட்டச்சுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மயிலாடுதுறை ராஜம் தட்டச்சுப் பயிலகத்தில் பயின்ற மாணவி கே.வினோதினி, ஆங்கிலம்- முதுநிலைப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதையொட்டி, மாணவி கே.வினோதினிக்கு, ராஜம் தட்டச்சுப் பயிலக உரிமையாளர்கள் வி.கல்யாணசுந்தரம், ஜலஜா மற்றும் பயிற்றுநர்கள், மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த தட்டச்சுப் பயிலகத்தில் பயின்ற இரா.மகாதேவன் (தமிழ்- இளநிலை), மதுரநாயகி (ஆங்கிலம்- இளநிலை), குமார் (ஆங்கிலம்- முதுநிலை) ஆகியோர் ஏற்கெனவே மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி தேர்வில் விலக்களிக்க கோரிக்கை

ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்விலிருந்து விலக்களிக்க கோரிக்கை !! 2011-12 ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2000 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்ய பட்டனர்.இவர்கள் 5 ஆண்டிற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனையுடன் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 2000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றத

கற்பித்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்துங்கள்

தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ பயிற்சி குழுவினர் பேட்டி தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார். கல்வித்தரம் உலகத்தரத்திற்கு கல்வித்திட்டங்கள் இருக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிறுவனத்தின் குழு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில அரசு பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சென்னையிலும் நேற்று இந்த பயிற்சி நடந்தது. அடுத்து கோவை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி குறித்து அந்த குழுவை சேர்ந்த நிபுணர் சித்ரா ரவி கூறியதாவது:- பதற்றத்தை குறைக்கவேண்டும் தேர்வுகளால் ஆசிரியர்களும், மாணவர்களும் பதற்றப்படுகிறார்கள். அந்த பதற்றத்தை குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளிகளில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளைவிட மாணவர்களின் வளர்ச்சிய

நிறைய நேரம் படிப்பது எப்படி?

ஒரு மாணவர் ஒரு நாளில் 4 மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக,பலராலும் இது இயலாத காரியம். ஒரு தட்டில் இருக்கும் சோறு முழுவதையும் நாம் உண்டு முடிக்க வேண்டும் என்ற நிலையில், அந்த சோறு முழுவதையும் நாம் அப்படியே வாயில் கொட்டிக் கொள்வதில்லை. அது முடியாத காரியமும்கூட. எனவே நாம் சிறிது சிறிதாக எடுத்து உண்கிறோம். முடிவில், முழு சோறும் காலியாகிறது. இதுபோலத்தான் படிப்பும். 4 மணிநேரம் படிக்க வேண்டும் என்று இருக்கையில், நாம் ஒரேடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் நாம் ஒருவழியாகி விடுவோம். மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சோர்ந்துவிடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த 4 மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும். அந்த மொத்த நேரமான 4 மணி நேரத்தை குறைந்தபட்சம் 30 நிமிடத்திலிருந்து அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரை பிரித்துக்கொள்ளலாம். அப்போது உங்களது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில், சில எளிமையான பயிற்சிகள் செய்து, உ

நடப்பு நிகழ்வுகள் 22/10/2016

தமிழகம் 1. தமிழக அரசு வெள்ள பாதிப்புகளைத் தடுக்க 20 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2. ‘தன்வந்திரி’ என்ற பெயரில் இந்தியாவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்துக்கான செல்போன் செயலி (ஆப்ஸ்) கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ மற்றும் ‘ஐஓஎஸ்’ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 3. திருநங்கை நர்த்தகி நடராஜுக்கு, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார்.திருநங்கைகளில் முதன்முதலில் பாஸ்போர்ட் பெற்றவர், முதன்முதலில் தேசியவிருது பெற்றவர், முதன்முதலில் கலைமாமணி விருது பெற்றவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.அக்கய் பத்மசாலி என்ற திருநங்கை இந்திய அளவில் முதன் முதலாக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியா 1. காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி அந்த கட்சியிலிருந்த

ரயில்வே தேர்வில் வெற்றி பெறுவது சுலபம்...

இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரயில்வே தேர்வு வாரியங்களும் ரயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்திவந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத மாநில மொழி மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது. இதன்படி, தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென் மண்டல ரயில்வே தேர்வு வாரியத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ரயில்வே துறையில் குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும் 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் இயங்கி வருகின்றன. அலுவலக

இணைய வழி கல்வி

இணைய வழி கல்வி அறிமுகம் : பள்ளி கல்வி இயக்குனர் தகவல் தமிழகம் முழுவதும் 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 2017 -18ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகமாகும்,'' என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், பள்ளிகளை தரம்படுத்துதல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வட கிழக்கு பருவமழை துவங்குவதால், பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்', இணைய வழி கல்வி திட்டம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2017 - 18ம் கல்வி ஆண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, 150 பாடங்கள் தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும். தற்போது, இணைய வழி கல்வி திட்டத்திற்காக கணினி, 'புரொஜக்டர்' உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், 65.20 கோடி ரூபாயில்

ஊக்க ஊதிய உயர்வுகள்....

ஊக்க ஊதிய உயர்வுகள் 1.ஓர் இடைநிலையாசிரியர் B.Ed பட்டம் பெற்றால் அத்தகுதிக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் M.A., M.Sc., M.Ed., போன்ற முதுகலை பட்டங்களில் ஒன்றைப் பெற்றால் அத்தகுதிக்காக மேலும் ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. 2. இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் B.Ed பட்டம் பெறாமல் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் B.Ed பட்டம் பெற்றால் ஒரே நிகழ்வில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் ( நான்கு ஊதிய உயர்வுத் தொகைகள்)அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. 3. இவ்வூதிய உயர்வுகள் உரிய தேர்வுகள் எழுதி முடித்த நாளுக்கு மறுநாள் முதல் வழங்கப்படுகின்றன. 4. அண்ணாமலை பல்கலைகழகத்தின் திறந்த நிலைப் பல்கலைகழகத் திட்டத்தில் (Open University System) வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் அப்பல்கலைகழகத்தின் முறையான திட்டத்தின் (Regular Stream) வழங்கப்பெறும் பட்டங்களுக்கு சமமானவையாகக் கருதி பொதுப் பணிகளில் வேலை வாய்ப்புக்கு அரசு ஏற்ப்பளிப்பு (Recog

நடப்பு நிகழ்வுகள் 21/10/2016

இந்தியா 1. பாதர ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 6 லட்சம் டெபிட் ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது.நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உலகம் 1. ரஷ்யா இரண்டாவதாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க  ஒப்புக் கொண்டுள்ளது. 2. இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 3. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து நாட்டின் மிகக் குறைவான வரிவிதிப்புக் கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி தொடர்பான கொள்கையை மீறியிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் 13 பில்லியன் ஈரோ அபராதம் விதித்துள்ளது.

TNPSC GROUP IV - CONSTITUTION OF INDIA

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை இந்திய அரசியலமைப்பு 1. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிற்து. 2. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும்? 3. பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும்? 4. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்? 5. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன? 6. மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனை மாதங்களில் உறுப்பினராக வேண்டும்? 7. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது எத்தனையாவது சட்டத்திருத்தம்? 8. ஓர் அரசியல் கட்சி, தேசிய கட்சியாக எப்போது அங்கீகரிக்கப்படும்? 9. அரசு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) எதிரொலிக்கும் சமதர்ம கொள்கையின் நோக்கம் எதைக் காட்டுகிறது? 10. இந்திய அரசியலமைப்பின்படி ராஜ்ய சபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படும்? 11. 92-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி குறிப்பிடுகிறது? 12. எந்த சட்டங்களுக்கு எதிரா

TNPSC சக்சஸ் டிப்ஸ்....

முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான். ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத்  தயாராகுங்கள். தேர்ச்சி மட்டும்தான் உங்கள் இலக்கு. ‘நம்மால் முடியுமா... இவ்வளவு லட்சம் பேரில் நாம் தேர்ச்சி அடைவோமா?’ என்பது போன்ற  நெகட்டிவான கேள்விகளைத் தள்ளி வைத்துவிடுங்கள்.  ஒரு உளவியலைப் புரிந்துகொள்ளுங்கள். இத்தேர்வை எழுதப்போவது 13 லட்சத்து சொச்சம் பேர் என்றாலும் இதில் 50 ஆயிரம் பேர் மட்டுமே சிரத்தையான தயாரித்தல்களோடு தேர்வுக்கு வருவார்கள். அதாவது, ஒரு பதவிக்கு பத்து பேர்... அவர்களோடுதான் நீங்கள் போட்டியிடப் போகிறீர்கள். எனவே 10ல் ஒருவராக வந்திருக்கிற உங்களால் பத்தில் முதல்வராகவும் வர முடியும். இதுவரை எப்படி படித்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல... இருக்கிற அவகாசத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் படிக்க வேண்டும். கவனச்சிதறல் இல்லாமல் படித்தால் கூட ஜெயித்துவிடலாம்.   பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றிருந்தால், கடந்த நாட்களில் படித்து, எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், வகுப்பு நோட்டுக்களை முழுவதுமாக இரண்டு முறை படித்து நினைவுக்குக் கொண்டுவர வேண்டியது அவ

நடப்பு நிகழ்வுகள் 20/10/2016

இந்தியா 1. தில்லியில் நேற்று 27 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் நடைபெறும் தேர்தல் ஆணையர்களின் சர்வதேச மாநாடு தொடங்கியது. 2. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்திய கடற்படையின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. 3. ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ரயில்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன.இந்தியாவில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இலவச வைஃஃபை வசதியைப் பயணிகள் அதிகளவில் பயன்படுத்திய இடங்களின் வரிசையில் பாட்னா ரயில் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. 4. கேரளாவின் கொல்லம் மாநகரில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டிற்கே சென்று நியாயவிலைக் கடை பொருட்களை வழங்கும் திட்டம், நவம்பர் 01ல் துவங்க உள்ளது.2017 ஏப்ரலுக்குள் மாநிலம் முழுமைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. 5. கோவாவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்

நடப்பு நிகழ்வுகள் 19/10/2016

தமிழகம் 1. தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.மேலும் www.sciencecitychennai.in  என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவம், அடிப்படை தகுதிகள், விதிகள் ஆகியன பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 1. முதன் முறையாக இந்தியாவில் உள்ள வங்கிகளில் உள்ள டெபாசிட் தொகை செப்டம்பர் 2016 நிலவரப்படி  100 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. உலகம் 1. வடகொரியாவின் குசாங் பகுதியில் அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. வர்த்தகம் 1. இந்தியாவில் 3,500 பெட்ரோல் நிலையங்களை அமைக்க பிரிட்டனைச் சேர்ந்த பி.பி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2. `மேட் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. விளையாட்

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Postal Assistant, Sorting Assistant காலியிடங்கள்: 3,281 பணி: Data Entry Operator காலியிடங்கள்: 506 பணி:  Court Clerks காலியிடங்கள்: 26 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயமுத்தூர்

விருப்பங்கள் மட்டும் போதாது

எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும். மாணவப் பருவத்தில், கல்லூரிக்குப் போகிற வழியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற கட்டிடத்தைப் பார்த்து, “இங்கே வேலைக்குப் போகவேண்டும்” என்கிற எண்ணம் முதலில் ஏற்படலாம். அது விருப்பமாக மட்டுமே இருந்தால் காலையும் மாலையும் கடந்து போகிற போது அந்த எண்ணங்கள் தலைதூக்கும். பிறகு மறந்து விடும். ஆனால், இந்த விருப்பம் எதிர்பார்ப்பாக மாறும்போது, நீங்களே வியப்படையும் விதத்தில் அந்த ஆசை நிறைவேறுவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் அமையத் தொடங்கும். விருப்பங்கள் எதிர்பார்ப்புகளாக முதிர்கின்றனவா என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு நண்பரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும். ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த எண்

வெற்றிக்கு வழி

எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது. நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. அணுகுமுறை எதிலிருந்து ஆரம்பிக்கிறது? எண்ணங்களிலிருந்து ஆரம்பிக்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கி சிலர் அசகாய வெற்றிகளை எட்டியிருக்கிறார்களே, அந்த வெற்றிகள் எதிலிருந்து தொடங்கின தெரியுமா? அவர்களின் அபிப்பிராயங்களில் இருந்து!! தாங்கள் வெறுமையான சூழலில் இருந்தாலும் அங்கிருந்து வெற்றியாளர்களாய் வளரமுடியும் என்ற அபிப்பிராயம்தான் அவர்களுடைய முதல் உந்து சக்தி. தங்களின் உற்சாகமே அவர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமென உறுதியாய் நம்பியவர்கள் அவர்கள். அனைத்து வெற்றிகளும் நம் அபிப்பிராயங்களில்தான் ஆரம்பமாகின்றன என்பது நாம் அறிய வேண்டிய முதல்பாடம். அந்த அபிப்பிராயம் தோன்ற