ஏழு இல்லைங்க.....எட்டு.....

'எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் உள்ள, பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் நடத்தியது. அதில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, ஜனவரி முதல் வழங்கும் வகையில், உடனடியாக, எட்டாவது ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது.

'மேலும், 2003 ஏப்., 1க்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்; அதுபற்றி ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, தன் அறிக்கையை, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கம்ப்யூட்டர் சொற்கள் தமிழில்