காலதாமதம் ஆகுமா TNTET

காலதாமதம் ஆகுமா  ஆசிரியர் தகுதி தேர்வு

கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்குகளால் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தது.

உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்த நிலையில் தேர்வு அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் தேர்வர்களிடையே அதிகமாகியது.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழக கல்வி அமைச்சர் அவர்களும் நாள்தோறும் ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு விரைவில் வரும் என்று பேட்டி அளித்து வந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலை உருவாகினாலும் தேர்வு அறிவிப்பு வருவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

ஆனால் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு சற்று காலதாமதம் ஆகும் என்றே தெரிகிறது.

தேர்வை நடத்துவது ஆசிரியர் தேர்வு வாரியமாக இருந்தாலும் அதற்கான உத்தரவை அரசு அளிக்க வேண்டும். இத்தகைய உத்தரவை காபந்து அரசு அளிக்க முடியாது.

எனவே தேர்வு அறிவிப்பு சற்று காலதாமதம் ஆகும். பொறுத்து இருங்கள். படிப்பதை நிறுத்தாமல் தொடருங்கள்.

என்றும் உங்கள்
அல்லா பக்‌ஷ்

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்