U.N. செயலாளர்களை தேர்வு செய்யும் முறை
ஐ.நா. செயலாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?
உலகில் போர்கள் ஏற்படாமல் தடுத்து, அமைதியை நிலைநாட்டி, உலக மக்கள் அனைவரும் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதை உறுதி செய்யும் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை எனப்படும் (United Nations Organisation / 'யுனைடட் நேஷன்ஸ் ஆர்கனைசேஷன்')- ஐ.நா. அமைப்பு. உலகின் 196 நாடுகளில், 193 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள்.
இதன் செயல்பாடுகள் முழுவதையும் நிர்வகித்து, உலக நாடுகளை ஒருங்கிணைப்பவர், பொதுச் செயலாளர் (General Secretary - ஜெனரல் செக்ரட்ரி) என்று அழைக்கப்படுகிறார்.
ஐ.நா. செயலாளருக்கான தகுதிகள்
* உலக அமைதிக்கான முதல் தூதராக செயல்படும் திறன்.
* தலைமைப் பண்பு, உலக அரசியல் அறிவு, அரசியல் செல்வாக்கு, உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றும் பக்குவம், ஐ.நா. அலுவலக மொழிகளில் ஆளுமை ஆகியவை முக்கிய தகுதிகள்.
* ஐ.நா. பொதுச் செயலாளரின் அதிகாரம் குறைவுதான். இருப்பினும், நெருக்கடியான சமயங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியை நிலைநாட்டும் பக்குவம் வேண்டும்.
* நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள், அண்டை நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் என பலவற்றுக்கும் ஒருங்கிணைப்பாளராக இருந்து தீர்வை முன்மொழியும் திறன் அவசியம்.
தற்போதைய செயலாளர் பான் கி மூனின் (Ban Ki- Moon) பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ல் நிறைவடையும் நிலையில்,
9 ஆவது செயலருக்கான தேர்வு பல கட்டங்களாக நடைபெற்றது.
ஏழு பெண்கள் உட்பட
13 நபர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் வெற்றிபெற்று அடுத்த செயலர் ஆகி இருக்கிறார், போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர், அந்தோனியோ கட்டெரெஸ் (Antonio Guterres).
ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்தவர், பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. போர்ச்சுகல் நாட்டில் சர்வாதிகாரம் வீழ்ந்து ஜனநாயகம் மலர்ந்த 1976 ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் அரசியலில் பங்கு பெற்று வந்தவர், கட்டெரெஸ். 1996ல் இருந்து 2002ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்தார்.
கடந்த 2005 ஜூனில் ஐ.நா. சபை அகதிகள் அமைப்பின் (United Nations High Commissioner for Refugees - யுனைடட் நேஷன்ஸ் ஹை கமிஷ்னர் ஃபார் ரெப்யூஜீஸ் - UNHCR) தலைவராகப் பணியாற்றினார்.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தனது முதல் பணித்திட்டமாக இருக்கும் என்கிறார், புதிய செயலர்.
செயலாளர் நியமனத்தில் பாலின சமத்துவம் காட்டப்படவேண்டும் என்று ஐ.நா. விதிகள் சொல்லியபோதும், இதுவரை செயலாளர் பதவிக்கு ஒரு பெண் கூட நியமிக்கப்பட்டதில்லை.
1945ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 8 பொதுச் செயலாளர்கள் பதவி வகித்துள்ளார்கள். ஐ.நா. அமைப்பில் முக்கிய சக்திகளாக விளங்கும் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளிலிருந்து ஒரே ஒருவர்தான் வந்துள்ளார். மற்றவர்கள் பிற நாடுகளை சேர்ந்தவர்கள்.
அந்தோனியோ கட்டெரெஸ் போர்ச்கீஸ், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர்.
மேலை நாடுகள் சிரியா நெருக்கடியில் சிக்கிய போர் அகதிகளை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து வாதாடி வந்தார்.
அகதிகள் பிரச்னையைக் கையாள, ஐ.நா.வின் களப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்.
ஐ.நா. செயலாளர்கள் இதுவரை...
அக்.,1945 - பிப்., 1946 - கிளாட்வின் ஜெப் (Gladwyn Jebb) இங்கிலாந்து
2.2.1946 - 10.11.1952 - டிரிக்வி லீ (Trygve Lie) நார்வே
10.4.1953 - 18.11.1961 - டேக் ஹம்மர்ஸ்கோள்ட் (Dag Hammarskjöld) ஸ்வீடன்
30.11.1961 - 31.12.1971 - யூ தாந்த் (U Thant) மியான்மர்
1.1.1972 - 31.12.1981 - குர்த் வால்ட்ஹெய்ம் (Kurt Waldheim) ஆஸ்திரியா
1.1.1982 - 31.12.1991 - ஜாவியர் பெரேஸ் டிசெல்லர் (Javier Pérez de Cuéllar) பெரு
1.1.1992 - 31.12.1996 - புட்ரோஸ் புட்ரோஸ் காலி (Boutros Boutros-Ghali) எகிப்து
1.1.1997 - 31.12.2006 - கோஃபி அன்னான் (Kofi Atta Annan) கானா
1.1.2007- 31.12.2016 - பான் கி மூன் Ban Ki-Moon தென் கொரியா
1.1.2017 - அந்தோனியோ கட்டெரெஸ் (Antonio Guterres) போர்ச்சுகல்

Comments
Post a Comment