TNPSC கணிதம் - தனி வட்டி
தனிவட்டி(SIMPLE INTEREST) முதலில்,உங்களை கடுப்பேற்றும் ஒரு செயலை செய்யச்சொல்லப்போகிறேன்.வேறொன்றுமில்லை,அது FORMULA என்று கூறப்படும் வாய்பாட்டை மனப்பாடம் செய்தலே ஆகும்.கிட்டதட்ட,தனிவட்டி கணக்குகளில் ஐந்து வகையான வாய்பாடுகளை மனப்பாடம் செய்தாலே போதும்,ஒரு மார்க் அழகாக பெற்றுவிடலாம்.ஒரு மார்க்தானே,போனால் போகிறது என விட்டால்,உங்களின் ரிசல்ட் சமயத்தில் நீங்கள் அடையும் வலி அந்த ஒரு மார்க்கினால் கூட இருக்கலாம்.எனவே,முடிந்த வரை மனப்பாடம் செய்துவிடுங்கள்.அவ்வளவு கடினமான வாய்பாடு,தனிவட்டிக்கு இல்லை. எ.கா.1 ஒருவர் ரூ.60000-ஐ 10% தனிவட்டிக்கு,2 ஆண்டுகளுக்கு கடனாக வாங்கினார் எனில்,அவர் கொடுக்கும் வட்டித்தொகை எவ்வளவு? இதில், அசல் (P) = 60000 காலம் (T) = 2 வட்டிவீதம் (R) = 10% So, அவர்,2 ஆண்டுகளில்,60000ரூ.க்கு 10% வட்டிக்கு கொடுக்கும் தனிவட்டி ரூ 12,000 ஆகும். சரி,இப்போது மேலே அசல்,காலம்,வட்டிவீதம் கொடுத்து தனிவட்டி கேட்டார்கள்.அதற்கு பதில் தனிவட்டி ...
Comments
Post a Comment