போட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ள வேண்டியவை

போட்டி தேர்வில் வெற்றி பெற நினைவில் கொள்ளுங்கள் !

• பொது அறிவை வளர்க்க ஒரு எல்லை இல்லை. எனவே பார்ப்பது,படிப்பது,கேட்பது அனைத்துமே இதில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட புத்தகம் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அப்புத்தகம் அனைவரும் கையில் வைத்திருப்பர். Best Seller வரிசையில் விவிலியத்திற்கு அடுத்தபடியாக அப்புத்தகம் விற்று தீர்ந்திருக்கும்.
• வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் எல்லை. நீங்கள் தீர்க்கும் வழிமுறையே உங்களுக்கான சூத்திரம். நீங்கள் வகுப்பதே பாதை
• இது ஒரு மாரத்தான் போட்டி.. நீண்ட பயணம்.. கடைசி வரை அயர்வு இல்லாமல் ஓட வேண்டி இருக்கும்.. முடியாதவர்கள் இடையில் விலக நேரிடும்

• உளவியல் சோதனை+,அறிவு சோதனை+தகுதி சோதனை இந்த மூன்றும் இங்கே பரிசோதிக்கபடும்... மூன்றில் ஒன்று இல்லாமல் போனால் கூட வெற்றி வாய்ப்பை நழுவ வேண்டி வரும். ஆனால் இம்மூன்றும் வளர்க்கப்பட வேண்டியவே தவிர பிறப்பால் வருவது அல்ல
• ஆங்கிலமோ தமிழோ..முதல் தலைமுறை பட்டதாரியோ அல்லது பத்தாவது தலைமுறை பட்டதாரியோ. பொறியியலோ,கலை அறிவியலோ...அரசு அதுவெல்லாம் பார்ப்பது இல்லை.. அனைவரும் போட்டி தேர்வு என்ற குடையின் ஒரே கீழ் தான். இத்தேர்வே உங்களின் உள்ளார்ந்த திறன்களை சோதிக்கிறது
• வயது ஒரு விஷயமல்ல.. விஷயமே ஒருவரை ஒருவர் முந்துவதில் மட்டுமே இருக்கிறது. ஒட்டபந்தயத்தில் தூரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஓடுபவர் வயது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை
• போட்டி தேர்வு என்பது சமுதாய நலனுக்கு உங்கள் மூலம் பங்களிப்பு செய்ய அரசு கொடுக்கும் ஒரு விசா. மார்தட்டிக் கொள்ளும் விஷயம் அல்ல. நீங்கள் அரசுப்பணியில் சேர்ந்த பிறகு நீங்கள் செய்யும் நற்செயல்களை கொண்டு உங்கள் பேரை மக்கள் மார்தட்டிக் கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்