TNPSC தமிழ்
TNPSC பத்தாம் வகுப்பு -
தமிழ் இரண்டாம் தாள் -
ஒரு மதிப்பெண் வினா-விடைகள்
1. இளவழகன் வந்தான். இது வெளிப்படை தொடர்.
2. மாடு என்னும் சொல் அஃறிணைப் பொதுப்பெயர் ஆகும்.
3. மாடு கன்றை ஈன்றது. இத்தொடரில் மாடு என்பது பசுவைக் குறிக்கும்
4. வடக்கு என்னும் திசைப்பெயரொடு பிற திசைகள் வந்து சேரும்போது நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்
5. மேற்கு நாடு என்பது மேனாடு எனச் சேரும்.
6. கருமை குழி என்பது ஈறுபோதல், இனமிகல் எனும் விதிகளின் படி புணரும்.
7. பொருளிலக்கணம் இரண்டு வகைப்படும்.
8. அகத்திணைகள். ஏழு .வகைப்படும்.
9. மார்கழி, தை ஆகிய இரண்டும் முன்பனிக் காலத்திற்குரியன.
10. மருதநிலத்திற்குரிய தெய்வம் இந்திரன்
11. பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா, பருந்து
12. புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும்.
13. மண்ணாசைக் கருதிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை
14. பாடாண்திணை என்பது ஆண்மகனின் ஒழுகலாறுகள் கூறுவது
15. ஒரு தலைக்காமம் என்பது கைக்கிளை
16. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது காஞ்சி .ஆகும்.
17. உலகு என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச் சீராயின் அதன் வாய்பாடு பிறப்பு
18. நல்லவை – இச்சொல் அலகிட்டால் நேர்நிரை எனப் பிரியும்.
19. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீராய் வரும்
20. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு
கூடுதல் வினாக்கள் (பொதுத்தேர்வு வினாக்கள்)
21. கீழ்வருவனவற்றுள் பொதுமொழி அந்தமான்
22. கீழ்வருவனவற்றுள் பெயரெச்சத் தொடரை எடுத்து எழுதுக படித்த கயல்விழி
23. கீழ்வருவனவற்றுள் இனங்குறித்தல் சொல்லை எடுத்து எழுதுக கதிர்வேல் வெற்றிலை தின்றான்
24. எதிர்கால இடை நிலை அமைந்த வினைமுற்று படிப்பான்
25. தனிமொழியைத் தேர்ந்தெடு கண்
26. ஒருபொருட் பன்மொழியைத் தேர்ந்தெடு நடுமையம்
27. வடக்கு கிழக்கு எவ்வகைப் புணர்ச்சி என்று கூறுக திசைப்பெயர்ப்புணர்ச்சி
28. தலைவன் – இச்சொல்லில் பயின்று வரும் குறுக்கம் ஐகாரக் குறுக்கம்
29. ஒரு பொருட்பன்மொழியைத் தேர்ந்தெடு – குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன.
30. எதிர்கால இடைநிலை அமைந்த வினைமுற்று – வருவான்
31. ஈற்றில் ஐகாரம் குறைந்து வரும் சொல் திண்ணை
32. பொதுமொழியைத் தேர்ந்தெடு – தாமரை
33. ஒரு பொருட்பன்மொழிக்கு எடுத்துக்காட்டு – உயர்நதோங்கிய மரம்
34. குறிஞ்சி நிலத்துப் பறவைகள் கிளி, மயில்
35. வரும் வண்டி – இச்சொற்களில் வரும் குறுக்கம் மகரக் குறுக்கம்
36. கலா கலகலவெனச் சிரித்தாள் இதில் கல கல என்பது இரட்டைக்கிளவி
37. சிறப்பு என்னும் சொல் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச் சீராயின் அதன் வாய்பாடு பிறப்பு ஆகும்.
கோடிட்ட இடங்களை நிரப்புக
38. பூங்குழலி பொம்மை செய்தாள். இத்தொடரைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்போது, பொம்மை பூங்குழலியால் செய்யப்பட்டது என வரும்.
39. அழகன் பாடம் எழுதுகிறான். இத்தொடரில், ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் தனிநிலைத். தொடர் ஆகும்.
40. அன்பரசன் திருக்குறளைக் கற்றான். இத்தொடர் பிறவினையாக மாறும்போது, அன்பரசன் திருக்குறளைக் கற்பித்தான் என வரும்.
41. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி
42. தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல்
43. வினைமுற்று .தெரிநிலை, குறிப்பு என இருவகைப்படும்.
44. ஓர் எச்ச வினை பெயரைக் கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
45. ஒரு பொருள் குறித்துவரும் சொற்களையே ஒரு பொருட்பன்மொழி .என்பர்
46. ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று நடுமையம்.
47. இது செய்வாயா என்னும் வினாவிற்கு வயிறு வலிக்கும் எனக் கூறுவது உறுவது கூறல் விடை.
48. ஆடத் தெரியுமா என்னும் வினாவிற்குப் பாடத் தெரியும் எனக் கூறுவது இனமொழி விடை.
49. நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது கொளல் வினா.
50. அகம், புறம் ஆகிய இரண்டும் பொருள் இலக்கணம் ஆகும்.
51. குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும்
52. நெய்தல் திணைக்குரிய நிலப்பகுதி கடலும் கடல் சார்ந்த பகுதியாகும்.
53. யாமம் என்பது இரவு 10 மணிமுதல் இரவு 2 மணி வரை ஆகும்.
54. மருதம், நெய்தல் ஆகிய இரண்டனுக்கும் ஆறு பெரும்பொழுதுகளும் வரும்.
55. திருமால் முல்லை நிலத்திற்குரிய தெய்வம்.
56. மணமுழா, நெல்லரிகிணை ஆகிய இரண்டும் மருதம் திணைக்குரிய பறைகள்.
57. நெய்தல் திணைக்குரிய தொழில் .மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் .ஆகும்.

Comments
Post a Comment