தமிழில் No நுழைவு தேர்வு

தமிழில் நுழைவுத்தேர்வு கோரிய மனு தள்ளுபடி
அகில இந்திய பொறியியல், மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழ் மொழியில் நடத்தக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த கே.பச்சைமால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
2012-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “இந்தியஅளவில் நடத்தப்படும் பொறியியல்/ கட்டிட வரைகலை (ஏஐஇஇஇ)நுழைவுத் தேர்வு, அகில இந்திய மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளிலும் வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுச் செயலர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், சிபிஎஸ்இ சேர்மன் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற கிளையின் முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (என்இஇடி) முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வு முறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், இந்த மனு காலாவதியாகிவிட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்