மனப்பாடம் செய்வதற்கு டிப்ஸ்

மனப்பாடம் செய்வதற்கு இதோ சில டிப்ஸ்...

ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கும்போது, அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே, வினா விடைகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டு படிப்பது நல்லது. ஒரே நேரத்தில் படித்து, வரி பிசகாமல் சொல்லிவிட்டா லும், இரண்டொரு நாளில் மறந்துவிடும் சாத்தியம் உண்டு. எனவே, படித்த பாடம் மறக்காமல் இருக்க, அதை அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துப் படிப்பதே சிறந்த வழி!

சிறிய செய்யுள் அல்லது சிறிய விடைகளை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். பெரிய செய்யு ளையோ, பெரிய விடையையோ கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். பெரிய விடை-களை முதலில் பகுதி பகுதியாகப் படித்து-விட்டு, பின்னர் முழுமையாகப் படித்தால் நன்கு மனப்பாடம் ஆகும்.

நாம் படித்ததை நாமே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்க வேண்டும். எங்கெங்கே திணறுகிறதோ அந்தப் பகுதிகளை மீண்டும் படித்து ஒப்பித்துப் பயிற்சி செய்யலாம். அவ்வப்போது எழுதிப் பார்த்தும் பயிற்சி செய்-தால், விடைகள் நன்கு மனதில் பதிவ-துடன், தேர்வில் மளமளவென்று எழுதி முடிக்க முடியும்.

நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்-களுக்குத் தொடர்புடைய பொரு-ளையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை.

உதாரணத்துக்கு, வானவில்லின் நிறங்களை நினைவில் வைத்துக்கொள்ள VIBGYOR என்கிற வார்த்தையை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும்... வானவில்லின் நிறங்களை சட்டென்று நினைவுக்குக் கொண்டுவந்து விடலாம்

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்