முழு தகவல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர்.
சம்பள உச்சவரம்பு தளர்த்தப்படும்.
ஊழியர்கள் குறைந்தபட்சமாக ரூ.8400ம், அதிகபட்சமாக ரூ.16,800 ம் போனசாக பெறுவார்கள். இதன் மூலம் 3,67,887 ஊழியர்கள் பயன் பெறுவார்கள். மொத்தம் ரூ.476 கோடியே 71 லட்சம் போனசாக வழங்கப்பட உள்ளது

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்