Posts

Showing posts from November, 2017
Image
மருத்துவ விடுப்பு குறைந்த பட்சம் 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்
Image
J.E.E. தேர்வு டிசம்பரில் விண்ணப்பிக்கலாம்
Image
அரசு அலுவலர் வழக்கு - வீடியோ கான்பிரன்ஸ் முறையில் விசாரணை நடத்த மறுத்தது நீதிமன்றம்
Image
சிறப்பாசிரியர்களுக்கு சம்பள உயர்வு!!!
Image
ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விட ஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டு
Image
மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத் திட்டங்கள் அமலில் உள்ளன. மாணவ - மாணவியர் நீண்ட நேரம், 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க, உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தினமும் மாலை நேரங்களில், யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டமான, எஸ்.எஸ்.ஏ.,வில், மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும், ஒன்றரை மணி நேரம் கராத்தே வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, இலவச கராத்தே வகுப்புகள் துவங்கிஉள்ளன. மாவட்டங்களில், வாரத்திற்கு இரண்டு நாட்கள், மாலையில் கராத்தே பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'சில்மிஷத்த
Image
அரசாணைகளின் தொகுப்பு ஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம் G.O's REALTED TO TEACHERS & THEIR EXPLAINATION 1.அரசாணை அறிவோம் - பதிவு1 *G.O. Ms. No 119 Dt: September 09, 2009* Public Services- Classification of Government Servants into four Groups - Modification - Ordered. *G.O.Ms.No.111 Dt: August 09, 2010* Public Services - Tamil Nadu State and Subordinate Services - Classification of Government servants into four groups - modified. தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் குரூப் A,B,C,D என  நான்கு வகையில் பட்டியலிடப்படுகின்றனர். இந்த வகைப்பாடு அவரவர் பெறும் *CADRE PAY* அடிப்படையில் செய்யப்படுகிறது. ரூ 1300 பெறுவோர் D ரூ 1400 - 4400 க்கு கீழ் C ரூ 4400 - 6600 க்கு கீழ் B ரூ 6600ம், அதற்கு மேல் A இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் C&D பிரிவினருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். உயர் வருவாய்ப் பிரிவினரான A,B க்கு கருணைத் தொகை மட்டுமே உண்டு.👇 4.அரசாணை அறிவோம் - பதிவு 4  பட்டதாரி ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய
Image
சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு பாலிடெக்னிக் பொறியியல் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சென்னை தரமணி மத்திய தொழில் நுட்ப கழகத்தில் இந்த மாதம் 23-25 வரை நடக்க இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் ஒத்திவைப்பு. விழுப்புரம் மற்றும் மதுரையில் பொறியியல் அல்லாத பிற பாடங்களுக்கு 24-25 ஆகிய தேதிகளில்  சான்றிதழ் சரிபார்ப்பு திட்டமிட்டபடி நடக்கும். ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பாட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

You Tube-ல் கலக்கும் அரசு பள்ளி மாணவரின் கானா பாடல்

Image
தி.சு.கி அரசு மேல்நிலைப் பள்ளி மாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியை Yuvarani அவர்கள் தன் மாணவரின் திறமையை YouTube மூலம் உலகுக்கு வெளிகாட்டி இருக்கிறார். அரசு பள்ளி மாணவரின் கானா பாடல் தற்போது YouTube -ல் கலக்கி வருகிறது. இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மாணவரின் திறமையை கண்டு களித்து இருக்கிறார்கள். மாணவருக்கும் மற்றும் அவரது திறமையை உலகுக்கு உணர்த்திய ஆசிரியை அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஊதியம் பெறுவதில் சிக்கல்

Image

தூய்மை பள்ளி விருதுக்கு விரைவில் கள ஆய்வு

Image
தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்து வகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவ
குரூப் 4 பணியில் வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமையா?: டிஎன்பிஎஸ்சி விளக்கம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: தேர்வாணையம் நடத்தும் குரூப் 4ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்த விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோரு

TET Paper I காலி பணியிடங்கள்

Image
Tet தேர்வில் பேப்பர் 1 தேர்ச்சி பெற்றுள்ள mbc பிரிவினருக்கு அவர்கள் மட்டுமே பணி புரியும் கள்ளர் பள்ளியில் 59 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடம் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது...

கவுரவ ஆசிரியர்கள் நியமனம்!!!

Image

வேலை வாய்ப்பு

Image
Image
நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. 'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களைதேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை,

வேலைவாய்ப்பு

Image

பாடத்திட்டம் மாற்றம் இன்று வெளியாகிறது

Image

ஊதிய நிர்ணய விருப்ப கடிதத்தை திரும்ப பெறும் இடைநிலை ஆசிரியர்கள்

Image
Image
கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி? CONTENTS 1.நடைமுறைகள் 2.பள்ளி மாற்றுச் சான்றிதழ் 3.இணைக்க வேண்டிய ஆவணங்கள் 4.கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ் 5.பள்ளி மதிப்பெண் சான்றிதழ் 6.கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் 7.தனித்தேர்வர்களுக்கு 8.குறிப்பு 1.வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இ

வேலை வாய்ப்பு

Image

ஆசிரியர் ஊதிய முரண்பாடு பதிலளிக்க உத்தரவு

Image
அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 1 - 8ம் வகுப்பு வரையில், கல்வித் தரம் மேம்பட, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதில், 5ம் வகுப்பு வரையான இடைநிலை ஆசிரியர்களுக்கும், 6 - 8ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில், நடப்பு கல்வியாண்டில், 'கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில், நாளை முதல், 30 வரையில், தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக, பயிற்சி கட்டடங்கள் தயார் செய்யப்பட்டன. இதில், தாமதம் ஏற்பட்டு உள்ளதால், பயிற்சி நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.இதனால், பயிற்சிகள் அனைத்தும் தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன
Image
தமிழகத்தில் 11 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பாசிரியர் பாடத்திட்டம் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர, கடந்த 1972ம் ஆண்டு சிறப்பாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடம் கற்பிக்கப்படுகிறது. 1972ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியின்படியே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பாடங்கள் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டம் 2006ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சென்ைனயில் பணிமனை அமைக்கப்பட்டது. 2வது கட்ட பணிக்குபின், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பாடதிட்டத்தில், 6ம் வகுப்புக்கு புள்ளி, கோடு, வடிவம் குறித்த பாடத்திட்டம், 7 மற்றும் 8ம் வகுப்புக்கு கற்பனை ஓவியங்கள் வரையும் பயிற்சி பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு காகிதம் கொண்டு வெட்டி ஒட்டுதல் (கொலேஜ் வர்க்), சோப்பு கட்டிங் தயாரித்தல் பாடத்திட்டம், 10ம் வகுப்புக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓ