தனிவட்டி(SIMPLE INTEREST) முதலில்,உங்களை கடுப்பேற்றும் ஒரு செயலை செய்யச்சொல்லப்போகிறேன்.வேறொன்றுமில்லை,அது FORMULA என்று கூறப்படும் வாய்பாட்டை மனப்பாடம் செய்தலே ஆகும்.கிட்டதட்ட,தனிவட்டி கணக்குகளில் ஐந்து வகையான வாய்பாடுகளை மனப்பாடம் செய்தாலே போதும்,ஒரு மார்க் அழகாக பெற்றுவிடலாம்.ஒரு மார்க்தானே,போனால் போகிறது என விட்டால்,உங்களின் ரிசல்ட் சமயத்தில் நீங்கள் அடையும் வலி அந்த ஒரு மார்க்கினால் கூட இருக்கலாம்.எனவே,முடிந்த வரை மனப்பாடம் செய்துவிடுங்கள்.அவ்வளவு கடினமான வாய்பாடு,தனிவட்டிக்கு இல்லை. எ.கா.1 ஒருவர் ரூ.60000-ஐ 10% தனிவட்டிக்கு,2 ஆண்டுகளுக்கு கடனாக வாங்கினார் எனில்,அவர் கொடுக்கும் வட்டித்தொகை எவ்வளவு? இதில், அசல் (P) = 60000 காலம் (T) = 2 வட்டிவீதம் (R) = 10% So, அவர்,2 ஆண்டுகளில்,60000ரூ.க்கு 10% வட்டிக்கு கொடுக்கும் தனிவட்டி ரூ 12,000 ஆகும். சரி,இப்போது மேலே அசல்,காலம்,வட்டிவீதம் கொடுத்து தனிவட்டி கேட்டார்கள்.அதற்கு பதில் தனிவட்டி ...
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும். ளகர-லகரப் பொருள் வேறுபாடு அளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு அள் - கூர்மை, காது அல் - இரவு அளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை இளை - மெலிதல் இலை - மரத்தின் இலை உளை - மயிர் உலை - நீர் உலை களம் - போர்க்களம் கலம் -கப்பல் கள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி காளை - எருது காலை - பொழுது குளவி - பூச்சி குலவி - குலவுதல் குளம் - நீர்நிலை குலம் - இனம் கொல் - கொலை கொள் - பெறுதல் கூளி - பூதம் கூலி-சம்பளம் தோள் - உறுப்பு தோல் - சருமம் பள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன் வாள் - கருவி வால் - விலங்கின் வால் வேள் - இறைவன் வேல் - கருவி வளி - காற்று வலி - வேதனை விளை - விளைச்சல் விலை - மதிப்பு எள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம் தா...
கல்வியியல் 1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம் 2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி 3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள் 4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீம ா 5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை 6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப் 7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள் 8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே 9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென் 10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100 11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை 12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல் 13 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் ரூசோ 14 தன்னிச்சையாக ...
Comments
Post a Comment