தட்டச்சு தேர்வில் மயிலாடுதுறை மாணவி முதலிடம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை மூலம் நடத்தப்பட்ட தட்டச்சுத் தேர்வில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவி கே.வினோதினி (படம்) மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையின் தட்டச்சுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மயிலாடுதுறை ராஜம் தட்டச்சுப் பயிலகத்தில் பயின்ற மாணவி கே.வினோதினி, ஆங்கிலம்- முதுநிலைப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இதையொட்டி, மாணவி கே.வினோதினிக்கு, ராஜம் தட்டச்சுப் பயிலக உரிமையாளர்கள் வி.கல்யாணசுந்தரம், ஜலஜா மற்றும் பயிற்றுநர்கள், மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த தட்டச்சுப் பயிலகத்தில் பயின்ற இரா.மகாதேவன் (தமிழ்- இளநிலை), மதுரநாயகி (ஆங்கிலம்- இளநிலை), குமார் (ஆங்கிலம்- முதுநிலை) ஆகியோர் ஏற்கெனவே மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்