தமிழகம் 60
தமிழ்நாடு : 60 ஆண்டு... 60 நிகழ்வுகள்...! 1956 - சுமார் 200 மக்களை மருதையாற்றங்கரையின் மண்ணில் புதைத்த அரியலூர் ரயில் விபத்து.தமிழக வரலாற்றில் மிகப்பெரும் ரயில் விபத்துகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. 1957 - தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராகக் காமராசர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன் பொறுப்பேற்றார். உள்ளாட்சி இலாகா அவருக்கு ஒதுக்கப்பட்டது. 1958 - தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் காமராசர் ஆட்சியில் அமலுக்கு வந்தது. அதன்படி இரண்டடுக்கு கொண்ட உள்ளாட்சி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1959 - தத்துவங்களையும், அரசியலையும் தமிழ் சினிமாவில் தன் பாடல்வரிகளின் வழியாகப் பேசிய பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார் தனது 29 வயதில் மறைந்தார். 1960 - தமிழக நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1962 - கல்வி அறிவு தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவைத்த 'மதிய உணவுத் திட்டம்' காமராசரால் அமல்படுத்தப்பட்டது. 1963 - இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த நிலையில். ஆங்கிலமே இந்திய ஆட்சி மொழியாகத் தொடர்...