தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் : நிரல் நிறையணி.


விளக்கம்:
பெயரையோ,வினையையோ ஒரு வரிசைப்படநிறுத்தி அவற்றோடு தொடர்புடையவற்றைபின்னர் அவ்வரிசை படக்கூறுவதுநிரல்நிறையணி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பாடலில் உள்ள‌ அணிக்கான பொருத்தம்.
இப்பாடலில் அன்பையும்,அறனையும் ஒருவரிசைப்படி நிறுத்தி,
அதற்கு தொடர்புடைய பொருள் கொண்டபண்பையும்,பயனையும்
அடுத்த வரிசையில் நிறுத்தி பொருத்தமாகப்பொருள் காண‌ப்பட்டுள்ளது.
இன்னும் விளக்கமாக உங்களுக்கு புரியும்படிசொல்ல வெண்டுமென்றால்,ஆனந்த யாழைமீட்டுகிறாய்.....என்ற பாடலில்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்.....
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்....
இந்தப் பாடலில் குடையை முதல் வரியில்கூறிவிட்டு,அதற்குத் தொடர்பான மழையைஅடுத்த வரியில் பொருத்தமாக நிறுத்தி பொருள்காணப்பட்டுள்ளது.
பழைய பாடலில் இன்னொரு எடுத்துகாட்டு..
 பொன்னெழில் பூத்தது புதுவானில்..
வெண்பனி தூவும் நிலவே நில்...
வானத்தை பற்றி முதல் வரியில்கூறிவிட்டு,அடுத்த வரியில் அதற்குதொடர்பான நிலவை இணைத்து பொருத்தமாககூறப்பட்டுள்ளது.
இந்த நிரல்நிறையணி 2 வகைப்படும்.
1.நேர் நிரல் நிறையணி
2.எதிர் நிரல் நிறையணி.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்