ARO இது உங்களுக்கான பதிவு

*(ARO) ஏ.ஆர்.ஓ.க்களின் கவனத்திற்கு !!!*

03.10.2016:
வழக்கம்போல படிவம் 4-ஐ பூர்த்தி செய்திட வேண்டும்.
படிவம் 5-ல் 26.09.2016 முதல் 03.10.2016 முடிய   படிவம் 4-ல் உள்ள  விபரங்களை ஒருங்கிணைத்து ( தொகுத்து)  ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக எழுத வேண்டும்

04.10.2016:
படிவம் 6-ல்
(செல்லத்தக்க வேட்புமனுக்களின் பட்டியலில்) வேட்பாளர்களின் பெயர்களை *தமிழ் அகரவரிசைப்படி* (ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியே) எழுதவேண்டும்.

06.10.2016:
வாபஸ் முடிந்த பிறகு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை துண்டுச்சீட்டில்  எழுதி குலுக்கலில் எடுக்கப்பட்ட வரிசை முறையிலேயே இணைப்பு 4-ல் வேட்பாளர்களின் பெயர்களை எழுதி சின்னங்களின் பட்டியலில் உள்ள வரிசைப்படி சின்னங்களை ஒதுக்க வேண்டும்.

உதாரணமாக குலுக்கலில் (குலுக்கல் சீட்டு ) *முதலில் வரும் வேட்பாளருக்கு* திறவுகோல்,

2-வது வரும் நபருக்கு சீப்பு,

3-வது நபருக்கு கட்டில்,

4-வது நபருக்கு கார்,

5-வது நபருக்கு சங்கு.

இவ்வாறு *ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக சின்னங்களை ஒதுக்கீடு செய்து இணைப்பு 4-ல் அந்த வேட்பாளருக்கு நேரே அந்தந்த வேட்பாளரிடம் ஒப்புதல் கையொப்பம்* பெற வேண்டும் .

இதே வரிசையில் படிவம்
-9 ஐ (போட்டியிடும்
வேட்பாளர் பட்டியலை)
பூர்த்தி செய்திட வேண்டும்.

இந்நிகழ்வு ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக செய்யப்பட வேண்டும்.
*எக்காரணம் கொண்டும் சின்னங்களின் பெயர்களை எழுதி குலுக்கக் கூடாது.*

*வேட்பாளர்களின் பெயர்களைத்தான் எழுதி குலுக்க வேண்டும*்.

சின்னங்களின் வரிசை எப்பொழுதும் மாறாது.

 உதாரணமாக தமிழ்நாடு முழுக்க சிற்றூராட்சி (கிராம) வார்டுக்கான வாக்குச்சீட்டில் சின்னங்கள் திறவுகோலில் ( சாவி) இருந்துதான் துவங்கும்.

*அரசாணைகளிலிருந்து தகவல் பகிர்வு*

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கம்ப்யூட்டர் சொற்கள் தமிழில்