Posts

Featured post

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

Image
புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்: பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு,பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி பாரதிதாசன் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு. அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு,பிசிராந்தையார். அறிஞர் அண்ணா - ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன் ராதா, தம்பிக்கு, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம்,நல்ல தம்பி. கலைஞர் மு.கருணாநிதி - குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை கண்ணதாசன் -ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான் காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை புலவர் குழந்தை - ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம் சுரதா - தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை வாணிதாசன் - கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம். நாமக்கல் கவிஞர் - மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம். ...

பொருந்தாத சொல்லை கண்டறிதல்

Image
பொருந்தாத சொல்லை கண்டறிதல் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். இப்பகுதியில் ஐந்து வினாக்கள் கேட்கப்படும். (எ.கா) மெய், வாய், கண், கன்னம் மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும். மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும். மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன் முக்கனி - மா, பலா, வாழை

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

Image
டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில் ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அதற்கு இணையான தமிழ் சொல்லை தேர்ந்தெடுக்க கேள்விகள் கேட்கப்படும். Accident    -  நேர்ச்சி Acknowledgement Card    -   ஒப்புகை அட்டை Admission     -   சேர்க்கை Agency    -   முகவாண்மை Agent    -   முகவர் Allergy    -    ஒவ்வாமை Assurance   -   காப்பீடு Attendance Register    -   வருகைப் பதிவேடு Attestation     -   சான்றொப்பம் Automobile     -   தானியங்கி Bench      -   விசிப்பலகை Binding     -  கட்டமைப்பு Bona fide certificate    -   ஆளறி சான்றிதழ் Central Government    -  நடுவண் அரசு chalk piece    -   சுண்ணக்கட்டி Champion   -   வாகை சூடி Company    -   குழும...

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

Image
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்தேர்வு செய்தல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும். ளகர-லகரப் பொருள் வேறுபாடு அளகு - காட்டுக்கோழி அலகு - அளவைக்கூறு அள் - கூர்மை, காது அல் - இரவு அளை - குகை, கல் அலை - திரி, கடல் அலை இளை - மெலிதல் இலை - மரத்தின் இலை உளை - மயிர் உலை - நீர் உலை களம் - போர்க்களம் கலம் -கப்பல்  கள் - தேன், பானம் கல் - பாறை, கல்வி காளை - எருது காலை - பொழுது குளவி - பூச்சி குலவி - குலவுதல் குளம் - நீர்நிலை குலம் - இனம் கொல் - கொலை கொள் - பெறுதல் கூளி - பூதம் கூலி-சம்பளம் தோள் - உறுப்பு தோல் - சருமம் பள்ளி - பாடசாலை பல்லி-விலங்கு வாளி - நீர் இறைக்கப்பயன்படுவது வாலி - சுக்ரீவனின் தமயன் வாள் - கருவி வால் - விலங்கின் வால் வேள் - இறைவன் வேல் - கருவி வளி - காற்று வலி - வேதனை விளை - விளைச்சல் விலை - மதிப்பு எள் - பயிர்வகை எல் - சூரியன், வெளிச்சம் தா...

ஒரெழுத்து ஒரு மொழி பொருளறிதல்

Image
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தமிழ் ஒரெழுத்து ஒரு மொழி TNPSC – வினாத்தாள்களில் ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல் பகுதியில் தலா மூன்றுக் கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.  இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம். ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம் இ- சுட்டெழுத்து, இரண்டில...
Image
நடப்பு நிகழ்வுகள் 80 வினாக்கள் & விடைகள் 01) கன்னியாகுமரியில் சமூக சேவகி மேதா பட்கர் துவக்கிய பிரச்சார யாத்திரையின் பெயர் என்ன ? விடை -- NashaMukt Bharat Yatra  (Addiction free India) . 02) ஐ. நா. பருவநிலை மாற்றம் விருது - 2016 பெற்றுள்ள இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் எது ? விடை – Swayam Shikshan Prayog . 03) சர்வதேச சிறுவர்கள் உரிமை பற்றி ஐ.நா.வில் இரண்டு முறை உரையாற்றிய இந்திய சிறுமி யார்? விடை – Anoyara Khatun ( மேற்கு வங்காளம் ) . 04 ) பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க நேசனல் புக் டிரஸ்ட் துவக்கிய திட்டம் என்ன ? விடை – Mahila Lekhak Protahan Yojana . 05) தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் ( NATGRID ) தலைமை செயல் அதிகாரி யார் ? விடை – அசோக் பட்நாயக் . 06) இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் யார் ? விடை – குருபிரசாத் மொஹாபத்ரா  . 07) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ? விடை – SURREAL . 08) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ? விடை – POST TRUTH . 09) OXFORD ...
Image
மருத்துவ விடுப்பு குறைந்த பட்சம் 2 நாட்கள் துய்க்கலாம் -RTI பதில்