தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க வேண்டுமா!!!
ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகவும், அறிவு மொழியாகாவும், நாகரிக மொழியாகவும் மாறிவிட்ட இக் கால கட்டத்தில்; ஒளிமயமான எதிகாலம் அமைய வேண்டு்மென விரும்பும் ஒவ்வொருவரும் ஆங்கில மொழியறிவு பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. உயர்கல்வி கற்கவும்; பல இன மக்களுடன் கலந்துரையாடவும், தொழில் புரியவும்; பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும்; வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளவும் ஆங்கிலமொழி அறிவு மிகமிக அவசியம்.
ஐந்தறிவு படைத்த செல்லப் பிராணிகளும், மிருகங்களும் ஆங்கிலத்தை புரிந்து செயல்படும்போது ஆறறிவு படைத்த நாம் அதனைக் கற்றுக்கொள்ள தயக்கம் காட்டலாமா? முயற்சி செய்து பாருங்கள் உங்களால் முடியும். அடிப்படை ஆங்கில இலக்கண அறிவை பெற்றுக் கொண்டால், மிகுதி தானாக வரும். அடிப்படை ஆங்கில இலக்கண அறிவை பெற்றுக்கொள்ள விரும்பும் தமிழ் மாணவர்களுக்கு உதவும்முகமாக ஆங்கில இலக்கண கட்டமைப்பை (அதில் உள்ள நுணுக்கங்களை) எமது அறிவுக்கு எட்டியவரை இக் கட்டுரை மூலம் விளக்கம்தர முனைகின்றோம். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
தமிழ்மொழியில் அமைந்திருப்பது போன்று ஆங்கிலத்திலும் இலக்கண விதிகள் இருக்கின்றன. அவற்றை விளங்கிக் கொண்டால் ஆங்கிலம் தவறின்றி பேசவும், எழுதவும் முடியும். நாம் அனுபவ மூலம் கற்றுக் கொண்ட நுணுக்கங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆங்கிலம் ஒரு அன்னிய மொழியாக இருப்பதனால் ஆங்கிலச் சொற்களை அதன் கருத்துக்களுடன் மனப்பாடம் செய்தே ஆகவேண்டும். அதனை மனப்பாடம் செய்து கொள்வது உங்கள் பொறுப்பு. எவ்வளவு சொற்கள் உங்களுக்குத் தெரியுமோ அவ்வளவுக்கு நீங்கள் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெறலாம். ஆங்கிலச் சொற்களுக்கும் ஒரு சொல்லுக்கு பல கருத்துகள் இருக்கின்றன. அதுபோல் பல சொற்கள் ஒரு கருத்தைக் கூறும். அவைகளை எங்கே, எப்பொழுது, எப்படிப் பாவிப்பது என்ற விதிமுறைகளை வெளிப்படுத்துவதுதான் இலக்கணம்.
ஆங்கில மொழி (ஆங்கிலச் சொற்களுக்கு சரியான கருத்து) தெரிந்தால்தான் இலக்கணத்தை பிரயோகித்து சரியான வாக்கியங்கள் அமைத்து கதைக்க, எழுத முடியும். அன்றாடம் ஆங்கிலத்தில் பாவிக்கும் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், பெயருரிச் சொற்கள், வினையுரிச் சொற்கள், இணைக்கும் சொற்கள் அதன் தமிழ் கருத்துக்களுடன் படிப்படியாக இணைக்கப்பெறும். அவற்றை முதலில் மனப்பாடம் செய்து, எழுதிப் பழகி, அதனை உரக்க சொல்லிப் பழகி (படத்தில் காட்டியதெரு வீதி விளக்கில்) "தமிழ் மூலம் ஆங்கிலம்" பகுதியில்இலக்கணம் கற்றுக்கொள்ளலாம்.
" செந்தமிழ் போல் ஆங்கிலமும் நாப்பழக்கம்" சொல்லச் சொல்ல தானாக வரும் - சொல்ல வெட்கப்பட்டால் அதுவும் வெட்கப்படும்
தமிழில் வாக்கிய அமைப்பு:
எழுவாய் + செயப்படுபொருள் + வினைச்சொல் என அமையும். செயப்படு பொருள் இன்றியும் அமையலாம்.
எழுவாய் + செயப்படுபொருள் + வினைச்சொல் என அமையும். செயப்படு பொருள் இன்றியும் அமையலாம்.
ஆங்கில வாக்கியம்:
ஆங்கில வாக்கியங்கள் தமிழ் வாக்கியங்கள் போல் அல்லாது சிறிது வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
ஒரு வாக்கியமானது எப்பொழுதும் எழுவாயையும், பயனிலையையும் கொண்டிருக்கும். அனேகமாக அவற்றுடன் செயப்படுபொருளும் இணைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பு:
Subject + verb + object - எழுவாய் + வினைச்சொல் + செயப்படுபொருள் என அமைகின்றது.
சில சந்தற்பங்களில் விதிவிலக்காக வேறு சொற்களும் முன்னால் அமைவது உண்டு. அவை பின்னர் படிப்படியாக விளக்கப்பெறும்.
Subject + verb + object - எழுவாய் + வினைச்சொல் + செயப்படுபொருள் என அமைகின்றது.
சில சந்தற்பங்களில் விதிவிலக்காக வேறு சொற்களும் முன்னால் அமைவது உண்டு. அவை பின்னர் படிப்படியாக விளக்கப்பெறும்.
சாதாரண வினா வாக்கியங்களில் எழுவாயும் வினைச் சொல்லும் இடம் மாறி அமைந்திருக்கும். அதாவது:
வினைச்சொல் + எழுவாய் + செயப்படுபொருள் - Verb + subject + object என அமையும்.
இவைதவிர வினாச் சொற்களும், துணை வினைச் சொற்களும் வினாவாக்கியங்களில் முன்னால் பாவிக்கப் பெறுகின்றன. அவை பற்றியும் பின்னர் விளக்கப்பெறும்.

ஒரு வாக்கியமானது; ஒரு செய்தியை, நிகழ்வைக் கூறுவததாக அமையும். அதுவும் இரு வித்தியாசமான முறையில் கூறப்பெற்றிருக்கும். அதாவது; செய்வினை, செயப்பாட்டுவினை என தமிழ் இலக்கணத்தில் கூறப்பெற்றுள்ளது போல். அதனை ஆங்கிலத்தில் active voice, passive voice என அழைப்பார்கள்.உதாரணமாக: active voice - கந்தன் வாகனத்தை ஓட்டினான்.passive voice - கந்தனால் வாகனம் ஓட்டப் பெற்றது. இவை பற்றி பிற்பகுதியில் அவ்வப்போது விளக்கப் பெறும்.
வாக்கியத்தின் ஆரம்ப எழுத்தானது எப்பொழுதும் CAPITAL letter பெரிய எழுத்தில் அமைதல் வேண்டும் என்பது இலக்கண விதி.
சாதாரண நேர்மறை வாக்கியமாயின் முடிவு full stop/period ( . )உடனும்; வினா வாக்கியமாயின் question mark ( ? ) உடனும்;ஆச்சரிய வாக்கியமாயின் exclamation mark (! ) உடனும் நிறைவு பெறுதல் வேண்டும்.
சாதாரண நேர்மறை வாக்கியமாயின் முடிவு full stop/period ( . )உடனும்; வினா வாக்கியமாயின் question mark ( ? ) உடனும்;ஆச்சரிய வாக்கியமாயின் exclamation mark (! ) உடனும் நிறைவு பெறுதல் வேண்டும்.
ஆங்கில வாக்கியங்களில் அமையும் சொற்களை 8 வகையாக வகைப்படுத்தி உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் பல உப--பிரிவுகளைக் கொண்டது. அவை படிப்படியாக பின்னர் விளக்கப் பெறும்.
அவை ஒவ்வொன்றும் பல உப--பிரிவுகளைக் கொண்டது. அவை படிப்படியாக பின்னர் விளக்கப் பெறும்.
1. Nouns – பெயர்சொற்கள்
2. Verbs – வினைச்சொற்கள்
3. Adjectives – பெயருரிச்சொற்கள்
4. Adverbs – வினையுரிச்சொற்கள்
5. Pronouns – பிரதிப் பெயர் சொற்கள்/சுட்டுப்பெயர்ச்சொற்கள்
6. Prepositions – முன்னிடைச்சொற்கள்
7. Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
8. Interjections – வியப்பிடைச்சொற்கள்

Noun – பெயர்ச்சொல்:
பெயர்ச் சொல் என்பது; ஒருவரை, அல்லது பொருளை, இடத்தை, காலத்தை, உறுப்புகளை, குணத்தை (தன்மையை), தொழிலைக் குறிப்பதாக அமையும்.
உதாரணம்: Kanthasaamy, Table, Temple, Jaffna, Morning, December, Leg, Red, Farmer

Pronoun- பிரதிப் பெயர்ச் சொல்/சுட்டுப் பெயர்ச் சொல்:
வாக்கியங்கள் அமைக்கப் பெறும் பொழுது அவ் வாக்கியத்தின் எழுவாயாக இருக்கும் ஒருவரை அல்லது ஒரு பொருளை; அவற்றின் சொந்தப் பெயரை குறிப்பிடாது, அதற்கு பதிலாக அதனை சுட்டிக் காட்டும் சொல் பிரதிப் பெயர்ச்சொல் அல்லது சுட்டுப்பெயர்ச் சொல் என அழைக்கப் பெறுகின்றது. அவற்றை 4 வகையாகப் பிரிக்கலாம்.

உதாரணம்: I, you, he, him; who, which; somebody, anything
இடம்
|
தன்மைஒருமை
|
முன்னிலைஒருமை
|
படர்க்கைஒருமை
|
தன்மைபன்மை
|
முன்னிலைபன்மை
|
படர்க்கைபன்மை
|
வினாச் சொற்கள்
|
Nominative Pronoun
|
I
|
you
|
he, she, it
|
we
|
you
|
they
|
who?
|
Objective Pronoun
|
me
|
you
|
him, her, it
|
us
|
you
|
them
|
whom?
|
Possessive Pronoun
|
my
|
your
|
his, her, its
|
our
|
your
|
their
|
Whose?
|
Reflexive Pronoun
|
myself
|
yourself
|
himself, herself, itself
|
ourselves
|
yourselves
|
themselves
| |
Pronominal Adjective
|
mine
|
yours
|
ours
|
yours
|
theirs
|
Pronouns - பிரதிப் பெயர்ச் சொற்கள்/சுட்டுப் பெயர்ச் சொற்கள்Preposition னை முன்னால் பெற்று செயப்படு பொருளாக செயல்பெறுகின்றன.
நான்
I
|
என்னை
me
|
என்னிடம்
me
|
எனக்கு to me
|
எனக்காக for me
|
என்னுடன் with me
|
என்னால் by me
|
நீ You
|
உன்னை
you
|
உன்னிடம்
you
|
உனக்கு to you
|
உனக்காக for you
|
உன்னுடன்with you
|
உன்னால்
by you
|
நீங்கள் You
|
உங்களை
you
|
உங்களிடம்you
|
உங்களுக்கு
to you
|
உங்களுக்காகfor you
|
உங்களுடன்with you
|
உங்களால்
by you
|
நீர் You
|
உம்மை
you
|
உம்மிடம்
you
|
உமக்கு to you
|
உமக்காக for you
|
உம்முடன் with you
|
உம்மால்
by you
|
அவன் He
|
அவனை
him
|
அவனிடம்
him
|
அவனுக்கு to him
|
அவனுக்காக for him
|
அவனுடன் with him
|
அவனால்
by him
|
அவள் She
|
அவளை
her
|
அவளிடம்
her
|
அவளுக்கு to her
|
அவளுக்காக for her
|
அவளுடன்with her
|
அவளால்
by her
|
அவர்கள் They
|
அவர்களை them
|
அவர்களிடம்them
|
அவர்களுக்குto them
|
அவர்களுக்காகfor them
|
அவர்களுடன்with them
|
அவர்களால்
by them
|
அது It
|
அதனை It
|
அதனிடம்
it
|
அதற்கு to it
|
அதற்காக for it
|
அதனுடன்with it
|
அதனால்
by it
|
அவைகள் They
|
அவைகளைthem
|
அவைகளிடம்them
|
அவைகளுக்குto them
|
அவைகளுக்காகfor them
|
அவைகளுடன்with them
|
அவைகளால்by them
|
Adjective – பெயரெச்சம், பெயருரிச்சொற்கள்:பெயர்ச் சொல்லினை அல்லது பிரதிப் பெயர்ச் சொல்லின் குணத்தை அல்லது தன்மையை மேலும் வியந்து கூறும் அல்லது விவரிக்கும் சொற்கள் Adjective பெயருரிச் சொற்களாகும்.
உதாரணமாக: honest – நேர்மை, red – சிகப்பு, yellow – மஞ்சள், beautiful – அழகான, big – பெரிய, small - சிறிய
Adverbs - வினையெச்சம்
வினையெச்சங்கள் முக்கியமாக ஒரு வினையின் அல்லது நிகழ்வின் தன்மையை விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் ஆகும். இவை பொதுவாக ஒருவர் அல்லது ஒரு பொருள் எப்படி நிகழ்வை செய்தது என்பவற்ரை விளக்கமாக கூற உபயோகிக்கப் பெறுகின்றது. இவற்றை வினையெச்சச்சொற்கள், வினையுரிச் சொற்கள் என பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கின்றனர்.

உதாரணம்: quickly, patiently, unfortunately
வினைச் சொற்களை பலவிதமாக வகைப்படுத்தலாம்.
Base Verbs - அடிப்படை வினைச் சொற்கள்
Regular Verbs - ஒழுங்கான வினைச் சொற்கள்
Irregular Verbs - ஒழுங்கற்ற வினைச் சொற்கள்
Auxiliary Verbs - துணை வினைச் சொற்கள்
Modern/Model Auxiliary Verbs – மொடேண் துணை வினைச் சொற்கள்
Regular Verbs - ஒழுங்கான வினைச் சொற்கள்
Irregular Verbs - ஒழுங்கற்ற வினைச் சொற்கள்
Auxiliary Verbs - துணை வினைச் சொற்கள்
Modern/Model Auxiliary Verbs – மொடேண் துணை வினைச் சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
ஒரு சாதாரண வினைச் சொல்லானது வாக்கியத்தில் அமையும் போது அந்த வாக்கியத்தில் உள்ள "எழுவாய் “subject” எந்த சூழ் நிலையில் செயல் பெற்றது என்பதை உணர்த்துவதற்காக; (நிகழ் - இறந்த - எதிர் (Simple Present, Simple Past, Simple Future )காலத்தையும்; (தன்மை-முன்னிலை -படற்கை என்ற) இடத்தையும்; ஒருமையா- பன்மையா என்பதனையும் காட்டுவதற்காக பல மாற்றங்களைப் பெறுகின்றது. (மாற்றம் பெற்ற வினைச் சொற்களின் தொகுப்பு பிற்பகுதியில் இணைக்கப் பெற்றுள்ளது)

வினைச் சொற்கள் வாக்கியங்களில் காலத்தைக் காட்டுவதால்; காலங்கள் பற்றி அறிதல் முக்கியமாகின்றது. தமிழ் மொழியில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்காளில் வாக்கியங்கள் அமைகின்றன. ஆனால்; ஆங்கிலத்தில் அவை மூன்றும் மேலும் நான்கு பிரிவுகளாக பிரிந்து, நிகழ்வின் காலத்தை மிகவும் துல்லியமாக காட்டுகின்றது. அவையாவன:
Present Tense - நிகழ்காலம் :
Simple Present Tense - சாதாரண நிகழ்காலம் E.g. I drive my car every Friday
Present Continuous - நிகழ்கால தொடர்விணை E.g. I am driving my car now
Present Perfect - நிகழ்கால வினைமுற்று E.g. I have just driven my car
Present Perfect Continuous - நிகழ்கால வினைமுற்றுத் தொடர் E.g. I have been driving my car for 2 hours

Past Tense - இறந்தகாலம் :
Simple Past Tense - சாதாரண இறந்தகாலம் E.g. I drove my car yesterday
Past Continuous - இறந்தகால தொடர்விணை E.g. I was driving my car whole evening
Past Perfect - இறந்தகால வினைமுற்று E.g. I had driven my car when Agilan came
Past Perfect Continuous - இறந்தகால வினைமுற்றுத் தொடர் E.g. I had been driving my car when Agilan came

Future Tense - எதிர்காலம் :
Simple FutureTense - சாதாரண எதிர்காலம் E.g. I will drive my car next week
Future Continuous - எதிர்கால தொடர்விணை E.g. I will be driving my car next Sunday
Future Perfect - எதிர்கால வினைமுற்று E.g. I will have driven my car by tomorrow
Future Perfect Continuous - எதிர்கால வினைமுற்றுத் தொடர் E.g. I will have been driving my car for an hour by 4.30

Present Continuous, Past Continuous, Future Continuous, Present Perfect, Past Perfect, Future Perfect, Present Perfect Continuous, Past Perfect Continuous, Future Perfect Continuous; ஆகிய காலங்களை காட்டுவதற்காக; Auxiliary Verbs என்னும் துணை வினச்சொற்கள் (be, do, have, will) வாக்கியங்களில் இணைத்துக் கொள்ளப்பெறுகின்றன.
இந்த துணை வினச் சொற்களில் be, do, have என்பன தனித்து பிதான வினைச் சொல்லாகவும், துணை வினச் சொல்லாகவும் செயல் பெறக்கூடியவை. ஆனால் எதிர்காலத்தை காட்டிநிற்கும் “ will ” என்ற துணை வினைச் சொல்லை, வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லாக பாவிக்க இயலாது. துணை வினைச்சொல்லாகவே செயல்பெறும்.
இவை தவிர - Modern Auxiliary Verbs விசேஷ துணை வினைச் சொற்களான can, will, shall, must, may, could, shall, might, wouldஎன்பவும் வாக்கியங்களில் பிரதான வினைச்சொல்லுடன் இணைந்தும் செயல் பெறுகின்றன.
விசேஷ துணை வினைச் சொற்கள் - Modern Auxiliary Verbs:
விசேஷ துணை வினைச் சொற்கள்வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் போல் ஒருபொழுதும் தனித்து இயங்காது.
விசேஷ துணை வினைச் சொற்கள் எப்பொழுதும் வாக்கியத்தில் பிரதான வினைச் சொலிற்கு முன்னால் அமையும்.
விசேஷ துணை வினைச் சொற்கள்வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் போல் ஒருபொழுதும் தனித்து இயங்காது.
விசேஷ துணை வினைச் சொற்கள் எப்பொழுதும் வாக்கியத்தில் பிரதான வினைச் சொலிற்கு முன்னால் அமையும்.
நிகழ் காலத்தில் can, will, shall, ought to, must, may என்பன பாவிக்கப் பெறுகின்றன.
இறந்தகாலத்தில் would, should, could, might என்பன பாவிக்கப் பெறுகின்றன.
எதிகாலத்தில் நடைபெறப்போவதை எதிர்வு கூறும் போது Will and Shall பாவிக்கப் பெறுகின்றன.
பரிந்து கேட்கும்போது, அல்லது பரிந்துரைக்குப் போது அல்லது ஏதாவது வழங்கப்பெறும் போது Can, Could, May, Shall பாவிக்கப் பெறுகின்றன.
அனுமதி வழங்கும் போது அல்லது மறுக்கும் போது Can, Could, May, Might பாவிக்கப் பெறுகின்றன.
முடியும் அல்லது முடியாது என்பதனை வெளிப்படுத்தும் போதுCan, Could, Able to பாவிக்கப் பெறுகின்றன

Can:
Ability to do - இயலும் என கூறு போது
|
I can speak English
|
Permission to do - அனுமதி கேட்கும் போது
|
Can I go to the temple?
|
Request – பரிந்து கேட்கும் போது
|
Can you wait a moment, please?
|
Offer – தருவதாக கூறும் போது
|
I can lend you my bicycle till tomorrow
|
Suggestion – அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
|
Can we visit Grandma at the weekend?
|
Possibility – இருக்கலாம் என்பதை கூறும் போது
|
It can get very hot in Sri Lanaka
|
Could:
Ability to do- இயலும் என கூறு போது
|
I could speak English
|
Permission to do -அனுமதி கேட்கும் போது
|
I could go to the temple
|
Polite question – தாழ்மையாக கேட்கும் போது
|
Could I go to the temple please?
|
Polite request – பணிவாக பரிந்து கேட்கும் போது
|
Could you wait a moment, please?
|
Polite offer - பணிவாக தருவதாக கூறும் போது
|
I could lend you my bicycle till tomorrow.
|
Polite suggestion- பணிவாக அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
|
Could we visit Grandma at the weekend?
|
Possibility - நடைபெறலாம் என்பதை கூறும் போது
|
It could get very hot in India.
|
May:
Possibility - நடைபெறலாம் என்பதை கூறும் போது
|
It may rain today
|
Permission to do - அனுமதி கேட்கும் போது
|
May I go to the temple?
|
Polite suggestion - பணிவாக அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
|
May I help you?
|
Might:
Possibility (less possible than may) நடைபெறலாம் என்பதை கூறும் போது (குறைவானது)
|
It might rain today
|
Hesitant offer உதவிசெவதாக கூறும் போது)
|
Might I help you?
|
Must:
Force, Necessity – பலவந்தமாக கூறும் போது
|
I must go to the town today.
|
Possibility - இருக்கலாம் என்பதை கூறும் போது
|
You must be tired.
|
Advice, Recommendation – பரிந்துரைக்கும் போது
|
You must see the new film with Ratha
|
Must not/May not:
Prohibition
தடை விதிக்கும் போது
|
You mustn't work on dad's computer.
You may not work on dad's computer. |
Need not:
Not necessary – தேவையில்லை எனக் கூற
|
I needn't go to the town, we're going to the restaurant tonight
|
Ought to:
Advice – அறிவுரை கூறும் போது
|
You ought to drive carefully in bad weather
|
Obligation – உபகாரமாக கேட்கும் போது
|
You ought to switch off the computer when you leave the room
|
Shall:
instead of “will” in the 1st person
தன்னிலையில் “will” க்கு பதிலாக பாவிக்க
| |
Suggestion - அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
|
Shall I carry your hand bag?
|
Should:
Advice - அறிவுரை கூறும் போது
|
You should drive carefully in bad weather
|
Obligation - உபகாரமாக கேட்கும் போது
|
You should switch off the computer when you leave the room
|
Will:
wish, request, demand, order –கேட்கும் போது
(less polite than would) பணிவு குறைவு
|
Will you please off the light?
|
prediction, assumption – எதிர்வு கூறும் போது
|
I think it will rain on Monday
|
Promise – உறுதியாக கூறூம் போது
|
I will stop drinking
|
spontaneous decision – உதவி செய்ய முற்படும் போது
|
Can somebody drive me to the station? - I will
|
Habits – பழக்க வழக்கங்களை குறிப்பிடும் போது
|
She's strange, she'll sit for hours without talking
|
Would:
wish, request (more polite than will)
பணிவாக கேட்கும் போது
|
Would you off the light, please?
|
habits in the past
கடந்தகால பழக்கங்களை கூறும் போது
|
Sometimes he would bring me some vegetables
|
வினைச் சொற்களில் "be" என்ற வினைச் சொல் இன்னும் பல வித்தியாசமாக மாற்றமடைகின்றது. எப்படி என பார்க்கலாம்:
“ be ” என்ற வினைச்சொல் "இரு" என்னும் கருத்துடையது. இச் சொல்லானது வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லாகவும், துணைவினைச் சொல்லாகவும் பாவிக்கப் பெறுகின்றது. இச் சொல்லானது மற்றைய வினச்சொற்களைப் போலல்லாது காலத்திற்கு (இறந்த, நிகழ், எதிர்); ஏற்ப வாக்கியதில் அமைந்துள்ள எழுவாயின்; இடத்திற்கு(தன்னிலை, முன்னிலை, படற்கை); ஒருமையா, பன்மையாஎன்பவைக்கு ஏற்ப (am, is, are, was, were என) பல உருவ மாற்றங்ளைப் பெறுகின்றது.
உதாரணமாக- நிகழ்காலத்தில்
"am" என்பது "இருக்கிறேன், ஆவேன்" எனவும்,
"is" என்பது "இருக்கிறான், ஆவான்; இருக்கிறாள், ஆவாள்; இருக்கிறார், ஆவார்; இருக்கிறது, ஆகும்" எனவும்,
"are" என்பது "இருக்கின்றாய், ஆவாய்; இருக்கின்றீர்கள், ஆவீர்கள்; இருக்கின்றோம், ஆவோம்; இருக்கின்றார்கள், ஆவார்கள்; இருக்கின்றன, ஆகும்" என எழுவாய்களைப் பொறுத்து பொருள் பெறுகின்றன.

உதாரணமாக-இறந்தகாலத்தில்:
am இன் இறந்தகாலம் was ஆகவும்,
is இன் இறந்தகாலம் was ஆகவும்,
are இன் இறந்தகாலம் were ஆகவும் உருவ மாற்றம் பெறுவதால்;
was என்பது இருந்தேன், இருந்தாள், இருந்தார் என ஒருமையிலும்;
were என்பது இருந்தாய், இருந்தீர்கள், இருந்தோம், இருந்தார்கள், இருந்தன என பன்மையிலும் எழுவாய்க்கு ஏற்ப பொருள் பெறும்.
இந்த மாற்றங்கள் ஆங்கிலம் பயில்வோருக்கு ஆரம்பத்தில் பல குழப்பங்களை தோற்றுவிக்கின்றன. அதனால் அச் சொல் இங்கே விஷேசமாக விளக்கப் பெற்றுள்ளன.

வேறு விதமாக கூறுவதாயின்;
"be" என்ற வினைச்சொல் வாக்கியங்களில் பிரதான வினச்சொல்லாகவோ அல்லது துணைவினைச்சொல்லாகவோ பாவிக்கப் பெறும் போது பெறும் உருவமாற்றங்கள்;
"be" என்ற வினைச்சொல் வாக்கியங்களில் பிரதான வினச்சொல்லாகவோ அல்லது துணைவினைச்சொல்லாகவோ பாவிக்கப் பெறும் போது பெறும் உருவமாற்றங்கள்;
நிகழ்காலத்தில்: “ I ” என்ற (தன்னிலை - ஒருமை)எழுவாயாயுடன் வாக்கியங்களில் அமையும் போது"be"ன்நிகழ்கால உருவமான “am” ஆகவும் ;
நிகழ்காலத்தில்: “He, She, It, That" என்பன (படற்கை - ஒருமை)எழுவாயாக அமையும் போது"be" ன்நிகழ்கால உருவமான “is” ஆகவும் ;
நிகழ்காலத்தில்: We, You, They, These,Those என்பன(தன்னிலை, முன்னிலை, படற்கை - பன்மை) எழுவாயாக அமையும் போது "be" ன்நிகழ்கால உருவமான “are” ஆகவும்;
இறந்தகாலத்தில்: “ I , He, She, It, That” என்பன (தன்னிலை, முன்னிலை, படற்கை - ஒருமை) எழுவாயாக அமையும் போது"be" ன் இறந்தகாலஉருவமான “was” ஆகவும் ;
இறந்தகாலத்தில்: We, You, They, These, Those என்பன(தன்னிலை, முன்னிலை, படற்கை - பன்மை) எழுவாயாக அமையும் போது "be" ன்இறந்தகாலஉருவமான “were” ஆகவும் ;உருவமாற்றம் பெறும்.

You என்ற சுட்டுப் பெயர்ச்சொல்; முன்னிலை (நீ, நீர் என) ஒருமையாகவும், (நீங்கள் என) பன்மையாகவும் பாவிக்கப் பெறுகின்றன. அதனால் You என்ற சுட்டுப் பெயர்ச்சொல் வாக்கியங்களில் அமையும் போது எப்பொழுதும் பன்மைக்குரிய உருமாற்றம் பெற்ற வினைச்சொல்லை ஏற்று நிற்கின்றது. வாக்கியத்தில் சொல்லப் பெற்ற செய்திகளை பொறுத்து ஒருமையா அல்லது பன்மையா என்பது தீர்மானிக்கப் பெறுகின்றது.
ஆனால் வருங்காலத்தை குறிக்கும் போது; எழுவாய் (I, He, She, It, We, You, They, These, Those) எதுவாக அமைந்தாலும், “will” என்ற துணை வினைச் சொல்லை ஏற்கும். இவை “be” என்ற வினைச் சொல்லுக்கு மட்டும் உரித்தான மாற்றங்களாகும். மேலும் விளக்கம் பின்னர் தரப்பெறும்.
எடுத்துக் காட்டு:
எடுத்துக் காட்டு:
I will play, he will play, You will play
I will not play = I won't play
I am, I was, I will be;
You are, You were, You will be;
He is, He was, He will be;
We are, We were, We will be;
They are, They were, They will
I will not play = I won't play
I am, I was, I will be;
You are, You were, You will be;
He is, He was, He will be;
We are, We were, We will be;
They are, They were, They will
Basic Verbs - வினைச் சொற்கள் கால வித்தியாசங்களை செயலில் காட்டுவதற்காக Present Tense, Past Tense, Past Participle, Continue Tense என உருவமாற்றம் பெற்றுகின்றது. இம் மாற்றங்கள் சில கட்டுக் கோப்புடன் இடம் பெறுகின்றன. சில வினைச் சொற்கள் Past Tense, Past Participle ஆக மாறும் போது மாற்றம் பெறுவதில்லை. பல வினைச் சொற்கள் “ed” என்ற எழுத்துகளை இறுதியில் சேர்த்து மாற்றமடைகின்றது. முக்கிய வினச்சொற்களின் அட்டவணை "ஆங்கிலம் கற்போம்" என்ற பகுதியில் தரப்பெற்றுள்ளன.
Regular Verb - ஒழுங்கான வினைச் சொற்கள்:
Basic Verbs
|
Present Tense
|
Past Tense
|
Past Participle
|
Continue Tense
|
agree
|
agree
|
agreed
|
agreed
|
agreeing
|
Apply
|
Apply
|
Applied
|
Applied
|
Applying
|
bake
|
bake
|
baked
|
baked
|
baking
|
ஆனால், வேறு சில முற்றிலும் புதிய வேறு சொல்லாக அமைகின்றது. இன்னும் சில Past Participle ல் மாத்திரம் மாற்றம் பெறுகின்றது. மேலும் சில Past Tense மாத்திரம் மாற்றம் பெறும். இவை காரணமாக அடிப்படை வினைச் சொற்களை Regular Verb, Irregular Verbs என வேறு படுத்தியுள்ளனர். இவற்றுள் Regular Verb -ஒழுங்கான வினைச் சொற்கள் என்பது “d” அல்லது “ed”சேர்வதன் மூலம் மாறுபடுபவை, மற்றவை Irregular Verbs-ஒழுங்கற்ற வினைச் சொற்கள் முழுதாகவே உருவ மாற்றம் பெறுபவை அல்லது எதுவித உருவ மாற்றமும் அடையாது இருப்பவை. இவை தவிர தொடர் காலத்தை உணர்த்துவதற்காகContinue Tense என்பது “ing” என்னும் எழுத்துகளை இறுதியில் பெற்று செயல் தொடர்ந்து நிகழ்வதை அல்லது நிகழ்ந்ததை காட்டுகின்றன.
Irregular Verbs -ஒழுங்கற்ற வினைச் சொற்கள்:
Basic Verbs
|
Present Tense
|
Past Tense
|
Past Participle
|
Continue Tense
|
bend
|
bend
|
bent
|
bent
|
bending
|
bet
|
bet
|
bet
|
bet
|
betting
|
come
|
come
|
came
|
come
|
coming
|
do
|
do
|
did
|
done
|
doing
|
அடிப்படை வினைச்சொற்கள் - Base Verbs என இன்கு குறிப்பிடப் பெறுவது வினைச் சொற்களின் மூல அமைப்பையே.உதாரணமாக: go, write, read போன்றன..
இந்த அடிப்படை வினைச் சொற்கள் வாக்கியங்களில் அமையும் போது காலங்களை காட்டுவதற்காக பலவித உருவ மாற்றங்களைப் பெறுகின்றது. உருவ மாற்றம் பெற்ற அந்த வினைச் சொல்லானது அவ் வாக்கியத்தின் பிரதான வினைச் சொல்- Main verb என அழைக்கப்பெறுகின்றது.

Prepositions - முன்னிடைச் சொற்கள்:
ஆங்கிலத்தில் முன்னிடைச் சொற்களை பல வித்தியாசமான முறைகளில் பாவிப்பதால் ஆங்கிலம் கற்போருக்கு ஆரம்பத்தில் பல சந்தேகங்களையும், சிக்கல்களையும் உண்டு பண்ணுகின்றது. ஆதலால் அதனை தெளிவாக கற்றுக் கொள்ளுதல் அவசியமாகின்றது.

இவ் முன்னிடைச் சொற்கள் வாக்கியங்களில் பெயர்ச் சொற்களிற்கு முன்னாலும்; வினைச் சொற்களிற்கும், வினையுரிச் சொற்களிற்கும் பின்னாலும் அமைகின்றது.
நேரம், காலங்களைக் குறிப்பிடும் போது on, in, at என்னும் முன்னிடைச் சொற்கள் பாவிக்கப் பெறுகின்றன.
“At”:
நேரத்தைக் குறிப்பிடும் போது:
at 5pm, at midnight, at 4:30
at Christmas,
at night
at the weekend
at lunch time,
at dinner time,
at breakfast time
“On”:
கிழமைகளைக் குறிப்பிடும் போது
on Friday,
on my birthday,
on Christmas Day
“At”:
நேரத்தைக் குறிப்பிடும் போது:
at 5pm, at midnight, at 4:30
at Christmas,
at night
at the weekend
at lunch time,
at dinner time,
at breakfast time
“On”:
கிழமைகளைக் குறிப்பிடும் போது
on Friday,
on my birthday,
on Christmas Day
காலங்களைக் குறிப்பிடும் போது
on Monday morning
on Monday afternoon
on Monday night
on Monday morning
on Monday afternoon
on Monday night
திகதியைக் குறிப்பிடும் போது
on the 22nd of May
on the 22nd of May
“In”
கடந்த காலத்தைக் குறிப்பிடும் போது
in 2001, in 2010
in April,
in December
in the seventies,
in the 1990s
in the 19th century
கடந்த காலத்தைக் குறிப்பிடும் போது
in 2001, in 2010
in April,
in December
in the seventies,
in the 1990s
in the 19th century
in winter, in summer
in the morning,
in the afternoon,
in the evening
in the morning,
in the afternoon,
in the evening
ஆனால் Prepositionsஅல்லாத வேறு சொற்களும் காலத்தைக் காட்ட பயன் பெறுகின்றன.
next week, next year, next month etc
last night, last year etc
this morning, this month etc
every day, every night, every years etc
next week, next year, next month etc
last night, last year etc
this morning, this month etc
every day, every night, every years etc
Prepositions of Place
“In”
முன்னிடைச் சொற்கள் இடங்களைக் குறிக்கும் போதுல் பாவிக்கப் பெறும் சில உதாரணங்கள்:
in the newspaper
|
பேப்பரில்
|
in a house
|
ஒரு வீட்டினுள்
|
in a cup
|
ஒரு கோப்பையுள்
|
in a bottle
|
ஒரு போத்தலினுள்
|
in bed
|
மெத்தையில்
|
in London
|
லணடனில்
|
in a book
|
புத்தகத்தில்
|
in a field
|
ஒரு தரையில்
|
in my stomach
|
எனது வயிற்றினுள்
|
in a drawer
|
ஒரு லாச்சியுள்
|
in a bag
|
ஒரு பாக்கினுள்
|
in a car
|
ஒரு காரினுள்
|
in Sri Lanka
|
இலங்கையில்
|
in the sea
|
கடலினுள்
|
in a river
|
ஆற்றினுள்
|
“On”
on the table
|
மேசையின் மேல்
|
on the floor
|
நிலத்தின் மீது
|
on my face
|
எனது முகத்தில்
|
on the page
|
(புத்தக) பக்கத்தில்
|
on a chair
|
கதிரை மேல்
|
on the river
|
ஆற்றின் மீது
|
on a bike
|
சயிக்கிள் மீது
|
on the wall
|
சுவரின் மீது
|
on the fridge
|
விறிச்சின் மீது
|
on a plate
|
பிளேற்றின் மீது
|
on the sofa
|
சோபா மீது
|
on a bag
|
ஒரு பாக்கின் மீது
|
on a t-shirt
|
ஒரு ரீ-சேட்டின் மீது
|
on a bottle
|
ஒரு போத்தல் மீது
|
on his foot
|
கால் நடையாக
|
“At” ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டும் போது
at the airport
|
விமான நிலையத்தில்
|
at the table
|
மேசையடியில்
|
at the cinema
|
சினிமாவில்
|
at the bottom
|
அடியில்
|
at the traffic lights
|
போல்லுவரத்து சமிஞையில்
|
at the back
|
பின்னால்
|
at university
|
பல்கலைக் கழகத்தில்
|
at the hospital
|
வைத்தியசாலையில்
|
at the door
|
கதவடியில்
|
at the bus stop
|
பஸ் நிற்பாட்டும் இடத்தில்
|
at the top
|
மேலே
|
at the front
|
முன்னால், முன்னால் உள்ள இடத்தில்
|
at school
|
பாடசாலையில்
|
at the window
|
யன்னலடியில்
|
at the piano
|
பியானோவடியில்
|
Super
ReplyDeleteTnx For All
ReplyDeleteWill Give God Anything For You
My Name Abdulkhalik
I Will Hope Your All Arts
Your Contact Whatsapp Number
Thank You Very Much....