குரூப் 4 தேர்வு எழுதுவோர்களே.... இது உங்களுக்கான பதிவு...

குரூப்-4 தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.


இந்த சில நாட்களில் புதிதாக படிப்பதை தவிர்த்து நிறைய மாதிரித்தேர்வு பயிற்சி செய்வதே சிறந்த வழி.
#செய்ய_வேண்டியவை
=> குறைந்தபட்சம் 20 மாதிரித்தேர்வுகள் வரை எழுதிப்பார்க்கலாம்
=> அசல் தேர்வு பற்றிய பயத்தை நீக்க வேண்டும்
=> நேரத்தை கையாளும் திறன் தெரிந்துகொள்ள வேண்டும்
=> ஏதேனும் பகுதிகள் அரைகுறையாக படித்திருந்தால் அதை மீண்டும் படிக்கவேண்டும்
=> நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத்தமிழ் சம்பந்தமான கேள்விகளை திரும்ப படிக்கவேண்டும்
=> மாதிரித்தேர்வில் ஏற்படும் பிழைகள் அனைத்தும் பொதுத்தேர்வில் வராதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்
=> தன்னம்பிக்கை, உறுதி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்
=> அரசு வேலை ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொள்ள வேண்டும்


#செய்ய_கூடாதவை
(*) தேர்வு பற்றிய எதிர்மறை எண்ணம் இருத்தல் கூடாது
(*) மாதிரித்தேர்வில் மதிப்பெண் குறைவு என உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடக் கூடாது
(*) பாடத்திட்டம் முழுமையாக படிக்கவில்லை என அங்கும் இங்குமாக படிக்கவேண்டாம். படித்த பகுதியை மீண்டும் படித்தாலே போதுமானது
#வாழ்த்துகள்

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்