PGTRB வரலாறு தேர்வு 12

PGTRB வரலாறு தேர்வு எண் 12


PGTRB HISTORY TEST NO. 12

🌹🌹🌹🌹🌹🌹🌹
UNIT : 1

தலைப்பு : மெளரியர்கள்
(மெளரியர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய இந்தியா)

கேள்விகள் : 25

🌹🌹🌹🌹🌹🌹🌹
கேள்வித்தாள் வடிவமைப்பு: R. ALLA BAKSH
🌹🌹🌹🌹🌹🌹🌹


276. மகாபாரதம் மற்றும் புராணங்கள் தரும் தகவல்கள் கீழ்காணும் மகதத்தின் முதல் வம்சத்தை தோற்றுவித்தார் என்று கூறுகின்றன

A. பிரஹதரத்தா
B. ஜரசந்தா
C. வசு
D.பிரயோத்தா


277. சிசுநாகா வம்சத்தை தோற்றுவித்தவர்

A. சிசுநாகா
B. சைசுநாகா
C. A  மட்டுமே
D. A மற்றும் B இருவரும் ஒருவரே



278. ஹர்யாங்க வம்சத்தை சார்ந்த பிம்பிசாரனின் வேறு பெயர்

A. சீரேனிகா
B. கேஷம்ஜீத்
C. ஹேமஜித்
D. ஷேத்ரோஜா



279. பிம்பிசாரனின் ஆட்சி பகுதியில் இருந்த கிராமங்களின் எண்ணிக்கை

A. 1,00,000
B. 59,000
C. 76,000
D. 80,000


280. பிம்பிசாரனின் ஆட்சியில் ராஜபதர்கள் என்ற உயர் அதிகாரிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்

A. 4
B. 6
C. 8
D. 16


281. அஜாதசத்ருவின் மகனான உதயின் என்னும் உதயபத்ராவினால் கங்கை கரையில் நிர்மாணிக்கப்பட்ட தலைநகர்

A. வைசாலி
B. அவந்தி
C. குசும்புரா
D. பாடலிபுத்திரம்


282. உதயினால் கட்டப்பட்ட மற்றொரு கட்டடமான "சைத்ய கிரஹா" என்பது ஒரு .............

A. ஜைன கோவில்
B. புத்த கோவில்
C. மகாவீரரின் சமாதி
D. புத்தரின் சமாதி


283. புராணங்கள் அளிக்கும் தகவலின் படி  சிசுநாகர்களுக்கு பின் ஆட்சிக்கு வந்த 9 நந்தர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி  புரிந்தனர்?

A. 87
B. 89
C. 94
D. 100


284.மஹாபோதிவம்சத்தில் உக்ரசேனா என்று அழைக்கப்படும் முதல் நந்த அரசர் புராணங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்

A. மஹாபத்மா
B. மஹாபத்ம்பதி
C. பாண்டுகா
D. A மற்றும்  B


285. சர்வ ஷத்ரங்டதா என்றால்

A. மன்னாதிமன்னர்
B. ஷத்திரியர்களில்
C. ஷத்திரியர்களில் பலம் வாய்ந்தவர்
D. ஷத்திரியர்களை அழிப்பவர்


286. நந்தர்களில் கடைசி அரசர்

A. தனநந்தர்
B.கோவிஷனகா
C. ராஷ்டிரபாலா
D. கவிவர்த்தா


287. பாலும் தேனும் உள்ள நாடாக இந்தியாவை கருதிய அலெக்சாண்டர் அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர தன் படையை இரண்டாக பிரித்து ஒரு படை பிரிவை யாருடைய தலைமையில் அனுப்பினார்?

A. ஹேபஸ்ஷன் மற்றும் அஸ்டஸ்
B. பெர்டிகாஸ் மற்றும் அஸ்டஸ்
C. அஸ்டஸ்
D. ஹேபஸ்ஷன் மற்றும்  பெர்டிகாஸ்



288. ஜீலம் நதிகரையில் நடைபெற்ற ஹைடாஸ்பஸ் போரில் அலெக்சாண்டரை எதிர்த்து நின்றவர்

A. அம்பி
B.போரஸ்
C. ஹஸ்தி
D. அஸ்டஸ்


289. அலெக்சாண்டர் இறந்த ஆண்டு

A. 323 BC
B.328 BC
C.363 BC
D. 368 BC



290. மெளரிய வம்சத்தின் தோற்றம் இந்திய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வு என்று கூறிய வரலாற்றறிஞர்

A. மஜூம்தார்
B. ஸ்மித்
C. ராதா குமுட் முகர்ஜி
D. ஜாகோபி



291. கிரேக்க இலக்கியங்களில் சான்ட்ரோகோட்டஸ் என்று அழைக்கப்படுபவர்

A. சந்திரகுப்த மெளரியர்
B. பிந்துசாரர்
C. அலெக்சாண்டர்
D. நிகேடார்


292. அர்த்தசாஸ்திரத்தில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கை

A.8900
B.8090
C. 6000
D.6780


293. அர்த்த சாஸ்திரத்தை கண்டுபிடித்தவர்

A. அலெக்சாண்டர் கன்னிங்காம்
B. ஷியாமா  சாஸ்திரி
C. சர் ஜான் மார்ஷல்
D.  நீலகண்ட சாஸ்திரி


294. மெகஸ்தனிஸ் தனது இண்டிகாவில் இந்திய மக்கள் தொகை எத்தனை வகுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்ததாக கூறுகிறார்

A. 7
B.4
C.3
D.8


295. இந்திய மாக்கியவெல்லி

A. கெளடில்யர்
B. மெகஸ்தனிஸ்
C. விசாகதத்தர்
D. சாமா சாஸ்திரி


296. அர்த்த சாஸ்திரத்தை எத்தனை பகுதிகளாக பிரிக்கலாம்

A. 3
B. 4
C. 6
D. 2


297. அரசன், அரசவை, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைப் பற்றி கூறும் அர்த்தசாஸ்திரத்தின் பகுதி எது?

A. முதல் பகுதி
B. இரண்டாம் பகுதி
C. மூன்றாம் பகுதி
D. முதல் இரு பகுதிகள்


298. இருபத்தைந்து வயதான சந்திரகுப்தரிடம் ஆட்சியை பறிகொடுத்த நந்த அரசன்

A. மகாபத்மநந்தன்
B. தன நந்தன்
C. ராஷ்டிரபாலா
D. கோவிஷனகா


299. ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் முதன்முதலில் அசோகரின் கல்வெட்டுக்கள் படித்தறியப்பட்ட ஆண்டு

A. 1817
B. 1827
C. 1837
D. 1847


300. செலுகஸ் நிகேடாருக்கும் சந்திர குப்த மெளரியருக்கும் இடையே போர் நடைபெற்ற ஆண்டு

A. BC  301
B. BC 305
C. BC 307
D. AD 300

🥀🥀🥀🥀🥀🥀🥀
இன்றைய கேள்விகளுக்கான பதில்கள்

276. A
277. D
278. A
279. D
280. A
281. D
282. A
283. D
284. D
285. D
286. A
287. D
288. B
289. A
290. C
291. A
292. C
293. B
294. A
295. A
296. A
297. A
298. B
299. C
300. B

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்