Posts

Showing posts from January, 2017

கணிதத்தை எப்படி படிக்கலாம் ?

கணிதத்தை எப்படிப் படிக்கலாம்? மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது. தொடர்மொழி உதாரணமாக, 8-ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 8-ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7-ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8-ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7-ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8-ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி (Sequential Language) என அழைக்கலாம். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் நாம் 9-ம் வகுப்பு படிக்கும்போதும், 11-ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற

உங்களால் முடியும்

“முதல் தாளாக இருந்தாலும் சரி, இரண்டாம் தாளாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே அரசின் பாடப்புத்தகங்களை யாரெல்லாம் முழுமையாகப் படித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவது நிச்சயம். முதல் தாளுக்காக படித்துக் கொண்டிருப்பவர்கள், ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். இப்பாடங்கள் எல்லாம் குழந்தைகள் படிக்கும் பாடங்கள் என்பதால், படிப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. புரிந்து கொண்டு, குழந்தைகளைப் போல் மகிழ்ச்சியாக படித்துக்கொண்டாலே, பாடங்கள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணி போல் பதியும். முக்கியமான வாக்கியங்களை, வார்த்தைகளை தனியே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இதுபோல குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், உங்களுக்கென்று தனி நோட்ஸ் தயார். அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டால். எளிதில் மறக்காது. எப்போதும் மறந்து போகாது. டீச்சர் டிரெயினிங்கின்போது, படித்துக்கொண்ட சைக்காலஜி பாடங்களை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். முதல் தாளை வெற்றிகரமாக எழுதி விடலாம்.   இரண்டாம் தாளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள் 6-ஆம்