கற்றல் வகைகள்
மூன்று வகையான கற்றல் வகைகள்
கற்றலில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. பென்ஜமின் புளும் (1956) அவர்கள் தலைமையில் செயல்பட்ட கல்லூரிகளின் குழுக்கள் கற்றல் செயல்களில் மூன்று வகைகளை கண்டுபிடித்துள்ளனர். அவையாவன
- காக்னிட்டிவ் எனப்படும் அறிவுத்திறன் சார்ந்த திறமைகள்
- அபெக்டிவ் எனப்படும் உணர்வுபூர்வமான திறன்கள்
- சைக்கோமோட்டார் எனப்படும் உடற்திறன் சார்ந்த திறமைகள்
இந்த மேற்கூறிய திறன்கள் உயர்கல்வியில் மட்டுமே வெளிப்படுத்தப்படும் என்பதால் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை விட பெரியதாக தெரிகின்றன.. பயிற்றுனர்கள் மேற்கூறிய மூன்று திறன்களை கே.எஸ்.ஏ (அறிவு, திறன், நோக்குதல்) என்று உபயோகிக்கின்றனர். இந்த கற்றலின் வகைப்பாட்டியலை ‘பயிற்சியின் முக்கிய நோக்கமாக’ கருதப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு பயிற்சியின் முடிவுக்குப்பின்பு பயிற்சி பெற்றவர்கள் இம்மூன்று திறன்களான அறிவு, திறன் மற்றும் ஒரு விஷயத்தை நோக்கும் திறன் ஆகியவற்றைக் கற்றிருக்கவேண்டும்.
இந்தக்குழு காக்னிட்டிவ் எனப்படும் அறிவு சார்ந்த திறமைகளையும் மற்றும் உணர்வுப்பூர்வமான திறமைகளையும் நன்கு தொகுத்துள்ளது. ஆனால் உடற்திறன் சார்ந்த திறன்களை தொகுக்கவில்லை. இதற்கான விளக்கத்தை இக்குழு கூறும்போது கல்லூரி அளவிலான மாணாக்கர்களுக்கு உடற்திறன் சார்ந்த பயிற்சிகளை அளிப்பது மிகக்குறைவான அனுபவமே பெற்றுள்ளது என தெரிகிறது. இந்த மேற்கூறிய திறமைகளின் வகைகள் மேலும் பல கிளை வகைகளாக பிரிக்கப்பட்டு, அதாவது மிக எளிய பழக்கம் முதல் மிக சிக்கலான பழக்கங்கள் வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கிளை வகைகள் முறையாக வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் புளூம்ஸ் வகைப்பாட்டியல் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இன்று நடைமுறையில் அதிகம் உபயோகிக்கப்படுவதாகவும் இருக்கிறது.
காக்னிடிவ் வகை எனப்படும் அறிவு சார்ந்த திறன்
காக்னிடிவ் வகை (புளும்ஸ்,1956) அறிவுத்திறன் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திறனில் முக்கிய விசயங்களை நினைவு கூறல், செய்முறை வடிவம், அறிவுத்திறனை அதிகரிக்கும் செயல்களை அதிகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. மிக எளிய பழக்கவழக்கங்களிலிருந்து அதிக சிக்கலான பழக்கவழக்கங்கள் வரை கற்க ஆறு முக்கிய செய்முறைவகைகளாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு விதமான சிக்கலான செய்முறைகளுக்கேற்றவாறு இச்செய்முறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது முதல் செய்முறையினை நன்றாக பழகிக்கொண்டு அடுத்த கட்ட செய்முறையினை கற்கவேண்டும்.
வகைகள்
|
உதாரணங்கள் மற்றும் முக்கியச்சொற்கள்
|
விவரங்களை அல்லது தகவல்களை நினைவுகூறல்
|
உதாரணங்கள்; ஒரு திட்டத்தினை உருவாக்குதல், பொருட்களின் விலைகளை
நுகர்வோருக்கு மனப்பாடமாக கூறுதல், பாதுகாப்பு விதிகளை அறிந்துகொள்ளுதல் முக்கியசொற்கள்; வரையறைகள், விளக்கங்கள், கண்டுபிடித்தல், அறிதல், பட்டியலிடுதல், பொருத்துதல், பெயர்கள், நினைவுகூறல், கண்டுபிடிப்பது, திரும்ப செயதல், தேர்ந்தெடுத்தல் |
மொத்தமான விவரங்கள்; அறிவுரைகளையும், சிக்கல்களையும் புரிந்துகொள்ளுதல், மொழிபெயர்த்தல், அறிவுரைகளை மற்றும் சிக்கல்களை வரையறுத்தல். பயிற்சி பெறுபவரின் சொந்த வார்த்தைகளில் சிக்கல்களை வரையறுத்தல்
|
உதாரணங்கள்; பரிட்சை எழுதுவதின் முக்கியத்துவத்தை மீண்டும் எழுதுதல்.
ஒரு சிக்கலான செயலை எப்படி செய்வது என்பதை பயிற்சி பெறுபவர் தங்கள் சொந்த வார்த்தைகளில் வரையறுத்தல். கணினி ஸ்ப்ரெட் சீட் மூலம் சமனங்களை மொழி பெயர்த்தல் முக்கியமான சொற்கள்;ஒருங்கிணைத்தல், மாற்றுதல், போராடுதல், கண்டுபிடித்தல், மதிப்பிடுதல், விளக்கம் தருதல் , பொதுப்படுத்துதல், உதாரணங்கள் தருதல், அவற்றை வரையறுத்தல், முன்பே கண்டுபிடித்தல், திரும்ப எழுதுதல், சுருக்குதல், மொழிபெயர்த்தல் |
உபயோகித்தல்
ஒரு நோக்கத்தினை முற்றிலும் புதிய இடத்தில் அல்லது சூழ்நிலையில் உபயோகித்தல். அதாவது வகுப்பறையில் கற்றுக்கொண்ட விசயத்தினை வேலை செய்யுமிடத்தில் ஒரு சரியான சந்தர்ப்பத்தில் உபயோகித்தல் |
உதாரணங்கள்
அலுவலர்களின் விடுமுறை நேரங்களை கணக்கிட ஒரு புத்தகத்தினை உபயோகித்தல். எழுத்துத்தேர்வின் உண்மைத்தன்மையினை பரிசோதிக்க புள்ளியியல் விதிகளை உபயோகித்தல் முக்கியசொற்கள் உபயோகித்தல், மாற்றங்கள், கணக்கிடுதல், கட்டமைத்தல், விளக்கம் தருதல், கண்டுபிடித்தல், மாற்றியமைத்தல், மாறுதல், செயல்படுதல், முன்கூட்டியே கணக்கிடுதல் , தயாரித்தல், காண்பித்தல், தீர்த்தல், உபயோகங்கள் |
ஆய்வுசெய்தல்
பொருட்களையும் அதன் கருப்பொருளையும் அதன் முக்கிய தனிப்பகுதிகளாகப் பிரித்து அதன் அமைப்பினை அறிந்துகொள்ளுதல். உண்மைகளையும் பின்பு அது பற்றிய விளக்கங்களையும் பிரித்தறிதல் |
உதாரணங்கள்
ஒரு உபகரணத்தின் ஒரு பகுதியினை கண்டறிந்து அதனை உபயோகப்படுத்தும் முறைகளை அறிதல், காரணங்களை விளக்குவதில் சரியான முறைகளை கையாளுதல், ஒரு துறையிலிருந்து விவரங்களை சேகரித்து பின் தேவையான விசயங்களை பயிற்சிக்காக தெரிவு செய்தல் முக்கியசொற்கள் ஆய்வு செய்தல், நிறுத்துதல், ஒப்பிடுதல், படங்கள், மீண்டும் வடிவமைத்தல், பிரித்தறிதல், தனியாக இனம் காணல், கண்டுபிடித்தல், விளக்கம் தருதல், விரிவுரையாக்கம் செய்தல், வெளிப்புற கருவினை விளக்குதல், ஒற்றுமைகளைக் கண்டறிதல், தெரிவு செய்தல், தனியாகப்பிரித்தல் |
உருவாக்குதல்
பல்வேறுபட்ட பொருட்களிலிருந்து ஒரு கட்டமைப்பினை அல்லது ஒரு பொருளை உருவாக்குதல். பல்வேறு பாகங்களை ஒன்றிணைத்து ஒரு புது அமைப்பினை உருவாக்குதல் |
உதாரணங்கள்
ஒரு செய்முறை கையேடு அல்லது விளக்கக்கையேட்டினை உருவாக்குதல். ஒரு குறிப்பிட்ட செயலினை செய்ய ஒரு இயந்திரத்தினை வடிவமைத்தல். ஒரு சிக்கலைத் தீர்க்க பல்வேறு இடங்களிலிருந்து பெற்ற பயிற்சிகளைப் ஒருங்கிணைத்தல், செயல்முறை பயிற்சியினை மீண்டும் செய்வதன் மூலம் முடிவுகளை முன்னேற்றுதல் முக்கியசொற்கள் வகைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல்,ஒன்றாக்குதல், உருவாக்குதல், மாதிரிகள், விளக்கம் தருதல், உருவாக்குதல், மாற்றியமைத்தல், செயல்படுத்துதல், திட்டமிடல், மீண்டும் வடிவமைத்தல், இணைத்தல், திரும்பச்செய்தல், திரும்ப எழுதுதல், சுருக்குதல், சொல்லுதல், எழுதுதல் |
மதிப்பிடுதல்
யோசனைகள் மற்றும் பொருட்களை மதிப்பிடுதல் |
உதாரணங்கள்
சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தல். சரியான தகுதியுள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்தல், ஒரு புதிய நிதியறிக்கையினை விளக்கமளித்து அதன் வடிவமைப்பினை நியாயப்படுத்துதல் முக்கியசொற்கள் மதிப்பிடல், ஒப்பீடு செய்தல், முடிவு செய்தல், எதிர்மறை விளக்கமளித்தல், குறை கூறுதல், விளக்கமளித்தல், மதிப்பீடு செய்தல், முடிவுரை கூறுதல், நியாயப்படுத்துதல், இணைத்தல், சுருக்குதல், உதவி செய்தல் |
உணர்வுப்பூர்வமான வகை கற்றல் எப்படி விசயங்களை நாம் உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம் அதாவது உணர்வுகள், அவற்றின் மதிப்பீடுகள், பாராட்டுதல், ஆர்வத்துடன் செயல்படுதல், ஊக்கப்படுத்தல் மற்றும் எண்ணங்ககள் ஆகியவையாகும் (Krathwohl, Bloom, Masia, 1973). இந்த வகைக் கற்றலில் எளிய பழக்கவழக்கங்களிலிருந்து அதிக கடினமாக பழக்கவழக்கங்கள் வரை 5 முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வகைகள்
|
உதாரணங்கள் மற்றும் முக்கிய சொற்கள்
|
கேட்கும் திறன்
விழிப்புணர்வு, கேட்பதற்கான விருப்பம், முக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம் |
உதாரணங்கள்; மற்றவர்கள் கூறுவதை
மரியாதையுடன் கவனித்தல், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நபர்களை கவனித்து அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளுதல் முக்கியசொற்கள் கேட்டல், தேர்ந்தெடுத்தல், விளக்கமளித்தல், பின்பற்றுதல், கொடுத்தல், பிடித்துவைத்துக்கொள்ளுதல், கண்டுபிடித்தல், இடத்தைக்கண்டுபிடித்தல், பெயர்கள், இடத்தை தேர்ந்தெடுத்து, உட்காருதல், நிற்றல், பதிலளித்தல் மற்றும் உபயோகப்படுத்துதல் |
ஒருசெயலுக்கு திரும்பபதிலளித்தல்
கற்றுக்கொள்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கலந்துகொள்ளுதல். ஒரு செயல்முறையினை செய்து அதற்கு பதிலளித்தல்
கற்றதன் வெளிப்பாடு கீழ்க்கண்ட விசயங்களை உள்ளடக்கியது. அதாவது கேள்விகளுக்கு பதிலளித்தல், பதிலளிக்க முன்வருதல், பதிலளித்ததில் திருப்தி அடைதல் |
உதாரணங்கள்
வகுப்பறையில் நடக்கும் கலந்துரையாடல்களில் பங்கேற்றல். வகுப்பறைகளில் வகுப்பு எடுத்தல். புதிய எண்ணங்கள், கூற்றுகள், மாதிரிகள் ஆகியவற்றைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதற்காக வினா எழுப்புதல். பாதுகாப்பு விதிகளை அறிந்து கொண்டு அவற்றை கடைபிடித்தல் முக்கியசொற்கள் பதிலளித்தல், உதவி செய்தல், உறுதியளித்தல், கலந்துரையாடல், வாழ்த்து தெரிவித்தல், அடையாள அட்டையிடுதல், வேலை செய்தல், பயிற்சி செய்தல், வகுப்பு எடுத்தல், படித்தல், அறிக்கை கொடுத்தல், தேர்ந்தெடுத்தல், சொல்லுதல், எழுதுதல் |
மதிப்பிடுதல்
ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மனிதருடைய மதிப்பு, அவருடைய பழக்கம், செயல்படுதல். இந்த மதிப்பிடுதலில் சிறிய வேலை செய்ய ஒப்புக்கொள்வதிலிருந்து சிக்கலான வேலை செய்ய ஒப்புக்கொள்வதும் அடங்கும். ஒரு குறிப்பிட்ட மதிப்பீடுகளைக் கொண்டு உள்மதிப்பீடு செய்தல். இந்த மதிப்பீடுகளுக்கான குறிப்பு கற்றுக்கொள்பவரின் வெளிப்படுத்தப்படும் பழக்கங்களிலிருந்து எளிதில் கண்டுபிடிப்பதாக இருக்கும் |
உதாரணங்கள்
ஜனநாயக செயல்முறைகளில் நம்பிக்கையினை விளக்குதல். தனிப்பட்ட மற்றும் கலாச்சார வித்தியாசங்களை உணர்வுப்பூர்வமாக விளக்குதல். பிரச்சனைகளை தீர்க்கும் திறன். சமுதாய முன்னேற்றத்திற்கு திட்டம் வகுத்தல் பின் அதனை ஒரு கடமையாக எண்ணி கடைபிடித்தல். ஒருவர் உறுதியாக எண்ணிய எண்ணங்களைப்பற்றி அறிவித்தல் முக்கியசொற்கள் வேலையினை முடித்தல், விளக்குதல், வேறுபடுத்திக்காட்டுதல், விளக்கம் தருதல், பின்பற்றுதல், உருவாக்குதல், துவக்குதல், அழைத்தல், இணைதல், தன்னிலை விளக்கமளித்தல், முன்வந்து அழைத்தல், படித்தல், அறிக்கை அளித்தல், தேர்ந்தெடுத்தல், பங்கு போடுதல், படித்தல் மற்றும் வேலை செய்தல் |
நிறுவனங்கள்
மதிப்புகளை முன்னிறுத்தி பல்வேறு மதிப்பீடுகளை தனித்து காட்டுதல், பின்பு ஒரு தனிப்பட்ட மதிப்பீடு முறையினை உருவாக்குதல். மதிப்பீடு செய்வதில் ஒப்பீடு செய்தல், இணைத்தல் மற்றும் மதிப்பீடுகளை உருவாக்குதல் |
உதாரணங்கள்
சுதந்திரத்திற்கும், பொறுப்பான நடத்தைக்கும் ஒரு சமநிலை தேவைப்படுவதை கண்டுபிடித்தல். ஒருவருடைய பழக்கத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளுதல். ஒரு சிக்கலை தீர்ப்பதற்கு முறையான திட்டமிடுதலின் அவசியத்தை விளக்குதல்
தொழில் முறை மற்றும் நடத்தை தரத்தினை
ஒப்புக்கொள்ளுதல். திறமை, ஆர்வம், நம்பிக்கை போன்றவற்றுடன் இயைந்து வாழ்க்கையினை திட்டமிடுதல். நிறுவனம் ஆகியவற்றுடன் இயைந்து தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்திற்கேற்றவாறு நேரத்தினை திட்டமிடுதல் முக்கியவார்த்தைகள் பின்பற்றுதல், மாற்றுதல், ஏற்பாடு செய்தல், ஒருங்கிணைத்தல், ஒப்பீடு செய்தல், முடித்தல், வாதிடல், விளக்கமளித்தல், உருவாக்குதல், பொதுப்படுத்துதல், கண்டுபிடித்தல், இணைந்து செயல்படுத்துதல், மாற்றுதல், ஆணையிடுதல், அமைத்தல் அல்லது ஒருங்கிணைத்தல் தயாரித்தல், இணைத்தல் |
உள்மதிப்பீடு
கற்பவரின் பழகும் முறையினை கட்டுப்படுத்த ஒரு மதிப்பீட்டு முறையினை உருவாக்குதல். கற்பவரின் பழக்கம் உறுதியாக, எதிர்பார்க்கப்படுவதாக முக்கியமாக அவரின் குணநலனாக இருக்கவேண்டும். கற்பிக்கும் முறைகளின் நோக்கமானது மாணவரின் தனிப்பட்ட, சமுதாய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அனுசரிக்கும் திறனைப் பொறுத்தது |
உதாரணங்கள்
தனியாக வேலை செய்யும்போது தன்னைத்தானே உணர்வது. குழு வேலைகளை ஒத்துழைப்பது. பிரச்சனைகளை தீர்ப்பதில் ஒரு நோக்கமுடன் கையாள்வது. குழு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது, நாள்தோறும் தொழில் ஒழுங்கு முறைகளை கடைபிடிப்பதை ஒரு தொழில்முறை கடமையாக கொள்வது. புதிய ஆதாரங்களை பயன்படுத்தி தீர்ப்பு மற்றும் மாற்றங்களை மாற்றியமைத்தல். மக்களை அவர்கள் எப்படியிருக்கிறார்களோ அதற்கு தகுந்தவாறு மதிப்பீடு செய்தல் முக்கியசொற்கள் செயல்படுதல், பிரித்துக்காட்டுதல், காண்பித்தல், பாதித்தல், கவனித்தல், மாற்றியமைத்தல், செயல்படுதல், பின்பற்றுதல், முன்வந்து கேட்டல், தகுதியடைதல், கேள்விகள், திரும்ப சரிபார்த்தல், சேவையளித்தல், தீர்த்தல், உறுதி செய்தல் |
உடற்திறன் சார்ந்த திறமைகள் (Simpson, 1972) உடல் இயக்கம், ஒருங்கிணைத்தல், உடலின் இயங்கும் பகுதிகளை உபயோகித்தல் போன்றவைகளை உள்ளடக்கியது. இந்த திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு முறையான பயிற்சி தேவை. உடற்சார்ந்த திறன்களை அவற்றை செயல்படுத்தும் வேகம், கணக்கீடு, தொலைவு, செயல்முறைகள் போன்றவற்றை வைத்து கணக்கிடலாம். இந்த உடற்திறன் சார்ந்த மிக எளிய பழக்கவழக்கங்களிலிருந்து மிக சிக்கலான பழக்கவழக்கங்கள் வரை ஏழு முக்கிய பிரிவுகளாக கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வகை
|
உதாரணங்கள் மற்றும் முக்கியசொற்கள்
|
உணரும் திறன்
உணர்ச்சிகளை கொண்டு உடற்திறனை வழி நடத்துதல். உணர்ச்சிகளைத் தூண்டுதல், மற்றும் மொழிபெயர்த்தல் மூலம்
உடற்திறனை
வழிநடத்துதல் |
உதாரணங்கள்
மொழியற்ற தொடர்புகொள்ளுதலை கண்டுபிடித்தல். அதாவது பந்தினை எறிந்த பின்பு அது எங்கு விழும் என உத்தேசித்து பின் அந்த இடத்திற்கு சென்று பந்தினைப்பிடித்தல். உணவின் வாசனை மற்றும் ருசியினைக் கொண்டு அடுப்பின் எரியும் திறனைக் குறைத்தல். முக்கியசொற்கள் தேர்ந்தெடுத்தல், விளக்குதல், கண்டறிதல், வேறுபடுத்துதல், பிரித்தறிதல், கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், இணைத்தல் |
பொருத்துதல்
செயல்படுவதற்காக தயாராக இருத்தல். இத்திறன் செயல்படுபவரின் மனநிலை, உடல்நிலை மற்றும் உணர்ச்சிநிலை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு மனிதரின் இந்த மூன்று நிலைகளும் அம்மனிதர் பல்வேறு சூழ்நிலைகளில் வ்வாறு செயல்படுவார்கள் என்பதை தீர்மானிக்கின்றன |
உதாரணங்கள்
தயாரிக்கும் செயலில் உள்ள அடுக்கடுக்கான படிகளை அறிந்து கொண்டு செயல்படுதல். ஒருவருடைய திறமை மற்றும் அவரின் குறைகள் ஆகியவற்றை கண்டறிதல். ஒரு புதிய செய்முறையினை கற்றுக்கொள்ள விருப்பமளித்தல். குறிப்பு இந்த உடற்திறன் சார்ந்த செயலின் உட்பிரிவு, உணர்வுப்பூர்வ திறனின் பதிலளிக்கும் உட்பிரிவுக்கு நெருங்கிய தொடர்புடையது முக்கியசொற்கள் தொடங்குதல், காண்பித்தல், விளக்கமளித்தல், நகர்த்துதல், முன்னேற்றுதல், செயல்படுத்துதல், காண்பித்தல், தன்னார்வம் |
வழிநடத்திய பதிலளிப்பு
ஒருவரைப் பார்த்து செயல்படுதல் முயற்சித்தல் மற்றும் தவறு செய்தலின் மூலம் கற்றுக்கொள்ளுதல் கற்றலின் முதல் நிலையாகும். தொடர்ச்சியாக ஒரே செயலை செய்வதன் மூலம் அச்செயலை சரியாக செய்யமுடியும் |
உதாரணங்கள்
ஒரு கணக்கு சமன்பாட்டினை விளக்கமளித்தவாறு செய்தல். அறிவுரைகளைப் பின்பற்றி ஒரு மாதிரியினை வடிவமைத்தல். ஒரு போர்க் லிப்ட்டினை உயர்த்தும்போது கற்றுத்தருபவரின் கை அசைவுகளுக்கு பதிலளித்தல் முக்கியசொற்கள் நகல் எடுத்தல், பின்பற்றுதல், மீண்டும் செய்தல், பதிலளித்தல் |
செயல்படும் முறை
ஒரு சிக்கலான செயலை கற்றுக்கொள்ளும்போது, செயல்படும்முறை ஒரு நடுநிலையாகும். மாணவர் கற்றுக்கொண்ட செயல்கள் கற்றுக்கொண்டவரின் தன்னம்பிக்கையுடன், எளிதாக செய்யக்கூடிய பழக்கமாக மாறுகின்றன. |
உதாரணங்கள்
ஒரு தனிப்பட்ட கணினியினை உபயோகித்தல். ஒரு காரினை ஓட்டிச்செல்லுதல் முக்கியசொற்கள் ஒருங்கிணைத்தல், கணக்கிடுதல், கட்டுமானித்தல், பாகங்களை தனியாகப் பிரித்தல், வேகப்படுத்துதல், பொருத்துதல், அரைத்தல், சூடேற்றுதல், மாற்றியமைத்தல், அளத்தல், கலக்குதல், ஒருங்கிணைத்தல்,வரைதல் |
சிக்கலான அதீத பதிலளிப்பு
உடற்திறன் சார்ந்த திறன்களை முறையாக வெளிப்படுத்தும் திறமையில் சிக்கலான உடல் இயக்கங்கள் உள்ளன. உடற்திறனை செயல்படுத்தும் திறமையில் வேகமான, தெளிவான, அதிகமான ஒத்துழைப்புடன், குறைவான சக்தி செலவளிக்கும் உடல்இயக்கங்கள் தேவை. தயக்கமில்லாமல் உடற்செயலாற்றும் திறன், தன்னிச்சையான செயல் போன்றவற்றை பொறுத்து இந்த வகை உடற்திறன் செயல்பாடு அமைகிறது. எடுத்துக்காட்டாக டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாடும்போது அவர்களுடைய சத்தங்களை வெளிப்படுத்தி அவர்கள் திருப்தியினை வெளிப்படுத்துவார்கள். |
உதாரணங்கள்
ஒரு காரினை நெருக்கடியாக இணையான இடத்திலில் நிறுத்துதல். ஒரு கணினியினை மிகச்சரியாகவும், வேகமாகவும் இயக்குதல். பியானோவினை இசைக்கும்போது தன் திறமையினை வெளிப்படுத்துதல் முக்கியசொற்கள் ஒருங்கிணைத்தல், கட்டுதல், கணக்கிடுதல், கட்டமைத்தல், பிரித்தல், காண்பித்தல், வேகப்படுத்தல், பொருத்துதல், அரைத்தல், சூடேற்றுதல், மாற்றியமைத்தல், அளத்தல், கலக்குதல், ஒருங்கிணைத்தல், வரைதல் குறிப்பு முக்கிய சொற்கள் செயல்படும் திறனைப்போலவே இருந்தாலும் ஆனால் அவற்றின் துணைச்சொற்கள் செயல் வேகமாகவும், மிகத்துல்லியமாகவும், நன்றாகவும் செயல்படுவதை குறிக்கின்றன |
ஏற்றுக்கொள்ளுதல்
உடற்திறமைகளை நன்கு கற்றுக்கொண்டபின் ஒருவர் தங்களுடைய உடல் இயக்கங்களை சிறப்பு தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம் |
உதாரணங்கள்
எதிர்பாராத அனுபவங்களில் ஒருவரின் செயல்படும் திறன். அறிவுரைகளை கற்றுக்கொள்பவரின் தேவைக்கேற்ப மாற்றியமைத்தல். ஒரு செயலை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்துடன் இணைந்து வேலை செய்தல். முக்கியசொற்கள் ஏற்றுக்கொள்ளுதல், மாற்றுதல், மறுசீரமைத்தல், மறு ஒருங்கிணைத்தல், திருப்பிப்பார்த்தல், மாறுதல் |
ஆதாரம்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கேற்ப அல்லது சிறப்பான சிக்கலுக்கேற்ப புதிய உடல் இயக்கங்களை தானாகவே உருவாக்குதல். படைப்பாற்றல் அடிப்படையிலான நன்றாக திறமைகளை வளர்ப்பது கற்றலின் வெளிப்பாடாக கருதப்படுகிறது |
உதாரணங்கள்
புதிய தத்துவத்தை உருவாக்குதல். புதிய, சுருக்கமான பயிற்சியினை ஏற்படுத்துதல். புதிய உடற்பயிற்சிகளை வழக்கமாக்குதல் முக்கியசொற்கள் அடுக்குதல், கட்டமைத்தல், தொகுத்தல், உருவாக்குதல், கட்டுதல், உருவாக்குதல், வடிவமைத்தல், துவக்குதல், ஆதாரப்படுத்தல் |
இதர உடற்திறன் சாரந்த கற்றல் வகைகள்
முன்பே கூறியபடி உடற்திறன் சார்ந்த திறன்களை இக்குழு மற்றவர்களிடம் இருப்பது போல் ஒன்றாகத் தொகுக்கவில்லை. மேலே விளக்கப்பட்டுள்ளது சிம்சன் (1972) என்பவரால் விவாதிக்கப்பட்டது. இது மட்டுமன்றி இன்னும் இரண்டு பிரபலமான வகைகள் உள்ளன.
டேவ் (1975)
- காப்பியடித்தல் மற்றொருவரை கவனித்து பின் அவரைப்போல் நடப்பது. ஆனால் செயல்திறன் குறைந்த தரமுடையதாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு சித்திரத்தினை மற்றவர் வரைந்தது போல திரும்ப வரைவது
- மாற்றியமைத்தல் சில செயல்களை அறிவுரைகளைப் பின்பற்றி நடந்து பின் அதைப்போலவே பயிற்சி செய்வது. உதாரணமாக ஒருவர் தானாகவே ஒரு வேலை செய்வது பற்றி அதைப்பற்றிய பாடங்களை கவனித்தபின்பும் அவ்வேலையினைப் பற்றி படித்தபின்பும் அதே வேலை செய்து முடிப்பது.
- கணக்கிடுதல் மறுசீரமைத்து பின் சரியாக இருப்பது. சில குறைகள் வெளிப்படையாகத் தெரியும். உதாரணம்; ஒரு வேலையினை செய்து விட்டு திரும்பவும் செய்து பின் செய்த வேலை சரி என்று முடிவு செய்வது.
- ஒருங்கிணைத்தல் தொடர்ச்சியாக செயல்களை ஒருங்கிணைத்து அதன் உள்கட்டமைப்பிலும் இணைந்து செயல்படுவது. உதாரணம்; இசை, நாடகம், வண்ணம், ஒலியுடன் கூடிய ஒரு படக்காட்சியினை தயாரித்தல்
- தானாக அமைதல் ஒரு வேலையினை அதிகபட்ச திறமையுடன் செய்வது. அவ்வேலையினை அதற்கு மேல் செய்ய முடியாது என்ற அளவில் அதனை முடிப்பது. உதாரணம்; மைக்கேல் ஜோர்டான் கைப்பந்து விளையாடுதல், நான்சி லோப்பாஸ் ஒரு கோல்ப் பந்தினை அடிப்பது மற்றும் இதர இது போன்ற ஒருவர் தனித்திறமையுடன் செய்கிற செயல்கள்.
ஹாரோஸ், 1972
- பதிலளிக்கும் உடல் இயக்கங்கள் - கற்றுக்கொள்ளாத உடல் இயக்கங்கள்
- அடிப்படையான உடல் இயக்கங்கள் - அடிப்படையான உடல் இயக்கங்களான நடத்தல், பிடித்தல் போன்றவை
- உணருதல் - காட்சி, ஒலி, இயக்க அல்லது தொடும் தூண்டுதலுக்கேற்றவாறு பதிலளித்தல் அல்லது செயல்படுதல்
- உடற்திறமை - சக்திகேற்றவாறு உடற்கட்டினை வளரத்துக்கொள்ளுதல்
- நேர்மறையான உடல் இயக்கங்க்ள் - நல்ல உடல் மொழி அதாவது நல்ல உடல் இயக்கம் மற்றும் முகபாவனைகள்
புளூம்ஸின் மாற்றியமைக்கப்பட்ட வகைப்பாட்டியல்
லாரின் ஆண்டர்சன் எனும் புளும்ஸின் முன்னாள் மாணவர் புளூமின் கற்றலுக்கான அறிவு சார்ந்த வகைப்பாட்டியலை தொண்ணூறுகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தினார். அவற்றுள் மிக முக்கியமான இரண்டு 1. ஆறு வகைகளையும் தொழிற்பெயரிலிருந்து வினைப்பெயராக மாற்றியமைத்தல் 2. சிறிதளவு மாற்றியமைத்தல். இந்த புதிய வகைப்பாட்டியலானது மிகத்திறமையுடன் யோசிக்கும் அளவுக்கும், துல்லியமாகவும் இருக்கிறது.

Comments
Post a Comment