நடப்பு நிகழ்வுகள் 22/10/2016
தமிழகம்
1.தமிழக அரசு வெள்ள பாதிப்புகளைத் தடுக்க 20 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.‘தன்வந்திரி’ என்ற பெயரில் இந்தியாவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்துக்கான செல்போன் செயலி (ஆப்ஸ்) கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ மற்றும் ‘ஐஓஎஸ்’ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3.திருநங்கை நர்த்தகி நடராஜுக்கு, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார்.திருநங்கைகளில் முதன்முதலில் பாஸ்போர்ட் பெற்றவர், முதன்முதலில் தேசியவிருது பெற்றவர், முதன்முதலில் கலைமாமணி விருது பெற்றவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.அக்கய் பத்மசாலி என்ற திருநங்கை இந்திய அளவில் முதன் முதலாக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்தியா
1.காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி அந்த கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
உலகம்
1.வடகொரியா கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நடத்திய ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.வடகொரியா இந்த வாரத்தில் நடத்திய இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.தென்கொரியா தரப்பில் இந்த தகவல் வெளியிடப்படுள்ளது.
2.பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சீனாவுடன் நிலவும் தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

விளையாட்டு
1.உலகக் கால்பந்து அணிகள் தரவரிசைப் பட்டியலை உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ளது.இதில்,இந்திய அணி 11 இடங்கள் முன்னேறி 137-வது இடத்தை பிடித்துள்ளது.
2.பிசிசிஐ தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முறை (டிஆர்எஸ்) பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
3.இந்தியா – பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களின் சார்பாக மலேசியாவில் வீல் சேர் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.மூன்று டி-20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

Comments
Post a Comment