ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்


ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்தேர்வு செய்தல்


கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.

ளகர-லகரப் பொருள் வேறுபாடு

அளகு - காட்டுக்கோழி
அலகு - அளவைக்கூறு
அள் - கூர்மை, காது
அல் - இரவு
அளை - குகை, கல்
அலை - திரி, கடல் அலை
இளை - மெலிதல்
இலை - மரத்தின் இலை
உளை - மயிர்
உலை - நீர் உலை
களம் - போர்க்களம்
கலம் -கப்பல்
 கள் - தேன், பானம்
கல் - பாறை, கல்வி
காளை - எருது
காலை - பொழுது
குளவி - பூச்சி
குலவி - குலவுதல்
குளம் - நீர்நிலை
குலம் - இனம்
கொல் - கொலை
கொள் - பெறுதல்
கூளி - பூதம்
கூலி-சம்பளம்
தோள் - உறுப்பு
தோல் - சருமம்
பள்ளி - பாடசாலை
பல்லி-விலங்கு
வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது
வாலி - சுக்ரீவனின் தமயன்
வாள் - கருவி
வால் - விலங்கின் வால்
வேள் - இறைவன்
வேல் - கருவி
வளி - காற்று
வலி - வேதனை
விளை - விளைச்சல்
விலை - மதிப்பு
எள் - பயிர்வகை
எல் - சூரியன், வெளிச்சம்
தாள் - பாதம்
தால் - நாக்கு
கொள்ளி - நெருப்பு
கொல்லி - ஒருமலை
நீளம் - நெடுமையாக
நீலம்-நிறம்
விள் - விடுதல்
வில் - கருவி
கோள் - கிரகம்
கோல் - கொம்பு
நால் - நான்கு
நாள் - தினம்
மால் - திருமால்
மாள் - இறத்தல்

ரகர-றகர பொருள் வேறுபாடுகள்

சீரிய - சிறப்பான
சீறிய - வெகுண்ட
தரி - அணிந்துகொள்
தறி - வெட்டு
இரு - இருத்தல்
இறு - முறிதல்
பரி - குதிரை
பறி - பிடுங்கிக்கொள்
குரம் - நகரம்
குறம் - பக்கம்
அரம் - கருவி
அறம் - ஈகை
அரை - பாதி, இடுப்பு
அறை - வீட்டு அறை
இறை - தீனி
இறை - கடவுள், நீர் இறைத்தல்
உரு - வடிவம்
உறு - மிகுதி
அரவு - பாம்பு
அறவு - விலக்கம்
உரல் - மாவு இடிக்கப்பயன்படுவது
உறல் - பெருத்த துன்பம்
அரி - வெட்டு
அறி - தெரிந்துகொள்
பொரி - உண்ணும் பொரி
பொறி - இயந்திரம்
உரி - உரித்தல்
உறி - உறி அடித்தல்
குரை - நாய் குரைத்தல்
குறை - குறைத்தல்
திரை - அலை
திறை - கப்பம்
கரை - ஓரம்
கறை - அழுக்கு
துறவு - துறத்தல்
துரவு - கேணி
பறவை - பறக்கும் பறவை
பரவை - கடல்
இரை - உணவு
இறை - கடவுள்
விறல் - வெற்றி
விரல் - விரல்
மறை - வேதம்
மரை - மான்
இரும்பு - உலோகம்
இறும்பு - புதர்
ஏரி - நீர் தேக்கம்
ஏறி - ஏறுதல்
கருப்பு - பஞ்சம்
கறுப்பு-நிறம்
குரம் - நரகம்
குறம்-பக்கம்
பெரு - பருமன்
பெறு -பெறுதல்
குரவர் - சமயக்குரவர்
குறவர்-மலைசாதியினர்
 ஒரு - ஒன்று
ஒறு - தண்டித்தல்
அரு - அருகாமை
அறு - அறுத்தல், புல்வகை
பொறுத்து - தாமதித்து
பொருத்து- சேர்த்து
அரிவை - பெண் வகை
அறிவை - அறிந்துகொள்
பொரு - போரிடு
பொறு - பொறுத்துக்கொள்
தெரி - சிதறுதல்
தெறி - நொறுங்குதல்
கூரை - வீட்டின் முகடு
கூறை - புடவை
உரை - பேச்சு
உறை - உறைவிடம், மூடி
நெரி - நசுக்குதல், உடைத்தல்
நெறி - நீதிநெறி,
புரம் - காப்பு, நகர்
புறம் - வெளி, பக்கம்
மருகி - மருமகள்
மறுகி - தாங்கி
செரு - போர்
செறு - திணி, வயல்
சீரடி - சிறப்பான அடி
சீறடி - சிறிய அடி
நரை - தலை நரை
நறை - தேன்
பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை

னகர, ணகர சொற்களின் பொருள் வேறுபாடு

கன்னன் - கர்ணன்
கண்ணன்- திருமால்
மன்னன் - அரசன்
மண்ணன்- மனிதன்
பனி - குளிர்
பணி - வேலை
ஊன் - இறைச்சி
ஊண் - உணவு
மன் - நிலையான
மண் - தரை
என் - என்னுடையது
எண் - எண்ணிக்கை
தனி - தனிமை
தணி - குளிர்மை
கனி - பழம்
கணி - கணித்தல்
அரன் - ஈஸ்வரன்
அரண் - பாதுகாப்பு, அரண்மனை
மனம் - நெஞ்சம்
மணம் - வாசனை
கான் - கானகம், காடு
காண் - பார்
கனம் - பாரம்
கணம் - கூட்டம், நொடி
வன்மை - திடமான,உறுதியான
வண்மை - ஈகை குணம்
நுனி - முனை
நுணி - நுட்பம்
சுனை - நிரூற்று
சுணை - முட்கள்
கன்னி - குமரிப்பெண்
கண்ணி - மாலை
அனை - அத்தனை
அணை-நீர்த்தேக்கம்
மனை - வீடு, வீட்டிடம்
மணை - அமரும் பலகை
ஆனி - மாதம்
ஆணி - சுவற்றில் அடிப்பது
கனை - அம்பு
கணை - பேழை
ஆனை - யானை
ஆணை - கட்டளை

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்