மெட்டீரியல்கள் வெற்றி தருமா?
மெட்டீரியல்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா?
போட்டித் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் வழங்கப்படும் "ஸ்ட்டி மெட்டீரியல்கள்" எனப்படும் வினா - விடை குறிப்பேடுகள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா எனில் நிச்சயமா இல்லை என்று சொல்லலாம்.
மெட்டீரியல்கள் வைத்திருக்கும் அனைவருமே போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. அரசு பாட புத்தகங்களை மட்டுமே படித்து தேர்வில் வெற்றி பெற்றவர்களும் உண்டு.
அது ஒரு கிரியா ஊக்கி போன்றது. அவற்றை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்றால், ஒரு பாடத்திட்டத்தை முழுமையாக நீங்கள் பாட புத்தகங்களில் படித்த முடித்த பிறகு, பயன்படுத்த கூடியதுதான் மெட்டீரியல்கள். முதலில் மூலக்கதை என்னவென்று தெரிந்த பிறகுதான், ஒவ்வொரு காட்சியாக எடுத்து கோர்த்து, திரைப்படமாக மாற்ற முடியும்.
அதுபோலதான் போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராகும் விதமும் இருக்க வேண்டும். நீங்கள் எந்த தேர்வுக்கு தயாராகிறீர்கள். அந்த போட்டித் தேர்வுக்கு என்னென்ன பாடப் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. எந்த கல்வித் தகுதி தரத்திற்கு கேள்விகள் அமையும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக TNPSC IV குரூப் தேர்வு எனில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள "சமச்சீர் கல்வி" பாட புத்தகங்களை படித்தாலே போதுமானது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துவிதமான பாடங்களையும் ஆய்ந்தறிந்து படிக்க வேண்டும். பாடங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கான விடைகளை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் கட்டம் கட்டி சுட்டி காட்டப்பட்டுள்ள பகுதிகளையும், தடிமன்னா எழுத்துகளில் குறிப்பிட்டப்பட்டுள்ள வார்த்தைகளையும் ஊன்றி கவனித்து படிக்க வேண்டும்.
ஒரு பாடத்தை முழுமையாக படித்து, அதில் எப்படியெப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும் என படிக்கும்போது சிந்தித்தறிந்து படிக்க வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் தவிர்த்து விடாமல் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். இதுதான் முக்கியம்.. இது முக்கியமில்லை என பாகுபடுத்தி படிக்க கூடாது.
விரைவில் போட்டித் தேர்வில் வெற்ற பெற வேண்டுமானால் கண்டிப்பாக ஓராண்டு முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் அவசியம். ஆய்ந்தறிந்து படித்தால் மீண்டும் மீண்டும் அந்தந்த பாடங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. புரிந்துணர்வு மிக மிக முக்கியம். பாடத்தில் உள்ள வார்த்தைகளை புரிந்து கொண்டு, படித்தால் அது எதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது, எதை குறிப்பிடுகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

Comments
Post a Comment