மதிய செய்திகள்

📡💥மதிய செய்திகள் 📡💥

          📡💥29\09\16📡💥


📡📡📡📡📡📡📡📡📡📡📡


💥📡📡💥📡💥📡💥📡💥📡


💥💥💥💥💥💥💥💥💥💥💥


💥விலை பேசப்படும் நீதி: தில்லியில் லஞ்சம் வாங்கிய நீதிபதியை கைது செய்தது சிபிஐ


புது தில்லி: தில்லியில் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதியை சிபிஐ கைது செய்துள்ளது.

தில்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, ரூ.4 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.




📡அணு ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் : தனிமைப்படுத்துப்படுவதால் விரக்தியில் பாக்., மிரட்டல்

இஸ்லாமாபாத்: சார்க் உச்சிமாநாட்டை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், போர் வந்தால் இந்தியா மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



📡உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 4,748 பேரும், இரண்டாவது நாளில் 6433 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று 31,726 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது




💥வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி : தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பட்டாசு தயாரிப்பில் உள்நாட்டு தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், உள்நாட்டு பட்டாசு விற்பனை பாதிக்கப்படுவதாக மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என்றும், தண்டனைக்குரிய செயல் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது




💥கபடியில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்

வியட்நாம்: ஆசிய கடற்கரை போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான கபடி போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 5-வது முறையாக தங்கம் வென்றது.

இறுதிப்போட்டியில் இந்தியா 41-31 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.




📡விமான போக்குவரத்து துறை இயக்குனருக்கு அபராதம் : பதில் மனு தாக்கல் செய்யாததால் நடவடிக்கை

மதுரை: பொதுநல வழக்கு ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாத விமான போக்குவரத்து துறை இயக்குனருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான சேவை மைய பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, மகேந்திரன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய விமான போக்குவரத்து துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 3 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாதது தெரிய வந்தது. பதில் மனு தாக்கல் செய்யாத விமான போக்குவரத்து துறை இயக்குனருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




💥ஆழம் பார்க்கும் திமுக; அதிருப்தியில் காங்கிரஸார்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்களை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், திமுகவினருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தத் தயங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர்.




📡கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம்: தலைவர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, தமிழர் தேசிய முன்னணி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.




💥சித்தேரி வனப்பகுதியில் நடுகற்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி : தர்மபுரி அருகே சித்தேரி வனப்பகுதியில் நடுகற்களை வரலாற்று ஆசிரியர்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளிவளவு என்ற இடத்தில் 3 நடுகற்களை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகரன் குழுவினர் மலைப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்



📡செங்கோட்டையில் ஆபத்தான நிலையில் அரசு ஆரம்ப பள்ளி கட்டிடம்

செங்கோட்டை : செங்கோட்டையில் ஆபத்தான நிலையில் உள்ள ஆரம்ப பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கோட்டை மேலூரில் கன்ணுப்புளிமெட்டு மெயின்ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 1885ம் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வந்தனர். இக்கட்டிடத்தின் பலவீனத்தை கருத்தில் கொண்டு கடந்த 2012ம் ஆண்டு கலெக்டர் நேரில் ஆய்வு செய்து இடியும் தருவாயில் உள்ள அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த கட்டிடத்தின் மேற்கூரையான ஓடுகளை மட்டும் அகற்றிவிட்டு அப்படியே விட்டுவிட்டனர்.



தற்போது இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் அதே பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் பயின்று வருகிறனர். இந்த கட்டிடம் மாணவ, மாணவியர்கள் கல்வி பயில போதுமானதாக இல்லை. மிகுந்த நெருக்கடியில் சிரமத்துடன் கல்வி கற்க வேண்டி உள்ளது. மேலும் இடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தை அப்புறபடுத்தாமல் அப்படியே உள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். பள்ளியில் கழிப்பிட வசதி, குழந்தைகள் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு அங்கு புதிய வகுப்பறை கட்டுவதுடன், கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமென மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




💥ரயில் டிக்கெட் விலையில் சலுகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் ரயில் டிக்கெட் விலையில் சலுகை பெற அவர்களுக்கு புதிதாக ஒரு அடையாள அட்டையை வழங்க உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.




💥நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுக்கு எதிராக இருப்பேன்: ராகுல் காந்தி

கவுகாத்தி: ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்காக அசாம் மாநிலம் கவுகாத்தி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் மற்ற அமைப்புக்களுக்கு எதிராக இருப்பேன் என்று கூறினார். நாட்டை காப்பதுதான் தான் என் வேலை என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் என் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.



📡20 ஓவா லஞ்ச வழக்கை விசாரிக்க ரூ.12.5 லட்சம் செலவு செய்த லோக்ஆயுக்தா

பெங்களூர்: பெங்களூரில் உள்ள மான்யதா டெக் பார்க் எதிரே பிரியாணி கடை நடத்தி வருபவரிடம் ரூ.20 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பற்றிய வழக்கை விசாரிக்க லோக்ஆயுக்தா ரூ.12.5 லட்சம் செலவு செய்துள்ளது.




📡நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் குடிநீர் பஞ்சம் : மக்கள் அவதி

குன்னூர்; நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால் பொதுமக்கள் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குன்னூர் நகராட்சிக்குட்பட 30 வார்டுகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் அணையில் வறட்சி காரணமாக 1 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 43.36 அடி இருக்க வேண்டிய தண்ணீரின் அளவு 1 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் குன்னூர் நகர பகுதிக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் வெகு தூரம் சென்று ஆற்றில் வரும் சுகாதாரமற்ற குடிநீரை கொண்டு வந்து பருகும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.





💥தெரு நாய்களைக் கொன்றவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்: பீட்டா வலியுறுத்தல்

கொச்சி: கேரள மாநிலம், கோட்டயத்தில், தெரு நாய்களைக் கொன்ற கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் இளைஞர் அணியினரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதோடு, அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கே.எம்.மாணியிடம் இந்திய விலங்கு நல அமைப்பு (பீட்டா) கோரிக்கை விடுத்துள்ளது




📡எல்லை பாதுகாப்பு விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. எல்லை பாதுகாப்பு தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 24 மணி நேரத்த்தில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளன.




💥வெறும் ரூ.1/-க்கு வரம்பற்ற 4ஜி தரவு : ஐடியா அதிரடி..!

சமீபத்திய நாள் வரையிலாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அந்நிறுவனம் வழங்கும் கவர்ச்சிகரமான மற்றும் மலிவான 4ஜி கட்டண திட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள் எங்கும் உலவின. ரிலையன்ஸ் ஜியோ விளைவால் மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களும் ரிலையன்ஸ் ஜியோவின் சவால் விடும் வகை சலுகைகளை எதிர்கொள்ள தங்களுக்கே சலுகைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கினர்.

ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன், ஐடியா என அனைத்து நிறுவனங்களும் இருக்கும் பயனர்கள் தக்கவைத்து கொள்ள தங்களது சொந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

அதேபோல், ஐடியா செல்லுலார் அதன் 4ஜி பயனர்களுக்கு மட்டுமே உரிய மிகவும் மாறுபட்ட வாய்ப்பை கொண்டு வர உள்ளது.

அந்நிறுவனம் ரூ.1/- என்ற அற்பமான ஒரு விலையில் பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி தரவு வழங்க உள்ளது. அது தொடர்புடைய திட்ட விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சார்ந்த தொகுப்பே பாருங்கள்.





📡முதல்வர் உடல்நலம் பெற நடிகர் சங்கம் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.




💥கவுகாத்தி கோர்ட்டில் ராகுல் ஆஜர்

கவுகாத்தி: ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதூறாக கருத்து கூறிய வழக்கில் கவுகாத்தி கோர்ட்டில் காங்., துணை தலைவர் ராகுல் ஆஜரானார்.




📡மெளன விரதம் இருக்கப் போகிறேன்.. டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் முழு மது விலக்கு கோரி காந்தி ஜெயந்தியன்று மெளன விரதம் இருக்கப் போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.






💥பிரேத பரிசோதனையின்போது தனியார் டாக்டர்.. ராம்குமார் தந்தை மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று, ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.






📡காவிரி விவகாரம் : டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் இரு மாநில அரசுகளின் கூட்டம் இன்று காலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் கூடியது. கர்நாடகா சார்பில் முதல்வர் சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல், தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவ் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் குழு பங்கேற்கிறது.




💥பெண் வேடமிட்டு, லாரி டிரைவர்களை மயக்கி கொள்ளையடித்த பலே கும்பல் கைது
தூத்துக்குடி: தமிழகத்தில் நான்கு வழிச்சாலையில் பெண் வேடமிட்டு கொள்ளையடித்த கும்பல் தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். மேலும் ஓருவரை தேடி வருகின்றனர்.




💥தூத்துக்குடியில் 'ஆபரேசன் சாகர் கவாச்': டம்மி ஆயுதங்களுடன் ஊடுருவிய 5 பேர் 'சிக்கினர்

தூத்துக்குடி: தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆபரேசன் சாகர் கவாச்சில் டம்மி ஆயுதங்களுடன் ஊடுருவிய 5 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.




📡குழந்தைகளுக்கு பணத்தை விட நேரத்தை செலவிடுங்கள்- பெற்றோர்களுக்கு ஹைகோர்ட் அறிவுரை

சென்னை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.





📡உள்ளாட்சித்
தேர்தல்.. சென்னை உட்பட 10 மாநகராட்சிகளுக்கான த.மா.கா வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வாசன்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார்.





💥பிரேத பரிசோதனைக்காக பிணத்தை பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற உறவினர்கள்: பீகாரில் சோகம்

பீகார்: பீகார் மாநிலத்தில் பிரேத பரிசோதனைக்காக இறந்த உடலை பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




📡திருவள்ளூர் மாவட்டத்தில் 40 போலி மருத்துவர்கள் கைது



திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 40 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் புதன்கிழமை கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ராபட் (40) கைது செய்யப்பட்டார்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரால் 40 போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.




💥வத்தலக்குண்டு அருகே டெங்குவால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கூலித் தொழிலாளி ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர். வத்தலக்குண்டு அருகே உள்ள சாலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பெரியசாமி இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு பெரியசாமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சாலைபுதூர் கிராமத்தில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




📡திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும்: ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜாவஹிருல்லா திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின் ஜவாஹிருல்லா சென்னையில் அளித்த பேட்டியில்,

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.




💥தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது: சித்தராமய்யா திட்டவட்டம்

டெல்லி: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று டெல்லியில் உமாபாரதி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கூறியுள்ளார். 2015-16ம் ஆண்டு நீர் பருவ ஆண்டு மிக மோசமானதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




📡காஷ்மீர் தனிநாடாக வேண்டும்! தமிழகத்தில் உலாவரும் காணொளிப் பிரசாரம்!?

"நம்மிடம் இருக்கும் தேசப்பற்று, நாம் எல்லோரும் இந்தியர்கள் என்கிற கௌரவத்தை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுத் தெளிவான பார்வையைச் செலுத்துங்கள். காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என்கிற கோரிக்கையின் நியாயங்கள் புரியும்" என்ற மையப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒரு காணொளிக் காட்சி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களிடையே பரவி வருகிறது.




💥உரி தாக்குதலுக்கு பதிலடி: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்


புது தில்லி: உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.




📡ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சட்டக்கல்லூரி மாணவர்களை சேர்க்காததை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சட்டக்கல்லூரி மாணவர்களை சேர்க்காததை கண்டித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




💥காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்.. இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி சூடு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதியின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

நேற்று மாலை, சிறிய ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




💥மீன்பிடிப்பதற்காக பெருஞ்சாணி அணை திறப்பு..! : விவசாயிகள் புகார்

விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத போது பெருஞ்சாணி அணையிலிருந்து மீன்பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கன்னியாக்குமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் மீன்பிடிப்பதற்காக பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.




📡33 கோடி இட்லி, 17 கோடி சப்பாத்தி, 14 கோடி கலவை சாதம்: அம்மா உணவகங்கள் சாதனை

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இதுவரை 33.60 கோடி இட்லிகள், 13.9 கோடி கலவை சாதங்கள், 17.38 கோடி சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





📡கர்நாடகா தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த தமிழக அரசு வலியுறுத்தல்

புதுடில்லி: தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அதேநேரத்தில், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் செயல்நீதிமன்ற அவமதிப்பு என தமிழக அரசு கூறியுள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி டில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. உண்மை நிலையை அறிய மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி ஆராய வேண்டும்.





💥இந்திய விமான படை தாக்குதல்: 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி

புதுடெல்லி: இந்திய விமான படை நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





📡கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்

கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்வது உறுதியானது. மாவட்ட அளவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று தொகுதிகள் (வார்டுகள்) அறிவிக்கப்படும்.





💥திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் 5 வீடுகளில் 41 சவரன் நகை கொள்ளையடிப்பட்டுள்ளது.மேலும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை போயி உள்ளது. அல் அமின் நகரில் நடந்த கொள்ளை குறித்து இனாம்குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.





📡அரியலூர் குண்டர் சட்டத்தில் அடைத்து உத்திரவு

அரியலூர் மாவட்டம் பல்வேறு வழிபறி சம்பவங்களில் தொடர்புடைய  திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பூச்சு என்கிற சுதாகரை குண்டர் சட்டத்தில் அடைத்து மாவட்ட ஆட்சியர் சரவணவேல் ராஜ் உத்திரவு




💥சீரியல் கில்லர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே (2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை) தந்தை, நண்பர்கள் உள்பட 8 பேரை கொன்று புதைத்த இளைஞர் கைது .. உடல்களை தோண்டி எடுக்க போலீஸார்  முயற்சி..




📡உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திக்க போகிறோம்: திருமாவளவன் பேட்டி




💥கெயில் விவகாரத்தில் சுமூக தீர்வு எடுக்க மத்திய அரசு நடவடிக்கை: மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழிக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்




📡கவிஞர் அண்ணாமலை மரணத்தில் சந்தேகம்!

இச்சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் அண்ணாமலையின் குடும்பத்தினர். அவருடைய தலையில் ஏற்பட்டுள்ள காயம் இயற்கையானது அல்ல என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடும்பப் பிரச்சனை காரணமாக அண்ணாமலை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம்!




💥முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட த.மா.கா.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு. அக்கட்சித் தலைவர் வாசன் இப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் போட்டியிடும் 169 வேட்பாளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளன!




💥உள்ளாட்சித் தேர்தல்:
ரேஷன் கார்டு வழங்கல் நிறுத்தம்!

அடுத்த மாதம் 17, 19 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது!



📡சீனா, தைவானை புரட்டிப் போட்ட 'மேகி'!

'மேகி' புயல் சீனாவிலும் தைவானிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்களில் சிலர் பலி; மேலும் பலரைக் காணவில்லை. 3 மாடிக் கட்டடம் உள்பட சில கட்டடங்களும் இடிந்து விழுந்ததாகத் தகவல்!



💥கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் யுவி?

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட்டில் கே.எல். ராகுலுக்குக் காயம். இதையடுத்து, 2வது டெஸ்ட் போட்டியில் கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் இடம் கிடைக்கப் போவதாகத் தகவல்!



📡இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பை!

இந்தியாவின் பணக்கார நகரங்களின் பட்டியலை ஒரு அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், ரூ.54.12 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது மும்பை. டெல்லி, பெங்களூரு முறையே 2, 3வது இடங்களைப் பிடித்துள்ளன. சென்னையின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.9.9 லட்சம் கோடியாம்!


💥செங்கல்பட்டில் இடி தாக்கி ஒருவர் பலி!

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நேற்று இரவு பயங்கர மின்னல்-இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. செங்கல்பட்டை சேர்ந்த மணிகண்டன் என்ற 20 வயது இளைஞர் இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது




📡தங்கம் விலை சிறிது உயர்வு!

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,952
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,616
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.31,570
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.49.20
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.45,965




💥இன்றும் உயர்வுடன்
தொடங்கிய பங்குச் சந்தைகள்

வார வர்த்தகத்தின் 4வது நாளான இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 181.31 புள்ளிகள் உயர்ந்து 28,474.12.தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 55.50 புள்ளிகள் அதிகரித்து 8,800.65.





💥ராணுவ உயர்அதிகாரி ரன்பீர்சிங் பேட்டி டெல்லியில் செய்தியாளர்கிடம் அளித்த பேட்டியில் கடந்த சில நாட்களில் பாகிஸ்தான் 20 க்கும் மேற்ப்பட்ட முறையில் ஊடுருவல் செய்ய முயன்றததாகவும் , உளவு துறையின் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி முகாம்களை அழித்ததாகவும் , எந்த சூழ்நிலைகளையும் இந்திய ராணுவம் சந்திக்க தயாராகவும் உள்ளதாக தெரிவித்தார்.


📡💥📡💥📡💥📡💥📡💥📡

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்